“நாம் முன்னெடுக்கும் பாதைகள்” அறிமுகம்

Share with your friend

இலங்கையின் முதலாவது புத்தாக்கமான பசுமை வரைபடம்

“நாம் முன்னெடுக்கும் பாதைகள்” EUNIC இலங்கை மற்றும் Good Life X இணைந்து முன்னெடுக்கும் திட்டமாகும்.  EUNIC – ஐரோப்பிய ஒன்றியத்தின் கலாசாரத்திற்கான தேசிய நிறுவனங்கள் – ஐரோப்பிய ஒன்றியத்தின் 36 அங்கத்துவ நாடுகளின் தேசிய கலாசார நிறுவனங்களை உள்ளடக்கிய ஒன்றியமாகும். EUNIC இலங்கை – இலங்கையிலுள்ள Alliance Française மற்றும் பிரான்ஸ் தூதரகம் மற்றும் மாலத்தீவுகள், கோயித் நிறுவனம், பிரிட்டிஷ் கவுன்சில். சுவிஸ் தூதரகம், நெதர்லாந்து ராஜ்ஜிய தூதரகம், இத்தாலியின் தூதரகம் மற்றும் EUவின் அனுசரணையுடன் கலாசார உறவுகள் மற்றும் படைப்பாற்றல் மற்றும் வெவ்வேறுபட்ட மக்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறையை கையாளுகின்றனர். 

Good Life X, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கலாசாரத்திற்கான தேசிய நிறுவனங்கள் (EUNIC),   – இலங்கையின் முதன்முறையாக படைப்பாற்றல் மிக்க கலைஞர்களை – தனிநபர்கள், நிறுவனங்கள், அல்லது வியாபாரங்கள் பற்றிய தகவல்களை திரட்டி ஆவணப்படுத்தி டிஜிட்டல் மற்றும் அச்சிடப்பட்ட வரைபடத்தில் குறிப்பிடப்படுவார்கள். இக் கலைஞர்களை அவர்களின் பணிமுறைகள் மற்றும் நீடிப்புத்திறன், சுழற்சி முறை, சகவாழ்வு முறைகள் மூலம் மக்களும் பூமியுடன் தொடர்புட்ட தலைப்புகளாக இருக்க வேண்டும். “நாம் முன்னெடுக்கும் பாதைகள்” எனும் திட்டமானது பெருகிவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் படைப்பாளிகளின் பங்கை தீர்வாக முன்வைக்கும் திட்டமாகும். 

இத்திட்டம் கொழும்பில்  வார இறுதியில் முன்னெடுக்கும் கண்காட்சியில், படைப்பாளிகள் அவர்களின் திறமை, நோக்கம் மற்றும் கைத்திறன்களை வருகையாளரான தொழில்வல்லுநர்கள், மாணவர்கள், படைப்பாற்றல் துறையின் முன்னோடிகள், உடனுழைப்பார்கள், தொடர்புபட்ட தனியார் மற்றும் பொது பங்குதாரர்கள் மற்றும் ஊடகத்தின் முன்னால் காட்சிப்படுத்தும் வாய்ப்பினை பெறுவார்கள். இது திட்டமானது மார்ச் முதல் ஜூலை 2024 வரை இடம்பெறும். 

நாம் எவரின் படைப்புகள், சுழற்சி முறைகள் அல்லது சகவாழ்வு உறவுகளை மக்களுடனும் பூமியுடனும் தொடர்புபட்ட விதத்தில் இயங்கும் தனிப்பட்ட படைப்பாளிகள், நிறுவனங்கள் அல்லது வியாபாரங்களிடமிருந்து ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம். புகைப்படம், திரைப்படம், தச்சு வேலை, ஆடை உருவாக்கம், கட்புல கலைகள், நிகழ்நிலை கலைகள், பிரசுரம், பாரம்பரிய கைவேலைகள், விளம்பரம், டிஜிட்டல் ஊடகம், உட்கட்டட வடிவமைப்பு, கிராபிக் வடிவமைப்பு, தொலைக்காட்சி மற்றும் வானொலி, தொழில்துறை வடிவமைப்பு மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், ஆயுர்வேதம், அழகியல், சமையல் கலை, இலக்கியம், உலோக வேலை, கண்ணாடி வேலை, மண்பானை, கட்டிடக்கலை, இசை, கணினி விளையாட்டு, படைப்பு தொழில்நுட்பம் போன்ற துறைகளிலிருந்து படைப்பாளிகள் தெரிவு செய்யப்படலாம்.

விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது மார்ச் 19 முதல் ஆரம்பித்து ஏப்ரல் 5 2024 வரை முன்னெடுக்கப்படுகின்றது. ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் விண்ணப்பங்களை பெறலாம்.

GoodLifeXஐ முகநூல், இன்ஸ்டாகிராம், லிங்க்ட்இன் மற்றும் ட்விட்டறில் மேலதிக தகவல்களுக்கு தொடருங்கள்.

படங்கள்

  1. நாம் முன்னெடுக்கும் பாதைகள் திட்டம் Good Life X மற்றும் EUNIC இலங்கை ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன. டிஜிட்டல் மற்றும் அச்சுப்பிரதி வரைபடங்களினூடாகவும், இறுதி கண்காட்சியினூடாகவும் இலங்கையின் ஆக்கபூர்வ சமூகத்தை திரட்டி ஆவணப்படுத்த எதிர்பார்க்கும் திட்டமாக அமைந்துள்ளது.
  2. நாம் முன்னெடுக்கும் பாதைகள் திட்டம் மக்களுடனும் புவியுடனும் தொடர்புபட்ட விதத்தில் நிலைபேறான, சுழற்சியான, சகவாழ்வு சார்ந்த ஆக்கங்களை வரவேற்கின்றது.

ஊடக தொடர்புகளுக்கு

Emma DeSilva

Communications Lead – Good Life X Pvt Ltd. 

emma@goodlifex.com  | 077 418 9049

GLX பற்றி

தெற்காசிய பிராந்தியத்தில் வாழ்க்கையை மேம்படுத்தும் நிறுவனங்களின் புதிய அலையை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தும் புத்தாக்கம் மற்றும் அபிவிருத்திசார் அமைப்பாக Good Life X (GLX) திகழ்கின்றது. ஆரம்பநிலை, சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சிகள் மற்றும் மீளுருவாக்கத்தில் கவனம் செலுத்தும் முதலீட்டாளர்களுக்கு அவசியமான முக்கியமான அறிவு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை தமது தீர்வுகளினூடாக நிறுவனம் வழங்குகின்றது. 2019 ஆம் ஆண்டு முதல் இயங்கும் GLX, இதுவரையில் 100 இலங்கை வியாபாரங்களுக்கு மாற்றத்துக்கான மீளுருவாக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு #scalethegood பங்களிப்பை வழங்கியுள்ளது.


Share with your friend