சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 ஆம் திகதி; ஒரு நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் அதே வேளையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெண்களின் அசாதாரண சாதனைகளை பிரதிபலிக்கும் நாளாகும்.
![](https://eyeviewsl.com/wp-content/uploads/2022/04/The-beneficiaries-of-the-Batik-Training-programme-1024x766.jpeg)
ஜோன் கீல்ஸ் பவுண்டேஷன் (ஜேகேஎப்) – ‘எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்’ என்ற குழுவின் கூட்டாண்மை சமூக பொறுப்பு பார்வையுடன் இணைந்த 6 மையப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் பாலின வலுவூட்டலை உருவாக்குவதற்கு தன்னை அர்ப்பணித்துள்ளது. ஜேகேஎப் இன் பல்வேறு திட்டங்கள் பல பின்தங்கிய சமூகங்களை குறி இலக்காக கொண்டிருக்கும் அதே வேளையில், பாலின வலுவூட்டுதல் என்பது ஒரு குறுக்குவெட்டு கருப்பொருளாகும்.
2022 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதியன்று பெண்கள் தொழில் மற்றும் வர்த்தக சபை ஏற்பாடு செய்த ‘பிரேக் த பயஸ் பொர் பெட்டர் டுமாரோ’ என்ற தலைப்பில் நடைபெற்ற மகளிர் தலைமைத்துவ மன்றத்தில் பேசிய சிஎஸ்ஆர் மற்றும் ஜேகேஎப் இன் தலைவர் கார்மெலின் ஜெயசூர்யா, ‘பெண்கள் பாதுகாப்பாகவும், தன்னம்பிக்கையாகவும், நிதி ரீதியாகவும் ஸ்திரமாக இருக்க அதிகாரம் அளிக்கப்படும்போது, ஏற்படும் சமூக-பொருளாதார தாக்கம் அவர்களுக்கான பலன்களாக மட்டுமல்லாமல் அவர்களின் குழந்தைகள், குடும்பம் மற்றும் சமூகத்திற்கும் பலனளிக்கிறது. எனவே, எங்கள் திட்டங்கள் பெண்களுக்கான திறன்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் சந்தை வாய்ப்புகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகின்றன, மேலும் ஒரே மாதிரியான பாலின சார்புகள், பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் போன்ற ஆழமான வேரூன்றிய சிக்கல்களைச் சமாளிக்க வலுவான சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குகின்றன.’
ஜோன் கீல்ஸ் பிரஜா சக்தி போன்ற ஜேகேஎப் இன் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், பல குறு, சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் – குறிப்பாக பெண்கள் தலைமையிலான நிறுவனங்கள் – நிதி, மதிப்புச் சங்கிலிகள் மற்றும் சந்தைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதில் துணைபுரிகின்றன.
ஃபவூண்டேஷனின் கல்வித் தூணின் கீழ் – உயர்கல்வியைத் தொடர்வதற்கு பெண்களை ஆதரிப்பதும், அவர்களின் தொழிலை மேம்படுத்துவதற்கான திறன்களைக் கொண்டு அவர்களை மேம்படுத்துவதும் ஒரு முக்கிய குறிக்கோளாகும்.
‘ஜோன் கீல்ஸ் ஆங்கில மொழிப் புலமைப்பரிசில் திட்டம்’ என்பது தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களின் ஆங்கிலத் தொடர்பு, தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் மென் திறன்களை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டது, இதில் 17,700க்கும் அதிகமான பெண்கள் நேரடியாகப் பயனடைகின்றனர்.
ஜேகேஎப் இன் ‘ஸ்கில் இன்ட் புரோக்ரஸ்’ (ஸ்கிப்) திட்டம், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட வழங்குனர்களை தொற்றுநோய்-சவால்கள் நிறைந்த பொருளாதாரத்தில் போட்டியிடும் வகையில் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விநியோகச் சங்கிலி மேலாண்மை முயற்சியாகும்.
ஜேகேஎப் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை எதிர்த்து விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம் சமூக கட்டமைப்புகளை வலுப்படுத்துகிறது. ‘புரொஜெக்ட் வேவ்’ (கல்வி மூலம் வன்முறைக்கு எதிராக செயல்படுதல்) என்பது குழு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சியை உள்ளடக்கிய ஒரு நீண்ட கால திட்டமாகும்.
ஜேகேஎப், ‘எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்’ என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ், நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள வேளையில், பாலின வலுவூட்டுதல் மற்றும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சுதந்திரமாக இருப்பதற்கான வாய்ப்புகள் என்பது, திறன்கள், அறிவு, ஆகியவற்றுடன் பெண்களை வலுவூட்ட மேற்கொள்ளப்படும் வளர்ச்சி முயற்சிகளின் ஒருங்கிணைந்த மற்றும் குறுக்கு வெட்டுக் கருப்பொருளாகத் தொடரும்.
வாழ்வாதார மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதாரம் என்பவை ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் கவனம் செலுத்தும் ஆறு துறைகளில் மூன்றாகும் – கொழும்பு பங்குப்பரிமாற்றத்தில் இலங்கையின் பெரியளவிலான நிறுவனமாக பட்டியலிடப்பட்ட கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி (ஜேகேஎச்) இன் துணை நிறுவனமாகும். 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடாத்தும் ஜோன் கீல்ஸ் குழு, 2020 ஆம் ஆண்டில் வணிகத்தில் காலடி வைத்து இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களித்த 150 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது. 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு ஜோன் கீல்ஸ் குழுமம் எல்.எம்.டி இதழால் கடந்த 16 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று பெயர் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையூம் கொண்ட ஜே.கே.எச் ஆனது ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக ‘எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்’ நோக்கினை நோக்கி பயணிப்பதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு ஊக்கியாக ‘பிளாஸ்டிசைக்கிள்’ ஊடாக செயற்படுகின்றது.