நீர் மற்றும் சுகாதார வசதிகளின் ஊடாக மட்டக்களப்பில் உள்ள சமூகங்களின் வாழ்வாதாரத்தை மாற்றும் ChildFund Sri Lanka நிறுவனம்

Share with your friend

மாற்று நீர், சுகாதார மற்றும் ஆரோக்கிய (WASH) வசதிகள் நோக்கி தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளின் உறுதிப்பாட்டுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாடசாலைகள் மற்றும் சமூகங்களுக்க நீர் மற்றும் சுகாதார வசதிகளை உறுதிப்படுத்தும் இரண்டு வருட திட்டத்தை ChildFund Sri Lanka நிறுவனம் நிறுவனம் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. 

இந்தப் பகுதியைச் சேர்ந்த சமூகங்களுக்கு குடிப்பதற்கும் சுத்தம் செய்வதற்கும் நீர் பற்றாக்குறையாக இருந்தமை பாரிய பிரச்சினையாகக் காணப்பட்டது.  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த சமூகத்தினர் பருவகாலத்தினால் ஏற்படும் வரட்சி மற்றும் வெள்ளம், நிலத்தடி நீர் மட்டத்தில் காணப்படும் தட்டுப்பாடு போன்ற பல்வேறு சவால்களையும் அனுபவித்து வருகின்றனர். சுத்தமான நீருக்கான அணுகலுக்குக் காணப்படும் தட்டுப்பாடு காரணமாக அவர்களின் ஆரோக்கியம் மற்றும் சிறுவர்களின் கல்வி என்பன பாதிக்கப்பட்டன.

சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் நடைமுறைகளை பல்வேறு பகுதிகளில் வழங்குவதன் ஊடாக ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் குடும்பங்களின் சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவது என்ற ChildFund Sri Lanka நிறுவனத்தின் திட்டத்தின் ஊடாக இந்த சமூகத்துக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தினால் பயன்பெறுபவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு கிராமங்கள், 5000 பிள்ளைகளை உள்ளடக்கிய 30 பாடசாலைகள் மற்றும் ஏறத்தாழ 8000 பெரியோர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். 

“மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் சமூகங்களுக்கான நீர் மற்றும் சுகாதார வசதிகள்-  2ஆம் கட்டத் திட்டம்“ ஆனது சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்ட நீர் விநியோகத் திட்டத்தை உறுதிப்படுத்தியிருப்பதுடன், இதன் மூலம் கொத்தியாவல வாசிகள் தனிப்பட்ட இணைப்புக்கள் ஊடாக தமது வீட்டுக்குத் தேவையான நீரை நேரடியாகப் பெற்றுக் கொள்கின்றனர். இத்திட்டமும் வவுனதீவு பிரிவைச் சேர்ந்த ஆறு கற்றல் நிலையங்கள் மற்றும் 30 பாடசாலைகளுக்கு நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதுடன், விழிப்புணர்வுத் திட்டம் முடிவடைந்ததும் குடும்பங்கள் உரிய சுகாதார மற்றும் ஆரோக்கிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு உதவுகிறது.

ChildFund Sri Lanka நிறுவனத்தின் வணிக அபிவிருத்திப் பணிப்பாளர் டினந்த தம்பவிட்ட தெரிவிக்கையில், ” சுத்தமான குடிநீர் கிடைக்காது, பாடசாலைகளில் போதிய சுகாதார வசதிகள் மற்றும் சிறந்த சுகாதார நடைமுறைகள் இல்லாமை போன்றன சிறுவர்களின் கல்விகளுக்கு குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்துகின்றன என்பதை ChildFund நிறுவனத்தில் நாம் புரிந்துகொண்டுள்ளோம்.  முன்னேற்றப்பட்ட சுகாதார வெளிப்பாடுகள் மற்றும் வினைத்திறனான பாடசாலை செயற்பாடுகள் ஊடாக வாழ்க்கையை மேம்படுத்தல் என்ற வாக்குறுதியுடன் எமது பங்காளர்களுடன் இணைந்து செயலாற்ற முடிந்துள்ளது” என்றார்.

இத்திட்டத்துக்கு ChildFund New Zealand நிறுவனம் நிதியுதவி (66,053,668 ரூபா) அளித்திருந்ததுடன், ChildFund Sri Lanka நிறுவனம் மற்றும் Action Unity Lanka நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நடைமுறைப்படுத்தியது. இதற்கான கருத்துருவாக்கம் மற்றும் தலையீட்டுக்கான வடிவமைப்பு என்பன ChildFund Sri Lanka நிறுவனம் மற்றும் Action Unity Lanka நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து Adventist Development and Relief Agency (ADRA) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது. 

”மிகவும் நடைமுறையான இந்தத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு பொருத்தப்பட்டுள்ள சுகாதார மற்றும் ஆரோக்கியத்துக்கான பிரிவுகள் இந்தப் பிள்ளைகளின் சுகாதார மற்றும் நலன்புரி ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியமானவை. இந்தப் பிள்ளைகளுக்கு சுகாதாரமான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு நியூசிலாந்து வழங்கிய நன்கொடை மற்றும் உதவிக்காக நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்” என இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எட்வேர்ட் அபல்டன் தெரிவித்தார்.

அரசாங்க நிறுவனங்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிராந்தியத்தின் சுகாதார மருத்துவ அதிகாரிகள், மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் எனப் பலரும் இத்திட்டத்துக்கு உதவியுள்ளனர்.

ஒரு பாடசாலைக்கான செலவை ஏற்றுக்கொண்ட மற்றும் கொவிட்-19 காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார வசதிகளை நன்கொடையளித்த Rotaract (Rotary) Club of Colombo West உள்ளிட்ட LSEG Technologies, Connect 2012, United Book Centre போன்ற  ஏனைய அனுசரணையாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஒன்றிணைந்த முயற்சியாலேயே இத்திட்டம் வெற்றியளித்துள்ளது. சமல் குருப்பு மற்றும் ஹசிதி சமரசிங்ஹ ஆகிய தனிப்பட்ட நபர்களின் நன்கொடைகள் தலா ஒவ்வொரு பாடசாலைக்கு உதவியிருப்பதுடன், அக்ஷிலா அனுராங்கி மற்றும் நண்பர்கள் பாடசாலையொன்றுக்கு உதவியதுடன், பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார வசதிகளை நன்கொடையளித்திருந்தனர்.

”ஆரோக்கியமான சூழல் மற்றும் வினைத்திறன் மிக்க வாழ்க்கைக்கு சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான கல்வி என்பன அடிப்படையான தேவைகளாகும். Rotary கழகம் கவனம் செலுத்தும் முக்கிய விடயங்களில் நீர் மற்றும் சுகாதாரம் என்பன ஒன்றாகும். ChildFund Sri Lanka நிறுவனத்துடன் இணைந்து  Rotaract Club of Colombo West ஆகிய நாம் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை சாதகமாக மாற்றும் வகையில் பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சுத்தமான தண்ணீரை அணுகுவதை உறுதிசெய்துள்ளோம்.  உட்கட்டமைப்பு மற்றும் பயிற்சிக்கான எமது பங்களிப்பு நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், எதிர்கால சந்ததியினர் பயனடைவதையும் உறுதி செய்கிறது” Rtr என பி.பி.உசாமா லியாயுதீன் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து மொனராகலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளுக்கான நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவதற்கு ChildFund Sri Lanka நிறுவனம் எதிர்பார்த்திருப்பதுடன், சிறுவர்களை சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதற்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குமாறு நன்கொடையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

கொவிட்-19 நெருக்கடி காலத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகத்துக்கும் உதவும் வகையில் இவ்வருட ஆரம்பத்தில் ChildFund Sri Lanka நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ‘Sri Lanka Gives Back’ திட்டம் வெற்றியளித்திருந்தது. கிடைக்கும் நன்கொடைக்கு சமமான அளவு ChildFund Sri Lanka நிறுவனத்தினால் நன்கொடை அளிக்கப்படும் திட்டத்தில் பங்கேற்குமாறு நன்கொடையாளர்கள் அழைக்கப்படுகின்றனர். 

பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கடந்த 40 வருடங்களாக நாட்டில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் முன்னணி சர்வதேச சிறுவர் அபிவிருத்தி அமைப்பே ChildFund Sri Lanka நிறுவனமாகும். சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, கல்வி, இளைஞர் தொழில்வாய்ப்பு மற்றும் தொழில்முனைவு, இயலாமையுடைய நபர்களை உள்வாங்குதல், சுற்றுச்சூழல் பேரழிவு அபாயத்தைக் குறைத்தல், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலில் வளர்வதை உறுதிசெய்தல் போன்ற விடயப்பரப்புக்களில் 10 மாவட்டங்களில் ChildFund நிறுவனம் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. நிறுவனம் பற்றிய மேலதிக தகவல்கள் மற்றும் அவர்களின் பணிகள் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள www.childfundsrilanka.org என்ற இணையத்தளத்துக்கு விஜயம் செய்யவும்.


Share with your friend