தொழில்நுட்ப வணிகம் மற்றும் சேவைத் துறையில் இலங்கையின் முன்னணி நிறுவனமான Ceylon Business Appliances (CBA) கணினி வசதிகள் குறைந்துள்ள பாடசாலைகளுக்கு கணினி மற்றும் டிஜிட்டல் உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் ஒரு பெருநிறுவன சமூக பொறுப்பு (CSR) திட்டத்தை சமீபத்தில் தொடங்கியது. Geekom நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் மூலம், கணினி வசதிகள் குறைந்துள்ள பாடசாலைகளுக்கு கணினிகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களை நன்கொடையாக வழங்கி குழந்தைகளின் கணினி அறிவை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.


அதன்படி, இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, கடவத்தை பெப்டிஸ்ட் ஆரம்ப பள்ளி (Kadawatha Baptist Pre-School) மற்றும் நெலும் வெஸ்ச மாதிரி ஆரம்பப் பள்ளி ஆகியவற்றுக்கு Mini PC கணினிகள் சமீபத்தில் வழங்கப்பட்டன.
இந்த நன்கொடைகள் மூலம், முன்பு ஒருபோதும் கணினியைப் பயன்படுத்தாத பல குழந்தைகளுக்கு கணினி கல்வியைக் கற்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த CBAஇன் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. ருவத் பிரனாந்து, “எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உண்மையான வெற்றி இலாபத்தால் அளவிடப்படுவதில்லை, ஆனால் வெற்றியால் அளவிடப்படுகிறது. எங்கள் எதிர்காலத்தை ஏற்கும் தற்போதைய பாடசாலை மாணவர்களுக்கு ஒரு சிறப்பான நாளை நல்க, இன்று அவர்களை வலுப்படுத்துவது அவசியம்” என்று கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “55 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைச் சந்தையில் செயல்பட்டு வரும் நாங்கள், கணிசமான நம்பிக்கையை நிலைநாட்ட முடிந்துள்ளது. நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டங்கள் மூலம், நாங்கள் நமது சமூகத்துடன் இணைந்து, நிறுவனம் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுகிறோம்” என்று குறிப்பிட்டார்.
குறிப்பாக, ஒரு கணினி கூட இல்லாத பாடசாலைகளுக்கு இந்த நன்கொடை ஒரு பெரும் பரிசாக அமைந்தது. இது பாடசாலைகளுக்கு கிடைத்த ஒரு மதிப்புமிக்க சொத்தாக மாறியது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த CBA இன் விற்பனைப் பிரிவின் தலைவர் திரு. ஹர்ஷிக பிரனாந்து, “இந்த பெருநிறுவன சமூகப் பொறுப்புத் திட்டத்தின் மூலம், குழந்தைகளுக்கு புத்தாக்கமான தொழில்நுட்பத்தை வழங்குவதை விட, அதில் நம்பிக்கையை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். முதல் முறையாக கணினியைப் பயன்படுத்தும் ஒரு குழந்தைக்கு அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாது, ஆனால் அதைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் முயற்சி செய்யும் இந்த நன்கொடைகள், அவர்களின் ஆர்வத்தின் மூலம் டிஜிட்டல் உலகத்தை நம்பிக்கையுடன் நோக்கி முன்னேறுவதற்கான சக்தியை அவர்களுக்கு வழங்குகின்றன.” என தெரிவித்தார்.
களனி வலய கல்வி அலுவலகம், பாடசாலை பாடத்திட்டத்தில் டிஜிட்டல் கல்வியைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டும் பாடசாலைகளை அடையாளம் காணுவதன் மூலம் இந்த திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்த பெரும் ஆதரவை வழங்கியது. மண்டல கல்விப் பணிப்பாளர் திருமதி. நில்மினி பெரேரா இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, CBA இன் தூரநோக்கு முயற்சி மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கணினிகள் வழங்கும் பணியைப் பாராட்டி தனது நன்றியைத் தெரிவித்தார்.
திரு. ருவன் பிரனாந்து, கணினிகள் நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்காக ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார்: “இந்த சிறிய கணினி, வாழ்க்கையில் பல கனவுகளையும் நம்பிக்கைகளையும் கொண்டுவரும் ஒரு வாய்ப்பாக அமையும் என நான் பிரார்த்திக்கிறேன். இதனுடன் கற்றுக்கொள்ளுங்கள். ஆராயுங்கள், வளருங்கள், நீங்கள் விரும்பும் வெற்றியை அடையுங்கள். ஆசிரியர்களே, பெற்றோர்களே, குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு சக்தியாக இருப்பதற்கு நன்றி. ஒன்றாகச் சேர்ந்து, அறிவார்ந்த மற்றும் வலுவான, கருணையுள்ள தூரநோக்குப்பார்வை கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குவோம்.” என குறிப்பிட்டார்.
மேலும், இந்த நிகழ்வை முன்னெடுத்து நடத்தியதற்காக தனது நிறுவனத்துடன் இணைந்துள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் திரு. ருவத் பிரனாந்து தனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்வுக்காக தனது நிறுவனத்துடன் இணைந்து உதவி செய்த Geekom நிறுவனத்திற்கும் திரு. ருவத் பிரனாந்து தனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்தார்.