நியு அந்தனீஸ் பாம்ஸ் நவீன வசதிகள் படைத்த Anthoney’s Meatlery விற்பனைத் தொடரை அறிமுகம் செய்துள்ளது

Share with your friend

இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி உற்பத்தியாளர்களில் ஒன்றாக நியு அந்தனீஸ் பாம்ஸ் (பிரைவட்) லிமிடெட், Anthoney’s Meatlery எனும் தனது விற்பனையகத் தொடரை அறிமுகம் செய்துள்ளது. தனது ஒட்டுமொத்த விரிவாக்க தந்திரோபாயத்துக்கமைய, முதலாவது விற்பனையகத்தை, பத்தரமுல்ல, கொஸ்வத்த பகுதியில் திறந்துள்ளது.

அதிகளவு இடவசதிகளைக் கொண்ட நவீன இறைச்சி சுப்பர் மார்க்கெட் தொடரை அடிப்படையாகக் கொண்டதாக Anthoney’s Meatlery அமைந்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்தினுள், இந்த விற்பனையகத்திலிருந்து சிறந்த இறைச்சித் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களால் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும். இதனூடாக பசுமை, பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியவற்றை வழங்கும் வர்த்தக நாமத்தின் உறுதிமொழி பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

நியு அந்தனீஸ் பாம்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி நீல் சுரவீர கருத்துத் தெரிவிக்கையில், “எமது சகல தயாரிப்புகளையும் கொண்ட, எமது முதலாவது விற்பனையகத்தை நிறுவுவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இதனூடாக எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். உள்நாட்டு சந்தையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்திருப்பதுடன், விரைவில் நாட்டின் ஏனைய பாகங்களிலும் விற்பனையகங்களை திறப்பதற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

Haritha Hari, Crizzpys, Chico, Precut, Pet food போன்றவற்றுடன் அண்மையில் சேர்க்கப்பட்ட 6-துண்டுகள் கொண்ட HIT பொதி போன்றவற்றுடன், சொசேஜ் வகைகள், பிரெட்டட் தெரிவுகள், குளிர்ச்சியான துண்டுகள், முட்டைகள், வாசனைத்திரவியங்கள் மற்றும் சிக்னேச்சர் சோஸ் வகைகள் போன்ற நியு அந்தனீஸ் பாம்ஸ் வழங்கும் சகல தெரிவுகளையும் இந்த விற்பனையகம் கொண்டிருக்கும். 

நாட்டில் கோழித் தீன்களுக்கான தட்டுப்பாடு நிலவிய போதிலும், தனது இறைச்சித் தெரிவுகளை போதியளவில், தட்டுப்பாடின்றி விநியோகிப்பதை நியு அந்தனீஸ் பாம்ஸ் அண்மையில் உறுதி செய்திருந்தது. அத்துடன், உள்நாட்டிலும், சர்வதேச சந்தைகளிலும் அதிகரித்துச் செல்லும் கேள்விகளை நிவர்த்தி செய்யும் வகையில், தனது உற்பத்தியையும் விரிவாக்கம் செய்திருந்தது. வெளிநாட்டு சந்தைகளுக்கான உற்பத்தி விரிவாக்கத்தினூடாக, அந்நியச் செலாவணியையும் நாட்டினுள் கொண்டு வருவதற்கு நிறுவனத்துக்கு முடிந்துள்ளது.

போஷாக்கு நிறைந்த, அன்ரிபயோட்டிக் அற்ற மற்றும் சுவை நிறைந்த பசுமையான மற்றும் பாதுகாப்பான இறைச்சி வகைகளை பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் செயன்முறைகளின் மற்றுமொரு படியாக, சொந்த விற்பனையகத்தை நிறுவும் நடவடிக்கை அமைந்துள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் தொரகடபளிய எனும், ஒன்லைன் இறைச்சி விற்பனைப் பகுதியையும் அறிமுகம் செய்திருந்ததுடன், நாடளாவிய ரீதியில் இலவச விநியோக சேவைகளையும் வழங்குகின்றது.

Anthoney’s Meatlery இல் கோழி இறைச்சித் தெரிவுகளுக்கு மேலதிகமாக, பன்றி, ஆடு மற்றும் மாட்டிறைச்சித் தெரிவுகளும், விரைவில் மறிஆட்டு இறைச்சித் தெரிவுகளையும் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில், 100 சதவீதம் உக்கும் தன்மை கொண்ட பொதியிடல் தீர்வுகளை, தனது ஹரித ஹரி கோழி இறைச்சித் தெரிவுகளில் நியு அந்தனீஸ் பார்ம்ஸ் அறிமுகம் செய்திருந்தது. கொன்ட்ரோல் யூனியனிடமிருந்து Greenhouse Gas (GHG) உறுதிப்படுத்தல் அறிக்கையைப் பெற்றுக் கொண்ட இலங்கையின் ஒரே கோழி இறைச்சி உற்பத்தியாளராகவும் திகழ்கின்றது. GMP, HACCP, ISO 22000, உள்நாட்டு மற்றும் சர்வதேச ஹலால் சான்றுகளுடன், தரத்தை மேம்படுத்துவது மற்றும் தூய்மையான உற்பத்தி முறைகளை பின்பற்றுவதை தனது உள்ளக செயற்பாடுகளின் அங்கமாக கொண்டு செயலாற்றுவதுடன், அமெரிக்காவின் தேசிய கோழி இறைச்சி சம்மேளனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நியமங்களையும் பின்பற்றி இயங்குகின்றது.


Share with your friend