சிஐசி ஹோல்டிங்ஸின் துணை நிறுவனமான லிங்க் நேச்சுரல், இலங்கையின் சாகசப்பயணியும் மலையேறுபவருமான ஜொஹான் பீரிஸின் சமீபத்திய சாகசப் பயணமான வட அமெரிக்காவின் மிக உயரமான டெனாலி மலையை ஏறி முடிக்கும் முயற்சிக்குத் தனது பூரண ஆதரவை வழங்க இருக்கின்றது. இந்தக் கைகோர்ப்பை அறிவிக்கும் நிகழ்வு, அண்மையில் இல. 6 மைட்லாண்ட் கிரசென்ட், கொழும்பு 7 இல் நிறுவனத்தின் புதிதாகத் தொடங்கப்பட்ட அனுபவ விளைவு நிலையமான “ஸ்வஸ்தா பை லிங்க் நேச்சுரல்” இல் நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாதனையை அடைவதற்கு மிகக் குறைவாகவே இருந்தது. எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாகத் தொட்ட இரண்டாவது இலங்கையர் என்ற பெருமையை ஜொஹான் பீரிஸ் 2018 ஆம் ஆண்டு மே மாதம் பெற்றார், அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு அச்சாதனையை நிலைநாட்டுவதற்கு அவருக்கு ஒரு சில அடிகளே இருந்த நிலையில் அம்முயற்சி தோல்வியில் முடிவுற்றது. அவர் ஏற்கனவே கிளிமஞ்சாரோ மலை, நேபாளத்தில் உள்ள காலாபட்டர் மலை மற்றும் சுவிட்சர்லாந்தின் மோன்ட் பிளாங்க் மலை மற்றும் அவுஸ்திரேலியாவின் கொஸ்கியுஸ்கோ மலை ஆகியவற்றின் சிகரங்களையும் எட்டியிருக்கிறார். தெனாலி மலை என்பது வட அமெரிக்காவின் மிக உயரமான மலைச் சிகரமாகும், இதன் உச்சி கடல் மட்டத்திலிருந்து 20,310 அடிகள் உயரத்தில் உள்ளது, மேலும் நிலத்தின் அடிப்பகுதியிலிருந்து உச்சி வரையான உயரத்தில் 18,0000 அடிகளைக் கொண்ட இம்மலை உலகின் மிக உயரமான மலையாகவும் அறியப்படுகிறது.
ஜொஹான் பீரிஸ் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கையில், “இந்தப் புதிய சுற்றுப்பயணத்தையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் எனது இலக்கை அடைவதற்கு எனக்கு உதவுகின்ற லிங்க் நேச்சுரல் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கின்றேன். நான் லிங்க் தயாரிப்புகளை நீண்ட காலமாகப் பயன்படுத்துகிறேன், மேலும் எனது பயணத்தின் போது ஏற்படும் அசௌகரியங்களைப் போக்குவதற்கு ஒவ்வொரு தயாரிப்பின் ஆற்றலிலும் எனக்குப் பூரணமான நம்பிக்கை இருக்கின்றது. சவாலான குளிர் காலநிலைகளில் எனது நோயெதிர்ப்புச் சக்தியை மிகவும் உயர் மட்டத்தில் பேணுவதற்கு சமஹன் மிகவும் உதவியாக இருக்கும். அந்த நேரத்தில், தசை மற்றும் மூட்டு வியாதிகளை எதிர்த்து Musclegard போராடும், அத்துடன் தசைகளின் பூரண குணத்திற்காகவும் செயற்படும், அதே வேளையில் எனக்குத் தீவிர காலநிலை நிலைமைகளின் காரணமாக ஏற்படும் தசைப்பிடிப்புகளைத் தடுப்பதற்கு Crampgard Plus உதவும்.”
லிங்க் நேச்சுரல் புராடக்ட்ஸின் சந்தைப்படுத்தல் தலைவர் ரொமேரோ லிண்டன் கருத்துத் தெரிவிக்கையில், “ஜொஹான் பீரிஸ் இலங்கையின் ஒரு ஐகான் ஆவார் – இவர் இணையற்ற சாகசங்கப் பயணங்களை மேற்கொண்டு இலங்கையை உலக வரைபடத்தில் தொடர்ந்து முதன்மைப்படுத்துகின்ற மலையேறுபவர். அவர் மீண்டும் ஒருமுறை அனைத்து இலங்கையர்களுக்கும் பெரிய கனவு காண்பதற்கு உதவுகிறார், மேலும் நமது மனங்களை ஒருமுகப்படுத்திக் கடினமாக உழைத்தால் எந்தச் சாதனையையும் எம்மால் எட்ட முடியும் என்பதை எமக்குக் காட்டுகிறார். உலகத் தரம் வாய்ந்த இலங்கை வர்த்தக நாமமாக, லிங்க் நேச்சுரல் வட அமெரிக்காவின் மிக உயரமான சிகரமான டெனாலி மலையுச்சியை அடைய முயற்சிக்கும் ஜொஹானின் சமீபத்திய பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் அடைகின்றது.”
லிங்க் நேச்சுரல் என்பது ஆயுர்வேத மருந்து வகைகளுக்கு மேலதிகமாக மூலிகைசார் சுகாதாரப்பராமரிப்பு மற்றும் மூலிகைசார் தனிநபர் பராமரிப்பு ஆகிய உற்பத்திகளின் முன்னணி உற்பத்தியாளர் மற்றும் சந்தைப்படுத்துநர் ஆகும். மக்களுக்கு ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளுடன் மிகவும் உற்சாகமான வாழ்க்கையை வாழ உதவுகின்ற பாதுகாப்பான, பயனுறுதிமிக்க, உயர்தர மூலிகைசார் சுகாதாரப்பராமரிப்பு உற்பத்திகளை நுகர்வோருக்கு வழங்குவதற்காக இந்த நிறுவனம் ஆயுர்வேதத்தின் ஞானத்தைச் சமீபத்திய விஞ்ஞான முறைமைகள் மற்றும் இன்றைய தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் இணைத்தல் என்ற உயரிய தத்துவம் மூலம் வழிநடாத்தப்படுகின்றது. அதன் பிரதான வர்த்தகச் சின்னமான லிங்க் சமஹன், 100% இயற்கையான, நம்பத்தகுந்த மூலிகைசார் பானமாகும், இது 14 நம்பகமான ஆயுர்வேத மூலிகைசார் உள்ளடக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரியமாக ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்கும், தொடர்ந்து உட்கொள்ளும் போது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இதை நுகர்வோரின் விருப்பத்தைப் பொறுத்து சூடான நீர், தேநீர் அல்லது காபியில் வசதிக்கேற்ப உட்கொள்ளலாம்.
லிங்க் நேச்சுரல் என்பது சுதந்த, ஸ்வஸ்தா அமுர்த, ஸ்வஸ்தா திரிபலா, மஸ்ல்கார்ட், எஸ்பி தைலம், கேஷா மற்றும் பல நம்பகமான மற்றும் நேர சோதனை செய்யப்பட்ட தயாரிப்புகளை வழங்கும் நிறுவனமாகவும் உள்ளது. இந்தத் தயாரிப்புகள் தலைமுறை தலைமுறையாக நுகர்வோருக்கு முழுமையான ஆரோக்கியத்தை வழங்கியுள்ளன. எர்த் எசென்ஸ் என்பது மூலிகைசார் தனிப்பட்ட சுகாதாரப்பராமரிப்புத் தயாரிப்புகளின் ஒரு முழுமையான உள்ளடக்கமாகும், மேலும் இது சில்லறைச் சந்தையில் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாகும்.