ஜப்பானிய வடிவமைப்பு கலைஞர் கெங்கோ குமாவுடன் OPPO இணைந்து ‘Milan Design Week’ நிகழ்வில் பன்முகத்தன்மையான மைல்கல்லை உருவாக்குகிறது

Share with your friend

கெங்கோ குமா மூங்கில் வளையத்தை உருவாக்கி, ‘இலகுரக வடிவத்துடன் சிம்பனி அலையை உருவாக்குகிறார்’

உலகின் முன்னணி ஸ்மார்ட் சாதன உற்பத்தியாளரும் புத்தக்கா கண்டுபிடிப்பாளருமான OPPO, ஜப்பானிய வடிவமைப்புக் கலைஞர் கெங்கோ குமாவுடன் (Kengo Kuma) இணைந்து மூங்கில் வளையத்தை உருவாக்கியுள்ளது:  இலகுரக வடிவத்துடன் சிம்பனி அலையை உருவாக்குகிறது. பல்வகை உணர்வு (multi-sensory) கொண்ட இதன் நிறுவலானது, ‘படைப்பாற்றல் மிக்க இணைப்புகள்’ எனும் எண்ணக்கருவுக்கு அமைய, இசை, வடிவமைப்பின் புதுமை, தொழில்நுட்ப ஆற்றல், பயனர் அனுபவத்துடன் நேரத்தையும் இடத்தையும் உணர்வை உருவாக்கி, இத்தாலியின் மிலானின் Cortile dei Bagni (கோர்டைல் ​​டீ பாக்னி) முற்றத்தில், மிலான் வடிவமைப்பு வாரம் (‘Milan Design Week’) இடம்பெறும் காலம் வரை, செப்டம்பர் 19 வரை காட்சிக்காக வைக்கப்படவுள்ளது.

இந்த மைல்கல் ரீதியான திட்டமானது, கெங்கோ குமா மற்றும் OPPO வின் மூங்கில் வளைய கண்காட்சியின் ஒரு பரிணாமமாகும். இது 2019 இலண்டன் வடிவமைப்பு விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மூங்கில் மற்றும் காபன் பைபர் மூலம் ஆக்கப்பட்ட இலகுரக மற்றும் வலுவான கட்டமைப்பை, மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான இணக்கமான உறவை கற்பனை செய்து, ஆராய்ந்து உருவாக்கப்பட்டதே இவ்வமைப்பாகும். இவ்வாண்டு, OPPO வின் பரீட்சார்த்த நிறுவலானது, ஜப்பானிய வயலின் கலைஞர் மிடோரி கொமாச்சி (Midori Komachi) இசையமைத்த ஆர்கெஸ்ட்ரா (orchestral) இசைத் தொடருக்கு, இசையால் உணர்வுகளை வெல்லும் வகையில், முன்னோடியான தொழில்நுட்பத்தில் அமைக்கப்படுகிறது.

இந்த இசையானது, பருவங்களின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டதுடன், கட்டமைப்பு வழியாக நகர்ந்து பொதுமக்களை அதனை சுற்றி வலம்வரும் வகையில், அது செவிவழி கதைகளை பேசுகிறது. மாற்றமடைந்து வரும் இசை, மிடோரியின் வயலினின் ஒலியை ஒருங்கிணைக்கிறது (1920 இல் மிலானில் அமைக்கப்பட்டு காபன் பைபர் மூலம் மேம்படுத்தப்பட்டது) O Relax ஆனது, OPPO வின் டிஜிட்டல் சுகவாழ்வு செயலியாகும். இது உலகளாவிய ரீதியில் ஐஸ்லாந்தின் ரேக்காவிக், சீனாவின் பீஜிங், ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட மனதிற்கு ஆறுதலளிக்கும் இயற்கை மற்றும் நகர ஒலிகளை வழங்குகிறது.

OPPO இலண்டன் வடிவமைப்பு நிலையத்தின் (London Design Centre) தலைவர், Jintong Zhu இது தொடர்பில் தெரிவிக்கையில், “OPPO மனிதனை மையமாகக் கொண்ட தரக்குறியீடாகும், மக்களுக்காக புதுமைகளைச் செய்வதில் எமது கவனம் உள்ளது. இயற்கையையும் கலாச்சாரத்தையும் தடையின்றி ஒருங்கிணைப்பதில் பெயர் பெற்ற ஒரு வடிவமைப்பாளரான கெங்கோ குமாவுடன் மீண்டும் கூட்டிணைவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். ‘தொழில்நுட்பம் ஒரு கலை வடிவமாக’ எனும் தத்துவக் கோட்பாடுகளையும், ‘மனிதகுலத்திற்கான தொழில்நுட்பம் மூலம் உலகிற்கு அன்பை வழங்குதல்’ எனும் எமது தரக்குறியீட்டின் கொள்கைகளின் அடிப்படையில், எமது அன்றாட வாழ்க்கைக்கு பெறுமதியை வழங்க, தொழில்நுட்பத்தையும் வடிவமைப்பையும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நாம் ஒன்றிணைத்து நிரூபிக்கிறோம்.” என்றார்.

மூங்கில் மற்றும் காபன் பைபர் வளையங்களிலிருந்து வடிவமைக்கப்பட்ட இந்நிறுவலின் நெய்யப்பட்ட அமைப்பு – OPPO London Design Centre இன் ஆராய்ச்சியிலிருந்து உருவானது. கட்டமைக்கப்பட்ட ஒலித் தொழில்நுட்பங்கள் வழியாக இசை பயணிக்கும்போது இது ஒரு இசைக்கருவியாக மாறுகிறது. புதிய haptic motors, MEMS speaker strips, exciters உள்ளிட்ட புதுமையான தொழில்நுட்பங்கள், வயலினின் அதிர்வு மற்றும் ஒரு இசைக் கருவியின் விளைவை எதிரொலிக்கும் ஒரு மட்டிட முடியாத தளம் மற்றும் உச்ச அதிர்வெண்களை உருவாக்க ஒன்றிணைந்து செயற்படுகிறது.

வடிவமைப்புக் கலைஞர் கெங்கோ குமா இது தொடர்பில் தெரிவிக்கையில், “நான் வடிவமொன்றை வடிவமைக்கும்போது, அடர்ந்த ஒலியை (silhouette) விட தாளம் (rhthm) மற்றும் தொனியை (tone) வடிவமைப்பதில் எனக்கு ஆர்வம் உள்ளது. அத்துடன் சமகால இசையானது, வடிவமைப்புக் கலையில் புதிய தாளங்கள் மற்றும் தொனிகளை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி பல பாடங்களை வழங்குகிறது. பார்வையாளர்களின் பார்வை மற்றும் ஒலியியல் அனுபவங்களை இணைக்கும் வடிவமைப்புக் கலையில் புதிய தாளங்கள் மற்றும் தொனிகளுக்கான ஆய்வுகளில் இந்த பார்வையாளர் அரங்கும் ஒன்றாகும்.” என்றார்.

மிலான் வடிவமைப்பு வாரத்திற்குப் பின்னர், OPPO அதன் மூங்கில் வளையத்தை இத்தாலியின் ட்ரென்டினோவில் உள்ள (Arte Sella Park) ஆர்டே செல்லா பூங்காவிற்கு அதனை நன்கொடையாக அளிக்கும். அது ஒரு சமகால கலை அருங்காட்சியகமாகும், இயற்கை பொருட்களால் ஆக்கப்பட்டுள்ள இது, (Sella) செல்லா பள்ளத்தாக்கு மலைப்பகுதியினை பின்னணியில் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.


Share with your friend