தேசிய தொழிற்துறை வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2024 இல் Lumala வெற்றி வாகை சூடியது

Share with your friend

புகழ்பெற்ற வர்த்தக நாமமான Lumala இன் உற்பத்தியாளரும், நிலைபேறான போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாகவும் திகழும் சிட்டி சைக்கிள் இன்டஸ்ட்ரீஸ் மெனுபக்ஷரிங் (பிரைவட்) லிமிடெட், அண்மையில் நடைபெற்ற தேசிய தொழிற்துறை வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2024 இல் பாரியளவு இதர தொழிற்துறை பிரிவில் சிறந்த தேசிய தொழிற்துறை வர்த்தக நாமம் எனும் விருதை சுவீகரித்தது.

சிட்டி சைக்கிள் இன்டஸ்ட்ரீஸ் மெனுபக்ஷரிங் (பிரைவட்) லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் ஆசிம் மிஃப்லல் மற்றும் தொழிற்சாலை பொது முகாமையாளர் ரஞ்ஜித் சிறிவர்தன ஆகியோர் விருதைப் பெறுகின்றனர்.

தொழிற்துறை மற்றும் தொழில்முயற்சியாண்மை விருத்தி அமைச்சின் கீழ் காணப்படும் இலங்கை தொழினுட்ப அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு பெப்ரவரி 21ஆம் திகதி ஈகிள் லேக்சைட்டில் நடைபெற்றதுடன், இதில் பரந்தளவு தொழிற்துறைகளின் முன்னோடிகள் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வின் விசேட அதிதியாக பிரதமர் ஹரினி அமரசூரிய கலந்து கொண்டார்.

சிட்டி சைக்கிள் இன்டஸ்ட்ரீஸ் மெனுபக்ஷரிங் (பிரைவட்) லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் ஆசிம் மிஃப்லல் கருத்துத் தெரிவிக்கையில், “சைக்கிள்கள் மற்றும் e-சைக்கிள் தொழிற்துறையில் எமது அணியின் அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் புத்தாக்கத்துக்கான ஒப்பற்ற செயற்பாடு போன்றவற்றுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இந்த விருது அமைந்துள்ளது. அத்துடன், வாடிக்கையாளர்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் உறுதி செய்துள்ளது. பல சவால்களுக்கு மத்தியில் உலகத் தரம் வாய்ந்த, சூழலுக்கு நட்பான நடமாடல் தீர்வுகளை உற்பத்தி செய்து இலங்கையின் தொழிற்துறைக் கட்டமைப்பில் பங்களிப்பு வழங்குவதில் நாம் மிகவும் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த கௌரவிப்பினூடாக, எதிர்காலத்தில் சிறப்பு மற்றும் நிலைபேறாண்மை போன்ற இலக்குகளை நிவர்த்தி செய்து முன்னேறுவதற்கான வலிமை வழங்கப்படுகின்றது.” என்றார்.

இலங்கையின் சமூக பொருளாதார கட்டமைப்பில் Lumala இன் கீர்த்தி நாமம் ஆழமாக பதிந்துள்ளது. வாழ்க்கையின் சகல நிலைகளையும் சேர்ந்த நபர்களின் ‘riding partner’ ஆக திகழ்கின்றது. 35 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட Lumala, இறக்குமதி செய்யப்படும் சைக்கிள்கள் என்பதிலிருந்து, முன்னணி உற்பத்தியாளராக வியாபித்துள்ளதுடன், பரந்தளவு சைக்கிள் தெரிவுகள் மற்றும் உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்கின்றது. இதில் Lycan வர்த்தக நாமத்தில் உற்பத்தி செய்யப்படும் மின் சைக்கிள்களும் அடங்கியுள்ளன.

நாளொன்றில் 2000 சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளதுடன், 1500 ஊழியர்களை தன்வசம் கொண்டிருக்கும் Lumala, தரம் மற்றும் சகாயமான விலை போன்றவற்றில் கவனம் செலுத்தி, தொடர்ந்தும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை தேவைகளை நிவர்த்தி செய்த வண்ணமுள்ளது. கடந்த ஆண்டு, சர்வதேச தொழிற்துறை கண்காட்சி 2024 இல், தனது சைக்கிள்கள் மற்றும் e-சைக்கிள்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தி Lumala பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. உலகின் மாபெரும் சைக்கிள் மற்றும் e-சைக்கிள் கண்காட்சியான 2024 ஆம் ஆண்டின் பிரதான வெளிப்பாடாக பிராங்பேர்ட்டில் நடைபெற்ற Eurobike 2024இல் Lumala பங்கேற்றிருந்தது.

மேலும், ஜனாதிபதி சூழல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சூழல் நிலைபேறாண்மைக்கான தனது அர்ப்பணிப்புக்கு கௌரவிப்பை பெற்றுக் கொண்டதனூடாக பொறுப்பு வாய்ந்த தொழிற்துறையின் முன்னோடி எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்திருந்தது. 2030 ஆம் ஆண்டளவில் வனாந்தர பரப்பை 32% ஆக உயர்த்தும் இலங்கையின் இலக்குடன் ஒன்றித்து செயலாற்றுவது மற்றும் பச்சை இல்ல வாயு வெளியேற்றத்தை 14.5% இனால் குறைப்பது போன்றவற்றில் Lumala தனது பங்களிப்பை நிறுவனம் எனும் வகையிலும், தனது பரந்தளவு உற்பத்திகளினூடாகவும் உறுதியாக வழங்குகின்றது.

Lumala அதிநவீன வடிவமைப்புகள் மற்றும் நிலையான இயக்கம் தீர்வுகள் ஆகியவற்றில் முன்னோடியாக இருந்து வருகிறது. இலங்கையில் கழிவு மேலாண்மை நடைமுறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட Eco-Hauler e-பைக் வகைகள் அதன் புதிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். இந்த முன்முயற்சி, நிஜ-உலக சவால்களை எதிர்கொள்ள தொழில்நுட்பத்தை நிலைபேறாண்மையுடன் இணைப்பதில் வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

Lumalaவின் சகோதர நிறுவனமான Flare, நிபுணத்துவ வர்த்தகம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல் மற்றும் மூலோபாய தகவல்தொடர்புகள் மூலம் அதன் வெற்றிக்கு வழியமைக்கின்றது. Lumala வின் அடையாளத்தை வடிவமைப்பதன் மூலமும், அதன் புதுமை மற்றும் நிலைத்தன்மையின் கதையை விரிவுபடுத்துவதன் மூலமும், Flare அதன் தொழில்துறை இருப்பை தாக்கமான பிரச்சாரங்கள் மற்றும் அழுத்தமான வர்த்தக நாம கதைகூரல் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையின் கைத்தொழில் முன்னேற்றத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு வர்த்தக நாமமாக, Lumala, பாரிய அளவிலான உற்பத்தித் துறையில் தொடர்ந்து புதிய அளவுகோல்களை அமைத்து வருகின்றது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் முதலீடு செய்வதன் மூலமும், அதிநவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலமும், திறமையான பணியாளர்களை வளர்ப்பதன் மூலமும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கைத்தொழில் மாற்றத்திற்கு ஆதரவளிப்பதில் நிறுவனம் உறுதியாக உள்ளது.

தொழில்துறையில் வலுவான பாரம்பரியத்துடன், Lumala, இலங்கையில் பொருளாதார மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறைத் தலைவராக தனது நிலையை வலுப்படுத்துவதுடன், நிலையான போக்குவரத்தில் முன்னோடியாக தொடர்ந்து முன்னேறி வருகிறது.


Share with your friend