‘இலங்கையில் ஏறக்குறைய பாதிக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஏற்கனவே அவசர உதவி தேவைப்படுகிறது. 4.8 மில்லியன் சிறுவர்களின் கல்வி, ஏற்கனவே இரண்டு வருடங்கள் இடைநிறுத்தப்பட்ட கற்றல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை வருகை தொடர்ந்து ஆபத்தில் உள்ளது. தற்போதைய நெருக்கடியால் சிறுவர்களின் கல்வி பல வழிகளில் தடைபட்டு வருகிறது—சிறுவர்களுக்கு நெருக்கடிக்கு முன்பு வழங்கப்பட்ட சூடான மற்றும் சத்தான பாடசாலை உணவு இனி கிடைக்காது….’ என்று யுனிசெஃப் இன் தெற்காசியாவிற்கான பிராந்திய இயக்குனர் ஜோர்ஜ் லாரியா-அட்ஜீ ஆகஸ்ட் 2022 இல் இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர் கூறினார்.
பொருளாதார நெருக்கடியின் தொடக்கத்தில் ஜோன் கீல்ஸ் குழுமத்தால் உருவாக்கப்பட்ட பல-முனை கொண்ட நெருக்கடி நிலைக்கான பதில் முன்முயற்சி, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகிய மூன்று முக்கிய பகுதிகளின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை உள்ளடக்கியது. உடல்நலம் மற்றும் போஷாக்கின் கீழ் ஒரு முக்கிய திட்டமான ஜோன் கீல்ஸ் பாடசாலை உணவுத் திட்டம் (பாசல் திரிய) கல்வி அமைச்சுடன் இணைந்து 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் திகதி தேசிய சிறுவர்கள் தினத்தை நினைவுகூரும் வகையில் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டில், நாடு முழுவதும் பல இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்த திட்டம் கருவியாக உள்ளது.
ஜோன் கீல்ஸ் பாடசாலை உணவுத் திட்டம் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டாண்மை சமூக பொறுப்பு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஃபவுன்டேஷன் ஆல் (ஜே.கே.எஃ) குழுமத்தின் வணிகங்களான சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் (எலிஃபன்ட் ஹவுஸ்), சினமன் ஹோட்டல் & ரிசார்ட்ஸ், ஜெய்கே மார்க்கெட்டிங் சர்வீசஸ் (கீல்ஸ்) மற்றும் ஜோன் கீல்ஸ் புரப்பொர்ட்டிஸ் ஆகியவற்றின் தீவிர ஈடுபாட்டுடன் இயக்கப்படுகிறது. தொடங்கப்பட்டதில் இருந்து, இத்திட்டம் பாடசாலை மாணவர்களுக்கு சத்தான உணவை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் பாடசாலை வருகையை அதிகரிப்பதற்கும், கல்வி மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளில் பங்கேற்பதற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. கீல்ஸ் தனது ‘மீல் கார்டு’ திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தங்கள் மக்கள்-நிதி-வழங்கும் தளம் மூலம் அளித்து வரும் பங்களிப்புகள் மற்றும் அவர்களின் செயல்படுத்தும் பங்காளரான சர்வோதய உட்பட பலமான பங்காளர்களின் கூட்டு முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் தொடக்கத்திலிருந்து பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் கிழக்கு, தெற்கு மற்றும் மேல் மாகணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பாடசாலைகளில் இருந்தும் மத்திய,வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேல் மாகணங்களில் 34 முன்பள்ளிகளில் இருந்தும் 4,187 மாணவர்களுக்கு 469,812 சத்தான உணவுகளை வழங்கியுள்ளது. மொத்தம் 52 மில்லியனுக்கு அதிகமான முதலீடு செய்யப்பட்ட இத்திட்டத்தில் சத்தான மற்றும் சமச்சீரான உணவைத் தயாரிப்பதற்கு உதவும் முகமாக 10 பாடசாலைகளில் சமயலறைகளை நிர்மாணித்தல் அல்லது புதுப்பித்தல் மற்றும் உபகரணங்களை உள்ளடக்கி மற்றும் 31 சமுதாயத் தோட்டங்கள் என்பன அமைக்கப்பட்டுள்ளன.
‘சிறுவர்கள் பாடசாலையில் அதிக சுறுசுறுப்பாக உள்ளனர். மேலும் பாடசாலையில் முறையான விளையாட்டு நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்றாலும், அவர்களின் இடைவேளையின் போது விளையாட்டுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்பதை நாங்கள் அவதானித்துள்ளோம்.’ என்று கொழும்பு 02 மரியம் பெண்கள் பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
பெற்றோர் மற்றும் பாடசாலைகளுக்கான உணவு வழங்கும் ஆயிஷா ரில்வான் கூறுகையில், போதிய உணவு இல்லாததால், குறைவான மாணவர்களே பாடசாலைக்குச் செல்கின்றனர். ஆனால், அவர்கள் ஜோன் கீல்ஸ் பாடசாலை உணவுத் திட்டத்தில் இருந்து சத்தான உணவைப் பெறத் தொடங்கியதிலிருந்து, பாடசாலையில் ஒரு வேளை உணவை உண்ண முடிந்ததன் விளைவாக சிறுவர்களின் பாடசாலை வருகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை நாங்கள் அவதானித்துள்ளோம்.
ஜே.கே.எஃப் இந்த திட்டத்தின் வாழ்வாதாரம் மற்றும் நிலையான மாற்றத்தை மேம்படுத்த பல்வேறு பேண்தகமை நடவடிக்கைகளை இணைத்துள்ளது. குறிப்பாக பாடசாலை சமையலறைகளை வழங்குதல் மற்றும் பாடசாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலம், சமூகங்களை அதிக செயல்திறன் மற்றும் தன்னம்பிக்கையுடன் மேம்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்), கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயங்குகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் குழுமம் 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு, எல்.எம்.டி இதழால் கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று தரப்படுத்தப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவின் ‘நிறுவன அறிக்கையிடல் மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’யில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை, ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையும் கொண்ட ஜே.கே.எச், ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக அதன் கூட்டாண்மை சமூக பொறுப்பாக ‘எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்’ என்பதை நோக்கி பயணிக்கின்றதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு வினையூக்கியாக ‘பிளாஸ்டிக்சைக்கிள்’ ஊடாக செயற்படுகின்றது.