இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த நிதி சேவை வழங்குநரான HNB FINANCE PLC, தனது முல்லைத்தீவில் உள்ள தனது கிளையை புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த முயற்சி, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த நிதி சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்வதற்கும் அணுகலை மேம்படுத்துவதற்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இந்த இடமாற்றம் பிரதிபலிக்கிறது. இந்த புதிய HNB FINANCE முல்லைத்தீவு கிளை முல்லைத்தீவு பிரதான வீதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய கிளை திறப்பு நிகழ்வு HNB FINANCE PLC முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சமிந்த பிரபாத் தலைமையில் நடைபெற்றதுடன், இந்த நிகழ்விற்கு சிரேஷ்ட முகாமைத்துவம் பிரிவு மற்றும் எம்பிலிபிட்டிய கிளை ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கக் கடனுக்கான பெரும் தேவை காணப்படுவதால், HNB FINANCE ஆனது முல்லைத்தீவு கிளையில் புதிய தங்கக் கடன் நிலையத்தையும் அமைத்துள்ளது. HNB FINANCE தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மாறுபடும் பல தங்கக் கடன் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இவற்றில் தங்கக் கடன், தங்கம் வாங்குவதற்கான முதலீட்டுத் திட்டமான Gold Loan மற்றும் VIP Gold Loan ஆகியவை சிறப்பாக அறிமுகப்படுத்தப்படலாம். HNB FINANCE Gold Loan சேவையானது குறைந்தபட்ச வட்டியுடன் மூன்று நிமிடங்களில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு பவுன் தங்கத்திற்கான அதிக முன்பணத் தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த புதிய தங்கக் கடன் சேவை அலகு, நம்பகமான, பாதுகாப்பான பரிவர்த்தனையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு, பகுதி பகுதியாக செலுத்தும் திறனுடன் சிறந்த தீர்வாக இருக்கும்.
“வங்கி சாரா நிதி நிறுவன (Non-bank financial institution – NBFI) துறையில் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான நிதி சேவை வழங்குநராக HNB FINANCE ஐ நிர்வகிப்பதே எங்கள் மூலோபாய அணுகுமுறை. முல்லைத்தீவில் கிளையை இடமாற்றம் செய்வதன் மூலம், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதும் அணுகலை மேம்படுத்துவதும் எங்கள் குறிக்கோள். உயர்தர நிதி சேவைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வாடிக்கையாளர் உறவுகளை வழங்குவதில் நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம். வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்வதற்கான எங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு முல்லைத்தீவு கிளை ஒரு சான்றாக செயல்படுகிறது,” என HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறினார்.