துவாரகா Dawn & Dusk விருந்து மண்டபத்தை திறந்து வைப்பதன் மூலம் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சிறப்புமிக்க தருணமாக மாற்றியமைக்கிறது

Share with your friend

கொழும்பின் முன்னணி வட மற்றும் தென்னிந்திய தூய சைவ உணவகங்களில் ஒன்றான துவாரகா, இல்லத்திருமணங்கள் முதல் பெருநிறுவன விழாக்கள் வரை, ஒவ்வொரு தருணத்தையும் சிறப்புமிக்க நிகழ்வாக மாற்றியமைப்பதற்காக கொழும்பு 4, மரைன் டிரைவில் Dawn & Dusk என்ற விருந்து மண்டபத்தை திறந்து வைத்துள்ளது.

Dawn & Dusk என்பது இந்து சமுத்திரத்தை நோக்கியதாக அமைந்த ஒரு நேர்த்தியான, சூழவும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட விருந்து மண்டபமாகும். அதி நவீன, பல மாடி கட்டிடத்தின் பிரதான மண்டபம் முதல் தளத்தில் அமைந்துள்ளது.  உயரமான கூரையுடன், தூண்கள் இல்லாமல் அமைக்கபட்டுள்ளதால், விருந்தினர்கள் உள்ளே சென்றவுடன் விசாலமான உணர்வைப் பெறுவார்கள். இந்த மண்டபம் மரைன் டிரைவில் பெரிய கண்ணாடி ஜன்னல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், விருந்தினர்கள் பரந்த இந்தியப் பெருங்கடலின் நீல நீரப்பரப்பையும்; மற்றும் அழகான சூரிய அஸ்தமனக் காட்சியையும் கண்டுகளிக்கலாம். பிரதான மண்டபத்தில் 220 நபர்கள் வரை வட்ட மேசை அமைப்பு இருக்கைகளுடன் அமரக்கூடியதாக இருக்கும் அதேநேரம், பொதுவாக தமிழ் திருமண விழாக்களில் காணப்படுவது போல 500 நபர்கள் வரை திரையரங்கு பாணி அமைப்பு இருக்கைகளில் அமரலாம். தரைத் தளத்தில் அமைந்துள்ள விசாலமான புஃபே பகுதியில், உணவு மற்றும் பானங்களை பரந்தளவில் வைக்கலாம். திருமண பரிவாரங்களுக்கு அதிக வசதியை வழங்க, மண்டபத்தில் இரண்டாவது மாடியில் இணைக்கப்பட்ட குளியலறைகள் கொண்ட இரண்டு விசாலமான அறைகள் உள்ளன, அவை மணமகனும், மணமகளும் தங்கள் திருமணநாளில் உடை மாற்றும் மற்றும் ஒப்பனை செய்து கொள்ளும் அறைகளாகப் பயன்படுத்தலாம். மேலதிகமாக Dawn & Dusk 80 நபர்கள் வரை அமரக்கூடிய ஒரு தனிப்பட்ட விழா அறையையும் கொண்டுள்ளது இது பிறந்தநாள், ஆண்டுவிழாக்கள் மற்றும் நிறுவன நிகழ்வுகள் போன்ற சிறிய விழாக்களுக்கு மிகவும் பொருத்தமானது.

பிரமாண்டமான இந்த திறப்பு விழா குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய துவாரகா இயக்குனர் பி. ராமநாதன், ‘துவாரகாவின் பயணத்தின் சமீபத்திய அத்தியாயமான Dawn & Dusk விருந்து மண்டபத்தை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது கொழும்பின் புதிய விருந்து மண்டபமாகும், மரைன் டிரைவின் மத்தியில் கடலின் அற்புதமான காட்சிகளை கண்டுகளிக்கக்கூடியதாக இது அமைந்துள்ளது, உலகின் சிறந்த அனுபவத்திற்கு இணையான அனுபவத்தை மக்களுக்கு நாம் வழங்குகிறோம். அற்புதமான வாடிக்கையாளர் சேவை மற்றும் சுவையான உணவு, பானங்கள் மூலம் ஒவ்வொரு நிகழ்வையும் மறக்கமுடியாத ஒன்றாக மாற்ற எங்கள் குழு முழுமையாக தயாராக உள்ளது. அது ஒரு பெரிய குடும்ப திருமண விழாவாக இருந்தாலும் அல்லது ஒரு சிறிய நிறுவன விழாவாக இருந்தாலும், Dawn & Dusk ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சிறப்புமிக்க தருணமாக மாற்றியமைக்கிறது’ என்று கூறினார்.

தூய சைவ வட மற்றும் தென்னிந்திய உணவு வகைகளை துவாரகா குழுவின் நிபுணத்துவம்மிக்க சமையல் கலைஞர்கள் Dawn & Dusk இன் அனைத்து விழாக்களுக்கும் வழங்குகிறார்கள். எல்லா நேரங்களிலும் நிகழ்வுகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இலவச WiFi மற்றும் பாதுகாப்புடன் கூடிய விசாலமான பார்க்கிங் வசதிகள் ஆகியவையும் உள்ளன.

வட மற்றும் தென்னிந்திய தூய சைவ உணவுகளுக்குப் பிரபலமான துவாரகா, 2015 ஆம் ஆண்டில் இல 37, ஜெயா வீதி, கொழும்பு 4 இல் தொடங்கப்பட்டது, அதன் இரண்டாவது கிளை இல 10, பழைய குவாரி வீதி, கல்கிசையில் 2020 இல் திறக்கப்பட்டது. இரண்டு கிளைகளும் முழுமையாக குளிரூட்டப்பட்ட மற்றும் அனைத்து நவீன வசதிகளுடன், 100 நபர்கள் வரை எளிதில் அமரக்கூடிய விசாலமான உணவு உண்ணும் பகுதிகளை உள்ளடக்கியது. வாடிக்கையாளர்களுக்கு தரமான இந்திய உணவு வகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, தென்னிந்திய மற்றும் வட இந்திய உணவு வகைகளில் நிபுணத்துவம் பெற்ற சமையல் கலைஞர்கள் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் வரவழைக்கப்பட்டு பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். கொழும்பில் உள்ள அனைத்து பீட்ஸா ரசிகர்களுக்கும் 6 சுவையான சைவ டாப்பிங் விருப்பங்களுடன் தயாரிக்கப்படும் “D&D Pizza” அதன் உணவுப்பட்டியலில் மிக சமீபத்திய சேர்க்கையாகும்.

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான உணவு வகைகளை துவாரகாவின் சிறப்பு டெலிவரி சேவை மற்றும் Uber, PickMe போன்ற சேவைகளைப் பயன்படுத்தி வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

Dawn & Dusk மற்றும் துவாரகா பற்றிய கூடுதல் தகவல்களை 0777-208938 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமும், www.instagram.com/dawn_and_dusk_pvt_ltd> www.instagram.com/dwaraka.colombo                          www.instagram.com/pizzabydnd இன் Instagram பக்கங்களைப் பின்தொடர்வதன் மூலமும் பெறலாம்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply