கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) மட்டக்குளி காக்கை தீவில் ‘அழகிய கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்’ என்ற திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. கடல் மாசுபாட்டைத் தடுப்பதற்கான MEPA-வின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் இந்த சிறப்புத் திட்டம், இலங்கையின் அழகிய கடற்கரையைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வு, இலங்கையின் மேல் மற்றும் தென் மாகாணங்களில் 124 இடங்களை உள்ளடக்கிய முக்கிய கடற்கரைகளை சுத்தம் செய்யும் திட்டத்தின் உத்தியோகப்பூர்வ ஆரம்பத்தைக் குறித்தது. Clean Ocean Force உடன் கைகோர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளாக Coca-Cola நாளாந்தம் சுத்தம் செய்யும் முயற்சிகள் மூலம் காக்கை தீவு கடற்கரைக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
இந்தத் திட்டம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான Coca-Cola வின் நீண்டகால அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. தூய்மையான கடற்கரைகள் சுற்றுலாத் தளமாக இலங்கையின் கவர்ச்சியை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாசற்ற சூழலில் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.