தனியார் மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு இல்லங்களின் சங்கத்தின் புதிய தலைவராக பொறியாளர் ஆனந்த குருப்புராச்சி தெரிவு

Share with your friend

தனியார் மருத்துவமனைகள் மற்றும் வைத்திய பராமரிப்பு இல்லங்களின் சங்கம் (APHNH) அண்மையில் கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுகாதாரத் துறை மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு அதன் பங்களிப்பை மேலும் மேம்படுத்த அதன் சமீபத்திய வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM) ஒரு புதிய பணியாளர் சபையை தேர்ந்தெடுத்தது.

இதுவரை தலைவராக இருந்த ஹேமாஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டொக்டர் லக்கித் பீரிஸின் சேவைக் காலம் முடிவடைந்துள்ள நிலையில் அவரது வெற்றிடத்திற்கு பன்னிப்பிட்டிய தனியார் மருத்துவமனையின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளரும், பொறியியலாளருமான ஆனந்த குருப்பு ஆராச்சி தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பராமரிப்பு இல்லங்கள் சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, துணைத் தலைவர்களாக – திருமதி தேசமான்யா இந்திராணி பெர்ணான்டோ (புதிய பிலிப் மருத்துவமனை), டொக்டர் ருவன் சேனதிலக்க (ஆசிரி மருத்துவமனை) மற்றும் வைத்திய நிபுணர் உபாலி பனகலா (கிங்ஸ் மருத்துவமனை), செயலாளராக – டொக்டர் சுனில் ரத்னபன்னாரிய (ஆசிரி மருத்துவமனை), உதவி செயலாளராக – டொக்டர் கார்த்திகா கதிரேசன் (லங்கா மருத்துவமனை), பொருளாளராக – தினேஷ் ரணவீர (ரோயல் மருத்துவமனை) மற்றும் உதவி பொருளாளர் – திரு. ரவின் விக்கிரமசிங்க (ருஹூன மருத்துவமனை) 2021/23க்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். மேலும், 12 பேர் கொண்ட குழு புதிய நிர்வாக சபையாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த பொதுக்குழுவில், கடந்த ஐந்து தசாப்தங்களாக நாட்டில் சுகாதாரத் துறையை மேம்படுத்த தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பராமரிப்பு சங்கம் மேற்கொண்ட நட்பு பாதையை வலுப்படுத்துவதில் இதற்கு முன்னர் இருந்த அதிகாரிகள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சங்கத்தின் தலையீட்டின் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளவும், கொவிட்-19 நோயாளிகளுக்கு இடைநிலை பராமரிப்பு வழங்கவும் அனுமதித்துள்ளது, இது சமீபத்திய வரலாற்றில் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுகாதார நெருக்கடியை எதிர்த்துப் போராட பொதுமக்களுக்கு உதவியாக உள்ளது.

சங்கம் அதன் உறுப்பினர்களை கணிசமாக அதிகரிக்க முடிந்தது மற்றும் 2019 உடன் ஒப்பிடும்போது 2020/21 நிதி ஆண்டில் அதன் உறுப்பினர் கட்டணத்தை இரட்டிப்பாக்க முடிந்தது. மேலும், APHNHக்குள் ஒரு வலுவான நிர்வாக வியூகமொன்றை உருவாக்க முடிந்ததுடன் சங்கத்தின் வளர்ச்சிக்கான திட்டத்தையும் உருவாக்கியது. இதன் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த தனியார் சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்கு சங்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.

‘கொவிட்-19 தொற்று நோய்களின் போது எழுந்த சவாலான காலங்களில், நாட்டிற்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கி, முன்னோக்கி நகர்த்துவதில் அவர்களின் மதிப்புமிக்க சேவைக்காக முன்னாள் தலைவர் மற்றும் அதிலிருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.’ என புதிய தலைவர் டொக்டர் ஆனந்த குருப்புஆராச்சி கூறினார்.

‘குறிப்பாக மனித வளத் துறையை மேம்படுத்துவதில், அதாவது பயிற்சியை அதிகரிப்பதில் திறமையான பணியாளர்களை ஈர்ப்பது மற்றும் தக்கவைப்பது போன்றவற்றை எமது சங்கம் மற்றும் அதன் உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பதற்கு புதிய ஊழியர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.’ என அவர் மேலும் தெரிவித்தார். 25 வருடங்களுக்கு முன்பு பன்னிப்பிட்டிய தனியார் மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பொறியாளர் ஆனந்த குருப்புஆராச்சிக்கு பல தசாப்த கால சுகாதார நிர்வகிப்பு அனுபவம் உள்ளது. அவர் நீண்ட காலமாக தனியார் சுகாதார ஒழுங்குமுறை கவுன்சில் (PHSRC) மற்றும் APHNH உறுப்பினராக பணியாற்றியுள்ளார். APHNHஇன் துணைத் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக் குழுவை வழிநடத்தினார், இது பல குறிப்பிடத்தக்க சிறந் முயற்சிகளை முன்னெடுக்க முடிந்தது.


Share with your friend