கோவிட்-19 தொற்றுநோய் போன்ற முன்னோடியில்லாத நெருக்கடியை உருவாக்கிய ஒரு சூழ்நிலைக்கு ஒரு தொழில்துறையின் பிரதிபலிப்பு மற்றும் விளைவு அந்த சவால்களை எதிர்கொள்ளும் மற்றும் அவற்றிற்கு எதிராக வலுவாக நிற்கும் துறையின் திறனுக்கு ஒரு சான்றாகும். இலங்கையின் ஆடைத் தொழிலைப் பார்க்கும் போது இந்தக் கருத்து கச்சிதமாகப் பொருந்துகிறது.
கோவிட்-19 ஆரம்ப அலையானது இலங்கையின் ஆடைத் தொழில்துறைக்கு பல சவால்களை ஏற்படுத்தியது. அந்த நெருக்கடிக்கு இலங்கையின் ஆடைத் தொழில்துறையின் பிரதிபலிப்பு அதன் நீண்டகால போட்டித்தன்மையை அதிகப்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய அடை அலங்கார (பேஷன்) தொழிற்துறையின் எதிர்காலம் மற்றும் செயற்பாடுகளை நோக்குவதன் மூலம் அதனை மீளக் கட்டியெழுப்ப முடியும் எனத் தோன்றுகிறது.
இந்த நெருக்கடிக்கு இலங்கையின் ஆடை பிரதிபலிப்பைப் மேம்படுத்தும் இரண்டு காரணிகள் உள்ளன. ஒன்று புத்தாக்கம் மற்றும் தொழில்துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறன். மற்றொன்று ஆடை உற்பத்தியாளர்களுக்கும் அவற்றை வாங்குபவர்களுக்கும் இடையிலான உறவின் அடிப்படையாகும்.
நிலவும் சூழ்நிலையின் காரணமாக, எதிர்கால ஏற்றுமதி ஆர்டர்கள் ஆறு மாதங்களுக்கு முன்பே ரத்து செய்யப்பட்டன, மேலும் ஆர்டர்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நிறுவனங்களுக்கு இல்லை. கோவிட்-19இன் விரைவான விரிவாக்கம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களுக்கான (PPE) அதிக உலகளாவிய தேவைக்கு வழிவகுத்தது. எனவே உற்பத்தியாளர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் (PPE) உற்பத்திக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் பல காரணங்களால் இது சவாலாக இருந்தது. தற்போதுள்ள வசதிகள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்கும், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு ஏற்ப உற்பத்தித் துறைகளை மாற்றுவதற்கு முன்பே தற்போது இருக்கும் ஊழியர்களுக்கு வசதிகளை வழங்குகையில் தற்போததுள்ள வசதிகளை எளிதாக்குவதற்கும் சவாலாக இருந்தது. மேலும், பல நிறுவனங்களுக்கு PPE தயாரிப்பில் குறைந்தளவு கூட அனுபவம் இல்லை, எனவே ஊழியர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த சிக்கல்களை சமாளித்து, PPE உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்த நேரத்தில் நிறுவனங்கள் உற்பத்தியாளர்களுக்கு வருவாயை வழங்குவதன் மூலம் தங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. அப்போதிருந்து, உற்பத்தியாளர்கள் புத்தாக்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக, வைரஸைத் தடுப்பதில் அதிக செயல்திறனை உறுதி செய்வதற்கான உயர்தர துணிகளின் உற்பத்தியைக் குறிப்பிடலாம். அதன்படி, உள்ளூர் ஆடை நிறுவனங்கள் சில மாதங்களுக்குள் உயர்தர PPEஐ உற்பத்தி செய்ய முடிந்தது.
ஆடை அலங்காரத் (ஃபேஷன்) துறையில், தொற்றுநோய்க்கு முந்தைய வளர்ச்சியானது சுழற்சி பாரம்பரிய வடிவமைப்பு செயல்முறைகளை நம்பியிருந்தது. அதாவது, வாங்குவோர் ஆடை / துணி மாதிரிகளைத் தொட்டு உணர விரும்பினர், ஆனால் இலங்கையில் வாங்குபவரின் அலுவலகங்கள் மற்றும் ஆடை நிறுவனங்கள் மூடப்பட்டதால் இது சாத்தியமில்லை. 3D மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி இலங்கை உற்பத்தியாளர்கள் இந்த சவாலை எதிர்கொண்டுள்ளனர். இந்த செயல்முறை தொற்றுநோய்க்கு முன்பே இருந்தது, ஆனால் அது அரிதாகவே பயன்படுத்தப்பட்டது.
3D தொழில்நுட்பத்துடன் கூடிய தயாரிப்பு மேம்பாடு, அதன் முழுத் திறனைப் பயன்படுத்தும் செயல்பாட்டில் பல மேம்பாடுகளைக் கொண்டு வந்தது. அதன்படி, தயாரிப்பு மேம்பாட்டு சுழற்சியின் காலம் 45 நாட்களில் இருந்து 7 நாட்களாக 84% குறைக்கப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டது தயாரிப்பு மேம்பாட்டுத் துறையின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது. அதையும் தாண்டி, ஸ்டார் கார்மென்ட் போன்ற ஆடை நிறுவனங்கள் மற்றும் பிற பெரிய ஆடை நிறுவனங்கள், வீட்டில் இருக்கும் போது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் போட்டோஷூட்களை (Virtual Photoshoots) எடுக்க டிஜிட்டல் 3D Avatarsகளைப் பயன்படுத்தத் தொடங்கின, தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட லொக்டவுன் நிலைமைகளின் கீழ் உண்மையான மாடல்களுடன் போட்டோஷூட்களை ஏற்பாடு செய்வது சவாலாக இருந்தது.
இந்த செயல்முறையின் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், எங்கள் வாங்குபவர்கள் / பிராண்டுகள் தங்கள் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முயற்சிகளைத் தொடர உதவியது. முக்கியமாக, இது ஒரு உற்பத்தியாளர் மட்டுமல்ல, இறுதி ஆடை தீர்வு வழங்குனராக இலங்கையின் நற்பெயரை மேலும் வலுப்படுத்துவதாகும்.
ஸ்டார் கார்மென்ட்ஸ் போன்ற இலங்கையின் ஆடைத் துறையில் முன்னணியிலுள்ளவர்கள் இப்போது மெய்நிகர் (Virtual) காட்சியறைகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட திட்டங்களை பரிசோதித்து வருகின்றனர். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் Virtual ஷோரூம்களில் முப்பரிமாண ஃபேஷன்களை பார்க்க முடியும். இந்த ஷோரூம்கள் வாங்குபவர்களின் உண்மையான ஷோரூம்களைப் போலவே இருக்கும். ஆடை நிறுவனங்களுக்கு அவர்களின் தயாரிப்பு மேம்பாட்டு திறன்களை மிகவும் திறம்பட காட்சிப்படுத்தவும் இது வழியமைக்கிறது.
உள்ளூர் ஆடை நிறுவனங்களின் தகவமைப்பு மற்றும் நெகிழ்ச்சி, மேம்பட்ட போட்டி மற்றும் வாங்குவோர் மத்தியில் தொழில்துறையில் நற்பெயர் மற்றும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த பிரதிபலிப்பை அதிகபட்சமாக பயன்படுத்தியுள்ளதுடன் பல தசாப்தங்களாக இலங்கை ஆடைத் துறை அதன் வாங்குபவர்களுடன் கொண்டிருக்கும் மூலோபாய பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை.வாங்குவோர் நம்பகமான நீண்ட கால பங்காளிகளாக கருதுவதால், உள்ளூர் ஆடை நிறுவனங்களுக்கு தீர்வுகளை கொண்டு வர ஒத்துழைக்க அதிக வாய்ப்புகளை இது வழங்கியது. பாரம்பரிய தயாரிப்பு மேம்பாடு மற்றும் 3D தயாரிப்பு மேம்பாட்டிற்கான விரைவான மாற்றம் இந்த விஷயத்தில் ஒரு எடுத்துக்காட்டு என்பது குறிப்பிடத்தக்கது.