நிலைபேற்றியல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் மீது INSEE காண்பிக்கும் அர்ப்பணிப்பிற்காக, 13வது வருடாந்த Green Building Awards விருதுகள் நிகழ்வில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது  

Share with your friend

நிலைபேற்றியல் கொண்ட கட்டுமான மூலப்பொருட்களில் முன்னோடியான INSEE Cement, சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் மீது தான் கொண்டுள்ள இடைவிடாத அர்ப்பணிப்பை மீண்டும் ஒரு தடவை வெளிக்காண்பித்துள்ளது. இலங்கை Green Building Council ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட 13வது வருடாந்த Green Building Awards விருதுகள் வைபவம் 2024 நிகழ்விலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.          

கட்டுமானத் துறையில் நிலைபேற்றியல், புத்தாக்கம் மற்றும் சூழலைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்புக்களுக்காக இந்த மதிப்பிற்குரிய விருது அங்கீகாரத்தை INSEE Cement சம்பாதித்துள்ளது.    

இந்த பாராட்டு அங்கீகாரங்கள், INSEE அணியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரினதும் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பெரும்பற்று ஆகியவற்றைப் பிரதிபலிப்பது மாத்திரமன்றி, இலங்கையிலும், அதற்கு அப்பாலும் பசுமையான எதிர்காலத்தைச் செதுக்குவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.  

எமது பிரதான தயாரிப்பான INSEE சங்ஸ்தா என்ற போர்ட்லான்ட் கலப்பு சீமெந்திற்கு இலங்கை Green Building Council இடமிருந்து பசுமை தயாரிப்புக்கான அடையாளம் (Green Labeled Product) மீளவும் கிடைக்கப்பெற்றமை INSEE Cement நிறுவனத்தைப் பொறுத்தவரையில் ஒரு பாரிய சாதனை மைல்கல்லாக மாறியுள்ளது. முதல்முறையாக இத்தயாரிப்பானது மிகச் சிறந்த 5-நட்சத்திர தரப்படுத்தலைச் சம்பாதித்துள்ளதுடன், தொழில்துறையில் இந்த மதிப்பிற்குரிய அங்கீகாரத்தைப் பெற்ற முதலாவது சீமெந்து நிறுவனம் என்ற பெருமையையும் INSEE நிலைநாட்டியுள்ளது. நாம் ஏற்கனவே கொண்டுள்ள, ISO 14025 தரச்சான்றுடன் ஒன்றியுள்ள Environmental Product Declarations (EPD) தரச் சான்றினாலேயே இச்சாதனை சாத்தியமாகியுள்ளது. தயாரிப்புக்களின் பாவனை ஆயுட்காலம் முழுவதும் சூழல்ரீதியான பெறுபேற்றுத்திறன் குறித்த விபரமான, வரையளவுப்படுத்தப்பட்ட மற்றும் மூன்றாம் தரப்பினால் சரிபார்த்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் விபரங்களை வழங்கும் உலகளாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பே EPD ஆகும்.                    

INSEE நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி/தலைவர் திரு. நந்தன எக்கநாயக்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “மிகவும் நீடித்து உழைக்கின்ற கொங்கிரீட் மற்றும் ஏனைய கட்டுமானப் பயன்பாடுகளுக்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட போர்ட்லான்ட் கலப்பு சீமெந்து தயாரிப்பான INSEE சங்ஸ்தா சீமெந்திற்கு 5-நட்சத்திர பசுமை தயாரிப்பு அடையாள சான்றுபடுத்தலைப் பெற்று, இலங்கையில் இதனைப் பெற்றுள்ள முதல் சீமெந்து நிறுவனம் என்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். கட்டுமானத் தொழிற்துறைக்கு சூழல்நேய, நிலைபேற்றியல் கொண்ட தீர்வுகளைத் தோற்றுவிப்பதில் எமது அணியின் அயராத அர்ப்பணிப்பிற்கு இந்த அங்கீகாரம் சான்றுபகருகின்றது. INSEE நிறுவனத்தின் செயற்பாடுகள் அனைத்திலும் நிலைபேற்றியலே மையமாகக் காணப்படுவதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு புத்தாக்கமான, சூழல்ரீதியாக பொறுப்புணர்வுமிக்க தயாரிப்புக்களை வழங்குவதில் நாம் முன்னிலை வகித்து வருவதையும் வலியுறுத்தும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது,” என்று குறிப்பிட்டார்.

இந்த அங்கீகாரங்கள் அனைத்தும் நிலைபேற்றியல் கொண்ட செயற்பாடுகள் மீது INSEE Cement நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிக்காண்பிப்பது மாத்திரமன்றி, உள்நாட்டு கட்டுமானத் துறையில் முன்னோடி என்ற நிறுவனத்தின் வகிபாகத்தையும் உறுதிப்படுத்துகின்றது. உயர் தர, சூழல்நேய தயாரிப்புக்களை தொடர்ச்சியாக வழங்குவதனூடாக, இலங்கையில் கட்டுமானத்துறையின் நிலைபேற்றியல் கொண்ட எதிர்காலத்தை உறுதிப்படுத்தி, கட்டுமானப் பொருட்களுக்கு புத்தாக்கத்தின் தராதரத்தை INSEE நிலைநாட்டி வருகின்றது. மிகவும் நிலைபேற்றியல் கொண்ட, புத்தாக்கமான மற்றும் சூழல் மீது கரிசனை மிக்க எதிர்காலத்தை நோக்கிய இந்த பயணத்தில் தமது இடைவிடாத ஆதரவை வழங்கி வருகின்ற எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினர், கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

INSEE Cement நிறுவனம் தொடர்பான விபரங்கள்:

INSEE Cement என்ற நாமத்தில் அறியப்படுகின்ற Siam City Cement (Lanka) Limited ஆனது 1969 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நிறுவப்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான Siam City Cement Public Company Limited (SCCC) இன் உறுப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் இலங்கையின் முன்னணி மற்றும் ஒரேயொரு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தியாளராகத் திகழ்வதுடன், இலங்கையில் மிகவும் கேள்விமிக்க INSEE சங்ஸ்தா, INSEE மகாவலி மரைன் பிளஸ் வர்த்தகநாமங்கள் அடங்கலாக, நிர்மாணத் தீர்வுகளின் முழுமையான தயாரிப்பு வரிசையையும் வழங்கி வருகின்றது. 550 பேரைக் கொண்ட தொழில் வல்லுனர்கள் அணியின் பக்கபலத்துடன், உள்நாட்டு கட்டட மற்றும் நிர்மாணத் தொழிற்துறையை உயர் செயல்திறன் கொண்டதாக, காபனைக் குறைக்கும் வழிமுறைகளுடன், எதிர்காலத்திற்கு ஏற்றவாறான கட்டுமானங்களை நோக்கி தொடர்ந்து நகர்த்திச் செல்வதுடன், புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் நிறுவனத்தின் வலுவான முதலீட்டினூடாக உயர் தரம் மிக்க கலவை சீமெந்து தயாரிப்புக்கள் மற்றும் நிலைபேணத்தகு கட்டட மூலப்பொருட்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகின்றது.


Share with your friend