டிஜிட்டல் வாழ்க்கைமுறை மற்றும் சுகாதாரத் தீர்வுகளை வழங்குவதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில், இலங்கையின் மாபெரும் வைத்திய முற்பதிவு வலையமைப்பும், SLT-MOBITEL இன் துணை நிறுவனமுமான eChannelling, புத்தம் புதிய One-touch Tele-Channelling சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்தச் சேவையினூடாக, வைத்தியருடன் ஒன்லைன் வீடியோ அழைப்பினூடாக தொடர்பை ஏற்படுத்தி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். நோயாளர்களுக்கு உள்நாட்டிலிருந்து அல்லது வெளிநாடுகளிலிருந்த வைத்தியர்களுடன் ஒன்லைனில் தொடர்பை ஏற்படுத்த முடியும் என்பதுடன், சௌகரியமான முறையில் பிரத்தியேகமான சேவைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
உயர் தரம் வாய்ந்த டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு தீர்வுகளை வழங்குவதற்கான உறுதி மொழியுடன், டிஜிட்டல் மயமாக்கத்தை நோக்கி இலங்கையை நகர்த்துவதில் பங்களிப்பு வழங்கி, ஒன்லைன் வீடியோ வைத்திய ஆலோசனை சேவைக் கட்டமைப்பை eChannelling தற்போது அறிமுகம் செய்துள்ளது. இதனூடாக நோயாளர்களுக்கு வைத்திய முற்பதிவு சேவைகளை சௌகரியமாக பெற்றுக் கொள்வதுடன், நவீன தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் பங்களிப்பு வழங்குகின்றது.
தொற்றுப் பரவல் காணப்பட்ட காலப்பகுதியில், தொலைதூர மருந்துச் சேவை வழங்கல் என்பது பல தனிநபர்களுக்கும், குடும்பங்களுக்கும் உயிர்காக்கும் சேவையாக அமைந்திருந்தது. தேசத்துக்கு பிரத்தியேகமான வைத்திய ஆலோசனை மற்றும் ஓரிடத்திலிருந்து ஓடியோ/வீடியோ வசதிகளினூடாக நோயாளர்களின் சுகாதார நிலைகளை கண்காணித்தல் போன்றவற்றை மேற்கொள்ள eChannelling ஆதரவளித்திருந்தது.
தொற்றுப் பரவலின் பின்னர், eChannelling இன் புதிய One-touch Tele-Channelling ஒன்லைன் வீடியோ ஆலோசனை தீர்வுகள் வழங்கல்கள் eChannelling App ஊடாக உள்நாட்டு மற்றும் சர்வதேச நோயாளர்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி, பதிவு செய்யப்பட்ட வைத்தியர்களுடன் வீடியோ அழைப்பினூடாக ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள உதவுகின்றது.
தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்தி, சுகாதார பராமரிப்புக்கான அணுகலை மேம்படுத்தி, eChannelling Tele- Channelling ஒன்லைன் வீடியோ ஆலோசனை வழங்கல் சேவையினூடாக, நோயாளர்களுக்கு பல்வேறு அனுகூலங்கள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்லைனில் காணப்படும் காணப்படும் வைத்தியர்கள், குறிப்பிட்ட வைத்தியரை தொடர்பு கொள்வதற்கான நேரம், ஒன்லைன் வைத்தியர்களுடன் முன்பதிவை ஏற்படுத்திக் கொள்ளல் போன்றவற்றை மேற்கொள்ள முடியும். தொலைபேசி ஊடான ஆலோசனை சேவைகளை வழங்குவதற்காக தம்மை பதிவு செய்து கொண்டுள்ள வைத்தியர்களுடன் முன்பதிவை மேற்கொள்ளும் வசதி நோயாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
மேலும், நோயாளி ஒருவர் முன்பதிவை மேற்கொண்டதும், அது தொடர்பில் வைத்தியருக்கு Doctor App ஊடாக அறிவுறுத்தல் வழங்கப்படுவதுடன், அவர்களின் பரஸ்பர தெரிவுக்கமைய நோயாளருடன் வீடியோ அழைப்பை மேற்கொள்வார். இந்த உள்ளம்சத்தினூடாக வைத்தியர்களுக்கு நோயாளர்களுடன் எங்கிருந்தும், எந்தநேரத்திலும், வெளிநாடுகளிலிருந்து கூட இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
பெருமளவு சௌகரியத்தை வழங்குவதுடன், நோயாளர்களுக்கு வைத்தியர்களுடன் இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாக முன்பதிவை மேற்கொள்ள முடியும். நோயாளர்களுக்கு உதவும் வகையில், மருத்துவ அறிக்கைகளை பகிர்ந்து கொள்ளும் வசதி காணப்படுவதுடன், வைத்தியர்கள் முன்னர் வழங்கியிருந்த மருத்துவ சிட்டைகளும் பேணப்படும். முன்பதிவு நேரம் வழங்கப்பட்ட காலப்பகுதியில், நோயாளருக்கு வைத்தியர் வீடியோ அழைப்பை மேற்கொள்வதுடன், ஆலோசனை நிறைவுறும் வரை குறித்த அழைப்பு தொடரும்.
மேலும், குறித்த ஆலோசனையின் நிறைவில் மருத்துவ சிட்டையை நோயாளருக்கு வைத்தியர் வழங்குவார். நோயாளருக்கு மேலதிக தெளிவுபடுத்தல்கள் தேவைப்பட்டால், குறித்த அழைப்பு நிறைவுற்று 24 மணி நேரத்தினுள் chat வசதியினூடாக அந்த வைத்தியருடன் தொடர்பை ஏற்படுத்தலாம். சிறந்த தொடர்பாடல் பதிவுகளுக்காக, வைத்தியருடன் முன்னர் பேணியிருந்த தொலைத்தொடர்பாடல் தொடர்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
App Store/Play Store இலிருந்து eChannelling App ஐ நோயாளர்கள் தற்போது டவுன்லோட் செய்து கொள்ளலாம். வைத்தியர்களுக்கு App Store/Play Store இலிருந்து eChannelling Pro என்பதை டவுன்லோட் செய்து கொள்ளலாம். eChannelling இணையத்தளமான www.echannelling.com என்பதில் பிரவேசித்து மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.