தொழில்துறையின் புதிய பரிணாமத்துக்கு ஏற்ற வகையில் மாணவர்கள் திறன்சார், தொழில்முறைமிக்க மற்றும் முன்னோடியான பொறியியலாளர்களாக மாறுவதற்கான பாதைகளை வழங்குவதில் ஒரு முன்னணித் தளமாக SLIIT இன் இலத்திரனியல் மற்றும் மின்னியல் பொறியியல் திணைக்களம் விளங்குகிறது.
![](https://eyeviewsl.com/wp-content/uploads/2022/09/SLIIT-Department-of-Electrical-and-Electronic-Engineering-provides-pathways-to-develop-professional-and-pioneering-engineers-1024x682.jpeg)
SLIIT இன் பெறியியல் பீடத்தின் மிகவும் பழமை வாய்ந்த இத்திணைக்களம் 2009ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுடன், தொழில்துறையினால் அதிகம் தேடப்படும் நவீன தொழில்நுட்ப அனுபவம், வலுவான பகுப்பாய்வு, சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் தொடர்பாடல் திறமைகளுடன் கூடிய பெறியியலாளர்களை உருவாக்கியமைக்காக நன்மதிப்பைப் பெற்றுள்ளது.
பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சமன் திலகசிறி தெரிவிக்கையில், “பொறியியல் பீடத்தின் மிகவும் பழமைவாய்ந்த திணைக்களம் என்ற ரீதியில் எமது திணைக்களம், பணியாற்றுவது, கற்பிப்பது இன்றைய கற்றல்களுடன் தொடர்புபட்ட துறைகள் மற்றும் முக்கியத்துவங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதில் எப்பொழுதும் ஆவலுடன் இருக்கிறது. பலமான பொறியியல்த் திறன்கள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் எமது பட்டதாரிகளின் சிறந்த பெறுமதியை மதிப்பிட இது அனுமதிக்கும்” என்றார்.
இலங்கையின் முன்னணியான ரொபோட்டிக் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட, மிகவும் எதிர்பார்க்கப்படும் வருடாந்த நிகழ்வான Robofest, ஐ ஒருங்கிணைத்து நடாத்துவதில் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளது. பாடசாலை மற்றும் பட்டதாரிகள் மட்டத்தில் ரெபேட்டிக்ஸ் தொடர்பில் கொண்டிருக்கும் கோட்பாடு சார் மற்றும் நடைமுறைசார் அறிவைக் காட்சிப்படுத்தும் நிகழ்வாக கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்தப் போட்டி நடாத்தப்பட்டு வருகிறது.
புத்தாக்கமான அமர்வுகள் மூலம் புதிய தொழில்நுட்பத்துடன் மாணவர்கள் அறிமுகமாவதற்கு ஏதுவாக எமது திணைக்களம் சிறந்த கருவிகளைக் கொண்ட, விரிவாக்கப்பட்ட ஆய்வுகூடத்தைக் கொண்டுள்ளது. இலத்திரனியல் வலு முறையைக் கொண்ட ஆய்வுகூடம், தொடர்பாடல் ஆய்வுகூடம், டிஜிட்டல் இலத்திரனியல் ஆய்வுகூடம், அனலொங் இலத்திரனியல் ஆய்வுகூடம், டி.ஐ.வை ஆய்வுகூடம், வலையமைப்பு ஆய்வுகூடம் மற்றும் இயந்திரங்கள் மற்றும் சக்திவலு இலத்திரனியல் ஆய்வுகூடம் என்பன இதில் அடங்குகின்றன.
தனித்துவமான ஆய்வுகூட வகுப்புகள் மாணவர்களின் திட்டமிடல், பரிசோதனையை நடத்துதல் மற்றும் சுயாதீனமாக விளைவுகளை நிரூபிக்கும் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. கடதாசிப் பயன்பாட்டைக் குறைத்தல், மென்பொருள் பிரதியிலான பாடநெறிகள் மற்றும் ஒன்லைன் மூலமான சமர்ப்பிப்புக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
பாடம் தொடர்பில் மாணவர்களுக்குக் காணப்படும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்கு குறிப்பிட்டு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கற்பித்தல் பணியாளர்களை அணுகுவதற்கு ஏற்றதாக பாடம் சார்ந்த க்ளினிக் தளமொன்றையும் திணைக்களம் வழங்குகிறது.
திறன்கள், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மூலம் தொழில்துறையை வலுப்படுத்த மூலோபாய கூட்டாளர்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்க திணைக்களமும், பணியாளர்களும் உறுதிபூண்டுள்ளனர். டயலொக் அக்சியாட்டாவுடனான கூட்டாண்மையில் Dialog-SLIIT 5G புத்தாக்க நிலையம், இராணுவம், ஏசிஎல் கேபிள்ஸ், லலான் றபர், மாஸ் போன்ற அரச மற்றும் பெருநிறுவனத் துறைகள் இதில் அடங்குகின்றன.
மின்னியல் மற்றும் இலத்திரனியல் தொடர்பான விடயப்பரப்புக்கள் குறித்த ஆய்வுகள் மற்றும் முன்னோற்றங்களில் திணைக்களத்தின் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்களிப்புச் செலுத்துகின்றனர்.
இலங்கையிலுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்ப பயிற்சி மையத்துடன் இணைந்து செயற்பட நிதியுதவியைத் திணைக்களம் பெற்றுக் கொண்டிருப்பதுடன், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தி விநியோக இலக்குகளை அடைவதில் காணப்படும் முக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கு 1 மில்லியன் யூரோ பெறுமதியான ஐரோப்பிய ஒன்றிய எரசுமஜ் திட்டம் என்பன குறிப்பிடத்தக்கவையாகும். இத்திட்டத்தில் பொறியியல் பீடம் பங்காளர் என்பதுடன் ஏறத்தாழ 100,000 யூரோக்களுக்கான பங்கைக் கொண்டுள்ளது.
5G மற்றும் IOT தொடர்பான தொழில்துறைசார் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான இணைந்த ஆய்வுகள் மற்றும் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்காக திணைக்களம் Dialog-SLIIT 5G புத்தாக்க நிலையத்தை உருவாக்கியுள்ளது. டயலொக் அக்சியாட்டா நிறுவுனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டாண்மையின் பலனாக இது அமைக்கப்பட்டதுடன், பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு மட்டத்திலான பல்வேறு திட்டங்கள் இதன் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.
‘கலாச்சார ரீதியாக உணர்திறன் கொண்ட ஆட்டிசம் மதிப்பீட்டுக் கருவியின் வளர்ச்சி (குழந்தைகளின் திரும்பத் திரும்ப நடக்கும் நடத்தைகளைக் கண்டறிவது) பற்றிய ஆராய்ச்சிக்காக, கணினி பீடத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து AHEAD உலக வங்கி திட்டத்தில் இருந்து திணைக்களம் நிதியுதவியைப் பெற்றுள்ளது.
இதற்கு மேலதிகமாக இன் பல்வேறு ஆய்வுகளுக்கு தலா 400,000 ரூபா நன்கொடை வீதம் திணைக்களம் வெற்றிகரமாக உள்ளக நிதிகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.
மின்னியல் மற்றும் இலத்திரனியல் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி நிம்சிறி அபேசிங்க குறிப்பிடுகையில், “தனது நோக்கத்துடன் ஒத்துப்போகக்கூடிய ஆய்வுகள் ஏனைய சேவைகள் மற்றும் உயர்ந்த தரத்திலான கற்பித்தல் என்பவற்றை இத்திணைக்களம் உறுதிப்படுத்துகிறது. அதன் சாதனைகள் குறித்து திணைக்களம் பெருமிதம் கொள்கிறது. எங்கள் ஆய்வு நடவடிக்கைகளின் தரம் பல்வேறு ஆராய்ச்சி நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட பல மானியங்களுக்கு ஒரு சான்றாகும். இந்தத் துறையானது அதன் பட்டதாரிகளுக்கு தொழில்நுட்பத் திறன்களுக்கு மேலதிகமாக இன்றைய தொழில்களில் அதிகம் தேவைப்படும் திறன்களை உள்வாங்குவதற்கான முன்முயற்சிகளை உணர்வுபூர்வமாக எடுத்து வருகிறது” என்றார்.