செலான் வங்கியின் மேசைப் பந்து அணிகள் அம்பலாங்கொடை, SRS விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற நிறுவனங்களுக்கு இடையேயான 65ஆவது மேசைப் பந்து லீக் சம்பியன்ஷிப் 2024ல் சிறப்புத் திறமை மற்றும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.
செலான் வங்கியின் ஆடவர் அணி ‘A ’ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து போட்டி முழுவதும் தங்கள் திறமை மற்றும் போட்டித் தன்மையை வெளிப்படுத்தியது. அதேவேளை, செலான் வங்கியின் மகளிர் அணி, ‘C’ பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று அணிக்கு குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்தது.
2024ஆம் ஆண்டு முழுவதும், செலான் வங்கி ஆடவர் அணி தொடர்ந்து உயர் மட்ட திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளது. அவர்கள் நிறுவனங்களுக்கு இடையேயான 65ஆவது Knockout மெர்க்கன்டைல் Knockout மேசைப் பந்து சம்பியன்ஷிப் 2024ல் இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன் நிறுவனங்களுக்கு இடையேயான 69ஆவது மெர்க்கன்டைல் ஓபன் மேசைப் பந்து சம்பியன்ஷிப் 2024ல் பங்கேற்றனர்.
செலான் வங்கியின் முக்கிய வீரரான சாலித ரஞ்சன, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஏராளமான பாராட்டுக்களுடன் சிறந்த இலக்குகளை எட்டியுள்ளார். 2024இல் சாலித ஓபன் மாஸ்டர்ஸ் ஒற்றையர் பிரிவில் சம்பியனானதுடன் ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். மேலும் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
சாலித, ஒன்பது ஆண்டுகளாக மெர்க்கன்டைல் ஒற்றையர் பட்டத்தை வென்ற்றுள்ளதுடன் கடந்த 20 ஆண்டுகளாக மெர்கன்டைல் டீம் Event ‘A’ பிரிவில் வெற்றியாளராகவோ அல்லது இரண்டாம் இடத்தைப் பிடித்தவராகவோ தொடர்ந்து இறுதிப் போட்டியை எட்டியுள்ளமை அவரின் குறிப்பிடத்தக்க உள்ளூர் சாதனைகள் ஆகும். 2004இல் பொதுநலவாய சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றமை, 2010இல் பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒரு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றமை மற்றும் 1999இல் நேபாளத்தின் காத்மாண்டுவிலும் 2003இல் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலும் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றமை அவரது சர்வதேச சாதனைகள் ஆகும். சாலித, 2017, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நியூசிலாந்து ஓபனிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார்.
சாலித, ஆண்டின் சிறந்த மேசைப் பந்து வீரராக 2019ஆம் ஆண்டு (மெர்கன்டைல்), 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் (தேசிய விளையாட்டுப் போட்டிகள்) அங்கீகரிக்கப்பட்டுள்ளார். மேசைப் பந்து அசோசியேஷன் தரவரிசைகளின்படி, அவர் 1999 முதல் 2004 வரை நான்கு ஆண்டுகள் தேசிய மேசைப் பந்து சாம்பியனாகவும் நம்பர் 1 வீரராகவும் இருந்ததுடன் மீண்டும் 2008 முதல் 2010 வரையிலும் நம்பர் 1 வீரராக இருந்துள்ளார்.
அனைத்து துறைகளிலும் சிறப்பைக் கொண்டாடும் செலான் வங்கி, அதன் ஊழியர்கள் தங்கள் பணி எல்லைக்கு வெளியே ஆர்வமுள்ள துறைகளை ஆராயும்போது உதவத் தயாராக உள்ளது. அதன் மேசைப் பந்து அணிகளின் சிறப்பான செயல்திறனுக்காக பெருமிதம் கொள்ளும் அன்புடன் அரவணைக்கும் வங்கியானது விளையாட்டுகளை ஊக்குவிக்கும் மற்றும் எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றிகளை எதிர்பார்க்கும் வளமான கலாச்சாரத்தை வளர்க்கிறது.