நகர்ப்புறங்களில் வீட்டுத்தோட்ட திட்டமான Saru Ge-Watte திட்டத்தை கொழும்பிலும் ஊக்குவிக்கிறது HNB

Share with your friend

அதிகரித்து வரும் உணவுப் பொருட்களுக்கான செலவுகளை எதிர்கொள்வதற்காக கொழும்பு நகரத்தில் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிப்பதற்காக இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நெருக்கமான வங்கியான HNB PLC, விவசாயத் தொழிலை புத்துயிர் பெறுவதற்கும் தனது முதன்மையான முயற்சியை ஆரம்பிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது நகரங்களில் Saru Ge-Watte திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

மாவட்ட மட்டத்தில் விவசாய அலுவலகங்களுடன் இணைந்து செயற்படும் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் வெள்ளவத்தை, திம்பிரிகஸ்யாய, பம்பலப்பிட்டி, செட்டியார் தெரு, கொள்ளுப்பிட்டி, கிரீன் பாத், தலைமை அலுவலகம், மோதரை மற்றும் கொட்டாஞ்சேனை வாடிக்கையாளர் நிலையங்களில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு HNB துணை பொது முகாமையாளர் வாடிக்கையாளர் மற்றும் SME வங்கி, சஞ்சய் விஜேமன்னே, HNB துணை பொது முகாமையாளர் – CHRO/ CTO, L. சிரந்தி குரே, HNB துணை பொது முகாமையாளர் – சட்டம் (சபை செயலாளர்) துஷாரி ரணவீர, HNB உதவி பொது முகாமையாளர் – மைக்ரோஃபைனான்ஸ், வினோத் பெர்னாண்டோ, உதவிப் பொது முகாமையாளர் SME, K. இந்திரவாசன், HNB பிராந்திய வர்த்தக பிரதானி – கொழும்பு பிராந்திய சோமஸ்கந்தசர்மா நரேந்திரன், விவசாய திணைக்கள ஆணையாளர் நாயகம் A.H.M.L. அபேரத்ன, கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரி ஷிரோமி ரத்நாயக்க மற்றும் கமநல சேவைகள் உதவி உற்பத்தி உதவியாளர் ரஞ்சித் புஷ்பகுமார ஆகியோர் சிறப்பு அதிதிகலாக கலந்து கொண்டனர்.

“கொழும்பு மாவட்டத்தைப் பொருத்தவரையில், அது மிகவும் சன நெருக்கடி கூடியதாக உள்ளது, எனவே மக்கள் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பதால் வீட்டுத்தோட்டம் என்ற சிந்தனையானது மாறிவிட்டது. எவ்வாறாயினும், எங்கள் முன்முயற்சியின் மூலம் மக்கள் தங்கள் வீட்டிற்குள்ளே தங்களுக்கு வேண்டிய பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்க்க ஆரம்பிக்கலாம், இது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் குடும்பத்திற்கும் சிறந்ததாகும்.

“இந்த முயற்சியின் மூலம், நாங்கள் பொருளாதார வலுவூட்டல் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கிறோம், பொதுமக்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு வீட்டுத்தோட்டம் மற்றும் பயிர்ச்செய்கையின் மதிப்பு மற்றும் மிக முக்கியமாக ஒவ்வொரு வீட்டிற்கும் சத்தான உணவை வழங்குகிறோம்.” என HNBஇன் பிரதிப் பொது முகாமையாளர் – CHRO/ CTO L. சிரந்தி குரே தெரிவித்தார்.

வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்துவதற்காக அப்பகுதியில் குடியிருப்போர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செடிகள் மற்றும் விதைகளை HNB விநியோகித்தது.

மேலும், HNB அதிகாரிகள் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள் நான்கு கிளைகளுக்கு அருகாமையில் வசிப்பவர்களைத் தங்களுடன் இணைந்து தங்கள் முயற்சிகளில் இணைத்துக் கொள்ள அழைப்பு விடுத்தனர். இத்துறையில் பணிபுரியும் SME வாடிக்கையாளர்களின் வங்கியின் விரிவான கோப்புறை தாவரங்கள், விதைகள் மற்றும் உரங்களை தள்ளுபடி விலையில் வழங்கியது, அதே நேரத்தில் விவசாய அதிகாரிகள் வீட்டுத்தோட்டம் பற்றிய குறுகிய அறிமுக அமர்வுகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிடத்தக்க வகையில், HNB ஆனது, தெரிவு செய்யப்பட்ட நுண்நிதி தொழில்முனைவோருக்கு, இந்த முயற்சியின் தொடக்கத்தின் போது, வாடிக்கையாளர் மையங்களில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்காக, சிறு கடைகளை அமைத்து வணிகத்தை மேற்கொள்ள வழியமைத்தது

மேலும், மத்திய மாகாணத்தில் தொடங்கப்பட்ட பிரச்சாரமானது, வங்கி அல்லாத கிராமப்புறப் பிரிவுகளில் உள்ள விவசாயிகளை நகர்ப்புறங்களில் வாங்குபவர்களுடன் இணைக்கிறது. இந்த இணைப்புகளைச் செய்வதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள கிராமப்புற விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடி உறவுகளை உருவாக்குவதன் மூலம் விவசாயத் துறையை தூண்டுவதற்கு உதவுவதற்காக, தற்போதுள்ள வாடிக்கையாளர் நெட்வொர்க்குடன் இணைந்து செயல்படுவதாக HNB அறிவித்தது. விவசாயிகள் தங்கள் அறுவடையில் இருந்து ஒரு கெளரவமான வாழ்வாதாரத்தைப் பெறுவதை இது உறுதி செய்கிறது மற்றும் வாடிக்கையாளர்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு நியாயமான விலையைத் தேர்வு செய்யலாம்.


Share with your friend