SLIIT இன் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்களின் கடும் உழைப்பு மற்றும் சாதனைகளைக் கௌரவிக்கும் நிகழ்வான SLIIT பணியாளர் விருது இரவு 2023 நிகழ்வு மூன்று வருட இடைவெளியின் பின்னர் வெற்றிகரமா இடம்பெற்றது. அங்கீகாரம், பொழுதுபோக்கு மற்றும் தோழமை நிறைந்த மறக்கமுடியாத அனுபவங்களை வழங்கிய இந்த நிகழ்வு 2023ஆம் ஆண்டு டிசம்பர் 08ஆம் திகதி மாலை கொழும்பு ரமடா ஹோட்டலில் நடைபெற்றது.
உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட நோய் தொற்றுக் காரணமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படாத நிலையில் தமது சக பணியாளர்களின் இணையற்ற செயல்திறன் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பைக் கௌரவிக்கவும், மீண்டும் ஒன்றிணையும் ஆர்வத்துடனும் 400 பேர் இதில் கலந்துகொண்டனர். தொற்றுநோய் காலப்பகுதியில் எதிர்கொண்ட கணிசமான சவால்களைக் கையாழ்வதற்குப் பங்களிப்புச் செலுத்திய பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட அரங்கு நிறைந்த கரகோசம் SLIIT இன் பணியாளர் சமூகத்தின் போராடும் திறன் மற்றும் அர்ப்பணிப்பைப் பறைசாற்றும் வகையில் அமைந்திருந்தன.
கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்களுக்கு மூன்று பிரதான பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டதுடன், ஒவ்வொரு பிரிவும் மதிப்புவாய்ந்த நபர்கள் வழங்கிய பங்களிப்பை பல்வேறு நோக்கங்களில் கோடிட்டுக்காட்டும் வகையில் அமைந்தன. வருடத்துக்கான சிறந்த ஆய்வாளர், சிறந்த ஆசிரியர், சிறந்த ஒட்டுமொத்த திறமையாளர் என்ற பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு மட்டத்திலும் விருதுகள் வழங்கப்பட்டன.
ஏ-பிரிவின் வெற்றியாளர்களில் ஆண்டின் சிறந்த ஆய்வாளர் விருது – நில்மினி ரத்னாயக்க, SLIIT வணிகத் துறையின் விரிவுரையாளர், சிறந்த ஆசிரியர் விருது – ஷனித மிரிஹான, மனிதநேய மற்றும் விஞ்ஞான பீடத்தின் உதவி விரிவுரையாளர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
பி-பிரிவில் ஆண்டின் சிறந்த ஆய்வாளர் மற்றும் சிறந்த ஆசிரியர் விருது கலாநிதி சரித ஜயகுரு, மனிதநேயம் மற்றும் விஞ்ஞான பீடத்தின் உதவிப் பேராசிரியருக்கு வழங்கப்பட்டதுடன், சிறந்த ஒட்டுமொத்த திறமையாளர் விருது கலாநிதி அநுராதா ஜயகொடி, கணினிப் பீடத்தின் உதவிப் பேராசிரியக்கு வழங்கப்பட்டது.
சி-பிரிவில் ஆண்டின் சிறந்த ஆய்வாளர் விருது – பேராசிரியர் ருவன் ஜயதிலக, SLIIT வணிகத் துறையின் பேராசிரியர், சிறந்த ஆசிரியர் விருது – பேராசிரியர் ஷ்ரியானி பீரிஸ், மனிதநேயம் மற்றும் விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் மற்றும் ஒட்டுமொத்த திறமையாளர் விருது பேராசிரியர் ருவன் ஜயதிலக, SLIIT வணிகத்துறையின் பேராசிரியர் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
கல்விசாரா பணியாளர்களுக்கான விருதுகளில் ஏ பிரிவில் சிறந்த செயல்திறன் கொண்டவர் விருது – எம்.ஏ.ரத்னசிறி, வசதி முகாமைத்துவப் பிரிவு, பி பிரிவில், சிறந்த செயல்திறன் கொண்டவர் விருது – லஹிரு மதுஷங்க, முகாமைத்துவத் திணைக்களம், சி பிரிவில் சிறந்த செயல்திறன் கொண்டவர் விருது – புஷமல பெரேரா, சிரேஷ்ட நூலகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.
நடன நிழ்வு, இசை மற்றும் பெறுமதி மிக்க பல்வேறு பரிசுகளைக் கொண்ட விறுவிறுப்பான அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு ஆகியவற்றுடன் இரவு நிகழ்வு தொடர்ந்தது.
அங்கீகாரம், வளர்ச்சி மற்றும் சிறந்த உணர்வை வளர்ப்பதற்கான சூழலைத் தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்குப் பணியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் வெளிக்காட்டிய சாதனைகளைப் அவர்களுடன் இணைந்து நினைவுகூறும் நிகழ்வாக ளுடுஐஐவு பணியாளர் விருது இரவு 2023 அமைந்தது.