இலங்கையின் முன்னணி நிலைபேறான கோழி இறைச்சி உற்பத்தியாளரான நியு அந்தனீஸ் குரூப், Living Expo 2025 நிகழ்வில் ஒழுக்கநெறிமுறையான பண்ணைச் செயற்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2025 பெப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 14ஆவது Medicare International Healthcare கண்காட்சியின் முக்கிய அங்கமாக இந்த நிகழ்வு
அமைந்திருந்தது.சுகாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ், விசேடத்துவ மருத்துவ சங்கங்களின் பங்காண்மையில் Asia Wellness Forum இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முன்னணி சுகாதாரபராமரிப்பு நிகழ்வில் நியு அந்தனீஸ் குரூப்பின் பங்கேற்பினூடாக, நிலைபேறாண்மை, உணவு பாதுகாப்பு மற்றும் சூழலுக்கு நட்பான கோழி இறைச்சி உற்பத்தி போன்றவற்றில் அதன் அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளதுடன், பொறுப்பு வாய்ந்த விவசாய வியாபாரத்தில் உறுதியான செயற்பாட்டாளர் எனும் அதன் நிலையையும் உறுதி செய்துள்ளது.

Living Expo 2025 நிகழ்வினூடாக, நியு அந்தனீஸ் நிறுவனத்துக்கு, ஆரோக்கியத்தில் அதிகளவு அக்கறை கொண்டுள்ள இன்றைய நுகர்வோர், துறைசார் முன்னணி செயற்பாட்டாளர்கள் மற்றும் கொள்கை வடிவமைப்பாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்த வாய்ப்புக் கிடைத்திருந்ததுடன், பூஜ்ஜிய உயிர்கொல்லி நடவடிக்கைகள், போஷாக்கு செழுமை மற்றும் சூழலுக்கு நிலைபேறான கோழி இறைச்சி தெரிவுகள் போன்றவற்றுக்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றமை தொடர்பில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர கருத்துத் தெரிவிக்கையில், “நிலைபேறான கோழி இறைச்சி, உணவு பாதுகாப்பு மற்றும் புத்தாக்கம் போன்றவற்றில் நாம் கவனம் செலுத்துகின்றமையினூடாக, நாம் சர்வதேச நியமங்களை பூர்த்தி செய்வது மாத்திரமன்றி, அதனை விஞ்சுவதும் உறுதி செய்யப்பட்டு, இலங்கையின் வணிக வியாபார துறையை வலிமைப்படுத்துவது உறுதியாகியுள்ளது. நாம் கோழி இறைச்சியை உற்பத்தி செய்வது மாத்திரமன்றி, உலகத் தரம் வாய்ந்த, பொறுப்பு வாய்ந்த வகையில் பண்ணையிடப்பட்ட உணவுத் தயாரிப்புகள் போன்றவற்றை உற்பத்தி செய்வதில் இலங்கையின் ஆற்றலை வெளிப்படுத்தி, அதனூடாக பொது சுகாதாரம் மற்றும் சூழல் நிலைபேறாண்மைக்கு பங்களிப்பு வழங்குகின்றமையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

நியு அந்தனீஸ் குரூப், இலங்கையின் நிலைபேறான செயற்பாடுகளில் முன்னிலையில் திகழ்கின்றது. ஹரிதஹரி கோழி இறைச்சி தெரிவுகளினூடாக 100 சதவீதம் கொம்போஸ்ட் உரமாகும் பொதியிடல் தீர்வுகளை, தாவர அடிப்படையிலான மூலப்பொருட்களை கொண்டு தயாரித்து, இலங்கையில் அறிமுகம் செய்த முதலாவது கோழி இறைச்சி உற்பத்தியாளராகவும் திகழ்கின்றது. தனது முழு செயற்பாடுகளிலும் காபன் வெளிப்பாட்டை குறைக்கும் முயற்சிகளுக்கான அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில், Control Union Netherlands இடமிருந்து Greenhouse Gas (GHG) உறுதிப்படுத்தல் அறிக்கையை பெற்றுக் கொண்ட இலங்கையின் ஒரே கோழி இறைச்சி உற்பத்தியாளராகவும் திகழ்கின்றது.
அதன் நிலைபேறான செயற்பாடுகளை மேலும் உறுதி செய்யும் வகையில், நியு அந்தனீஸ் குரூப் தெற்காசியா மற்றும் உப-சஹாரா ஆபிரிக்க பிராந்தியத்தில் “Fed with Sustainable U.S. Soy” எனும் லேபிளை பெற்றுக் கொண்ட முதலாவது நிறுவனமாகவும் திகழ்கின்றது. அதனூடாக, நிலைபேறான வகையில் உற்பத்தி செய்யப்பட்ட சோய் தயாரிப்புகளை கோழித் தீனிக்காக பெற்றுக் கொள்ளும் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சான்றளிப்பினூடாக கடுமையான சூழல் A
கடந்த ஆண்டில், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட FSSC 22000 சான்றிதழை பெற்றுக் கொண்ட முதலாவது நிறுவனமாக தெரிவாகியிருந்தது. அதனூடாக, உணவு பாதுகாப்பு மற்றும் தரம் போன்றவற்றில் உயர் நியமங்கள் மீள உறுதி செய்யப்பட்டிருந்தன. அவற்றினூடாக, விலங்கு நலன் பேணல் தொடர்பான கடுமையான ஏற்பாடுகள் மற்றும் கொள்கைகள் போன்றன பின்பற்றுகின்றமை உறுதி செய்யப்பட்டிருந்தது. நிறுவனம் பெற்றுள்ள சில இதர சான்றளிப்புகளில் GMP, HACCP, ISO 22000 மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச ஹலால் சான்றிதழ்களும் அடங்குகின்றன. ஆண்டின் முற்பகுதியில், ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 26 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் நிகழ்வில் உணவு பதப்படுத்தல் பிரிவில் “சிறந்த ஏற்றுமதியாளர்” விருதையும் நிறுவனம் பெற்றிருந்தது.
Living Expo 2025 பங்கேற்றிருந்ததனூடாக, நியு அந்தனீஸ் குரூப், ஒழுக்கமான பண்ணை, சூழல் பொறுப்பு மற்றும் நலன்-அடிப்படையிலான நுகர்வோர் தெரிவுகள் போன்றவற்றுக்கான அர்ப்பணிப்பை உறுதி செய்திருந்ததுடன், Medicare International Healthcare கண்காட்சியின் பரந்த தொனிப்பொருட்களுடன் ஒப்பற்ற வகையில் பொருந்தும் வகையிலும் அமைந்துள்ளது.