மூலிகையுடனான தனிநபர் பராமரிப்புப் பொருட்கள் உற்பத்தியில் முன்னோடியாகத் திகழும் சுதேசி இன்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி (The Swadeshi Industrial Works PLC) நிறுவனம், தமது காபன் வெளியீட்டைக் (Carbon Footprint) குறைப்பதற்காகவும், இலங்கையின் வலுசக்திக்கான ஈடுகொடுக்கும் திறனை வலுப்படுத்துவதற்காகவும் சூரிய மின்சக்தி கட்டமைப்பைப் பயன்படுத்தி தூய்மையான உற்பத்திக்கான (Cleaner Production) வலுசக்தியை வழங்க உள்ளது.

சுதேசி நிறுவனம் தமது கூரை மீதான சூரிய மின்சக்தி கட்டமைப்பை செயற்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளது. இது வருடாந்தம் 712,800 KWH மின்சக்தியை உற்பத்தி செய்யக்கூடியது. இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 498,960 kg காபனீரொட்சைட்டு (CO₂) வெளியீடு குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டமைப்பானது, சூழல் மாசுகளை குறைப்பதற்கும், மின்சக்திச் செலவுகளைக் குறைப்பதற்கும், நாடு புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கு மாற்றம் பெறுவதற்கு ஆதரவளிப்பதற்குமான சுதேசியின் நிலைபேறான மூலோபாய நடவடிக்கையின் ஒரு நடவடிக்கையாகும்.
இலங்கையின் பெருநிறுவனங்கள் CO₂ வெளியீட்டை குறைப்பதற்கும், வர்த்தகநாம நற்பெயரை வலுப்படுத்துவதற்கும் கூரை மீதான சூரிய மின்சக்தித் தொகுதிகளை வெற்றிகரமாக நிறுவி வருகின்றன.
“சுதேசியின் நிலைபேறான செயற்பாட்டுப் பயணத்தில், இன்று ஒரு நடைமுறை ரீதியான படி முன்னெடுக்கப்படுகிறது. எமது சூரிய மின்சக்தித் திட்டமானது, எரிபொருள் மின்சாரத்தில் தங்கியிருப்பதைக் குறைப்பதோடு, செயற்பாட்டுச் செலவுகளையும் குறைக்கும். அத்துடன் பாரிய அளவான காபன் வெளியீட்டை குறைக்கவும் வழிவகுக்கும். பொதுமக்கள் இதன் தாக்கத்தை காணும் வகையில் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகளை நாம் வெளியிடவுள்ளோம்.” ‘சுதேசி கொஹொம்ப மிஹிந்தலா சத்காரய’ எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
100% முழுமையான இலங்கை நிறுவனமான சுதேசி, தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூக பொறுப்புணர்வு (CSR) திட்டங்களைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. சுதேசி கொஹொம்ப வர்த்தகநாமமானது, இயற்கை அன்னையை பராமரித்தல், கலாசார விழுமியங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி, நிலைபேறான திட்டங்களை நிறைவேற்றுதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. சுதேசி நிறுவனம் முன்னெடுத்து வரும் சமூக நலன் சார்ந்த முயற்சிகளில், ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’ ‘சுதேசி கொஹொம்ப மிஹிந்தலா சத்காரய’ உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள ஆலயங்களின் வருடாந்த ஒளியேற்றல் நிகழ்வுகள், வேம்பு மர நடும் பிரசாரங்கள், இலங்கையில் வரட்சியான பகுதிகளில் உள்ள சமூகங்களுக்கும், பாடசாலைகள், விகாரைகளுக்கு நீர்த் தொட்டிகளை நன்கொடையாக வழங்குதல், கொஹொம்ப பேபி குழந்தைகள் பராமரிப்பு பொருட்களை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை குறிப்பிடலாம்.
“இலங்கையின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் உற்பத்தி நிறுவனம் எனும் வகையில், எமது அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருட்களின் செயற்பாட்டு நன்மைகள் தொடர்பில் நுகர்வோர் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென சுதேசியாகிய நாம் விரும்புகிறோம். நாம் இலங்கையின் சிறந்த மூலிகைகளை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்பதுடன், பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் விரிவாக ஆய்வுக்குள்ளாக்கப்படுகின்றன. தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக முழுமையாக சோதனைக்கு உள்ளாக்கப்படுவதுடன், எமது தயாரிப்புகள் யாவும் 100% சைவத்தை அடிப்படையாகக் கொண்டவையுமாகும். அவை விலங்குகள் மீது சோதிக்கப்படவில்லை என்பதுடன் விலங்குகளுக்கு கொடுமை அளிப்பதிலிருந்து விலக்கப்பட்டவையாகும். சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், கொஹொம்ப பேபி ஆகியன இங்கிலாந்தின் Vegetarian Society, UK யின் அங்கீகாரம் பெற்றவையாகும்.” இந்த உறுதிமொழியானது, நிறுவனத்தின் முன்னோக்கிய சிந்தனை நடைமுறைகளுக்கும், நுகர்வோருக்கு நெறிமுறை ரீதியானதும் சூழல் நட்புரீதியானதுமான தெரிவுகளை மேற்கொள்ள உதவுவதற்கான எமது விருப்பத்திற்கும் சான்றாக அமைகின்றன. நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்புகளின் ஆரோக்கியம் மற்றும் சூழல் தாக்கம் தொடர்பில் கருத்தில் எடுத்து செயற்படுவதோடு, தொடர்ச்சியாக அவற்றிற்கு முன்னுரிமையளித்து வருகின்றது. உண்மையான இலங்கை நிறுவனமான சுதேஷி, கடந்த 80 வருடங்களில் தொழில்துறையில் முந்திக் கொண்டு தனது பெயரில் பல்வேறு முதலாவது சாதனை உரிமை கோரல்களுக்கு உரித்துடையதாக திகழ்கின்றது.
இலங்கையிலுள்ள மூலிகை கொண்ட தனிநபர் பராமரிப்பு பிரிவில் முன்னோடியும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான Swadeshi Industrial Works PLC நிறுவனம் 1941 இல் கூட்டிணைக்கப்பட்டது. சுதேசியின் முன்னணி வர்த்தகநாமங்களில் சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி, பேர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹொம்ப ஹேண்ட் வொஷ், கொஹொம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிறீம் ஆகியன உள்ளடங்குகின்றன. சுதேசி நிறுவனம், இலங்கையில் முதலிடத்திலுள்ள மூலிகை வர்த்தகநாமமான ‘கொஹொம்ப ஹேர்பல்’ மற்றும் பாரம்பரிய அழகு வர்த்தகநாமமான ராணி சந்தனம் ஆகியவற்றை தயாரித்து சந்தைப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து சுதேசி தயாரிப்புகளும் இலங்கையின் சுகாதார அமைச்சின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுதேசி தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் அனைத்து வாசனைத் திரவியங்களும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச வாசனை சங்கத்தினால் (IFRA) சான்றளிக்கப்பட்டுள்ளதுடன், ISO 9001 – 2015 தரச் சான்றிதழின் அடிப்படையில் அவை உற்பத்தி செய்யப்படுகின்றன.