தமது வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய மொபைல் போன்களை வெகுமதியாக வழங்கும் Airtel Sri Lanka

Share with your friend

இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனமான Airtel Lanka நிறுவனம், 2022 டிசம்பர் 31 வரை ஒவ்வொரு நாளும் 50,000 ரூபா பெறுமதியான மொபைல் ஃபோன் ஒன்றை வெல்வதற்கான வாய்ப்பை வழங்கும் ‘Airtel Smartphone Bonanza’ வேலைத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. Smart தொலைபேசிகளின் இறக்குமதி முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு நன்மைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினசரி 300 ரூபாவுக்கு மேல் ரீசார்ஜ் செய்யும் ஒவ்வொரு எயார்டெல் வாடிக்கையாளரும் அதிர்ஷ்டக் குலுக்கலுக்கு தகுதி பெறுவார்கள், இவ்வாறு தகுதி பெற்ற வாடிக்கையாளர்கள் தினசரி குலுக்கல் முறையில் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

‘எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கான அதிகபட்ச மதிப்பை வழங்குவதற்கான ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் Airtel Sri Lanka கவனத்தில் கொள்கிறது குறிப்பாக அநேகமானவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, எங்கள் வலைப்பின்னலை வலுப்படுத்தவும், எங்கள் தயாரிப்புகளை மீள்வடிவமைக்கவும், எங்கள் பாவனையாளர்களின் கைகளில் எப்போதும் அதிக மதிப்பை வழங்குவதற்காக எங்கள் முழு வணிகத்தையும் மறுசீரமைப்பதே எங்கள் நோக்கம். Airtel Smartphone Bonanzaவின் அறிமுகமானது, நாங்கள் அறிமுகப்படுத்தும் மதிப்பு சார்ந்த சந்தை புத்தாக்கங்களின் சமீபத்திய திட்டங்களின் ஒன்றாகும், மேலும் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் பங்கேற்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.’ என எயார்டெல் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷிஷ் சந்திரா தெரிவித்தார்.

வாரத்தின் ஒவ்வொரு நாளும் இந்த Airtel Smartphone Bonanza திட்டத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு எயார்டெல் குழுவினர் நேரடியான அழைப்பை மேற்கொண்டு வாழ்த்துக்களையும் தெரிவிப்பார்கள்.

இலங்கையின் தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் இதேபோன்ற வலையமைப்புகளில் வாடிக்கையாளர்களுக்காக புதிய தயாரிப்புகளை முன்கூட்டியே அடையாளம் கண்டுகொண்டு அதனை வழங்கும் வகையில் வரையறையற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் எந்த வலைப்பின்னலுக்கும் வரையறையற்ற அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் எயார்டெல் ஆகும். Airtel Freedom அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், Airtel நிறுவனம் அதன் பாவனையாளர்களுக்கு அவர்களின் Voice Calls, SMS மற்றும் Data தேவைகளுக்கு அதிகபட்ச சலுகைகளை வழங்குகிறது. ஏனைய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை விட சிறந்த சேமிப்பு வாய்ப்புகளையும் வழங்குகிறது. Unlimited Package களை அறிமுகப்படுத்தியதன் மூலம், இலங்கையில் புரட்சிகரமான தொலைத்தொடர்பு சேவை துறையில் Airtel Lanka முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend