பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கையில் நாடு கடந்த கல்வி பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டது 

Share with your friend

உயர்கல்வியில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை அறிக்கை எடுத்தியம்புகிறது.

இலங்கையில் நாடு கடந்த கல்வியின் (TNE) தற்போதைய நிலை மற்றும் எதிர்கால சாத்தியங்கள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும் ஒரு முக்கிய அறிக்கையை பிரிட்டிஷ் கவுன்சில் இன்று வெளியிட்டது. இது மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

BMICH இல் நடந்த நிகழ்வில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதுடன் மற்றும் இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பேட்ரிக், கல்வி அமைச்சின் அதிகாரிகள், கல்விக் கொள்கை வகுப்பாளர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள், அரச மற்றும் அரச சார்பற்ற பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் அவுஸ்திரேலிய கல்விப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

மாண்புமிகு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இங்கு பேசுகையில் : “இலங்கையின் கல்வியறிவு வீதம் மற்றும் அடிப்படைக் கல்வியில் ஈர்க்கக்கூடிய முன்னேற்றங்கள் இருந்த போதிலும், உயர் கல்வி திறனில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. 171,532 தகுதியுள்ள மாணவர்களில் 44,000 பேர் மட்டுமே 2022 இல் அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றிருந்தனர். தனியார் உயர்கல்வி மற்றும் நாடு கடந்த கல்விக்கான வளர்ந்து வரும் தேவை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. “இலங்கையின் உயர்கல்வித் துறையில் நாடு கடந்த கல்வியானது எவ்வாறு இடைவெளியைக் குறைக்க முடியும் என்பதை இந்த அறிக்கை தெள்ளத்தெளிவாக உணர்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலின் வதிவிடப் பணிப்பாளர் ஓர்லாண்டோ எட்வர்ட்ஸ்தெரிவிக்கையில்: ” இந்த அறிக்கையானது தெற்காசியாவில் நாம் எல்லை தாண்டிய பங்குடைமை மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் அதே வேளையில், சர்வதேச கல்வியின் அணுகல் மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் மேற்கொண்டு வரும் ஒத்துழைப்புகளுக்கு சாட்சியாகும்.2022-2023 ஆம் ஆண்டில் இலங்கையானது ஐக்கிய ராஜ்ஜியத்தில் [UK] நாடுகடந்த கல்விக்கான மையமாக மாறியுள்ளது. இதற்கிணங்க UKயில் நாடு கடந்த கல்விக்கான இரண்டாவது பாரிய நாடாக வளர்ச்சியடைந்துள்ளது. அதாவது UK யில் நாடு கடந்த கல்வியில் 50% அதிகரிப்புடன் உலகளவில் அனைத்து UK நாடு கடந்த கல்விக்கான பதிவுகளில் 10%-ஐ கிட்டத்தட்ட 54,000 ஆகக் கொண்டுள்ளது.உயர்கல்வி அணுகலில் உள்ள இடைவெளியைக் குறைப்பதிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதிலும் நாடு கடந்த கல்வியின் மகத்தான ஆற்றலை இந்த ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.”

“தர உத்தரவாதம் மற்றும் ஒழுக்காற்று திட்டப்பணிகள் போன்ற முக்கிய சவால்களை எதிர்கொள்வதன் மூலம், இலங்கை நாடுகடந்த கல்வியின் நன்மைகளை முழுமையாகப் பயன்படுத்தி உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி சூழலை உருவாக்க முடியும்.”

டைம்ஸ் உயர் கல்விக்கு பிரிட்டிஷ் கவுன்சிலால் வழங்கப்பட்ட இந்த அறிக்கை, இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச தகுதிகளுக்கான அணுகலை வழங்குவதில் நாடு கடந்த கல்வியின் குறிப்பிடத்தக்க பங்கை வலியுறுத்துகிறது. மற்றும் எல்லை தாண்டிய கல்வி பங்குடைமையின் நன்மைகள் இலங்கையில் நாடு கடந்த கல்வியை மேலும் வலுப்படுத்த இந்த அறிக்கை பரிந்துரைகளை வழங்குகிறது. இந்த பரிந்துரைகளில் சில:

நாடுகடந்த கல்வியின் தோற்றப் பரப்பு, அதன் அளவு, தரம் மற்றும் வெற்றி பற்றிய வெளிப்படையான மற்றும் விரிவான தகவல்களை அனைவரும் அணுகுவதற்காக நாடு கடந்த கல்வி செயல்பாட்டிற்கான பொது களஞ்சியத்தை நிறுவுதல் ஆனது மாணவர்கள் பொருத்தமான திட்டங்களைக் கண்டறிவதற்கும், எதிர்கால திட்டங்களை வடிவமைப்பதில் கொள்கை வகுப்பாளர்கள்/ வழங்குநர்கள் மற்றும் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப மூலோபாய சீரமைப்புக்கு முடிவெடுப்பதற்கும் இது உதவும்.

*தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் மூலோபாய நாடு கடந்த கல்வியின் மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் நாடு கடந்த கல்வி செயல்பாட்டிற்கான ஒரு பொது களஞ்சியத்தை நிறுவுதல்

*அனைத்து உயர்கல்வி திட்டங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட நாடு தழுவிய தர உத்தரவாத அமைப்பை உருவாக்குதல் மற்றும் உள்நாட்டு உயர்கல்வி தரநிலைகளுடன் நிலைப்பேற்றினை உறுதிசெய்ய தேசிய தகுதிகள் கட்டமைப்பில் நாடு கடந்த கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்தல். 

*நாடு கடந்த கல்வி தொடர்பான சேவைகளை மேம்படுத்துவதில் வலுவான ஆதரவு தளமாக பொது-தனியார் பங்குடைமைகளை ஊக்குவித்தல்.

*UKயின் நாடு கடந்த கல்வி சலுகைகளை கொழும்புக்கு அப்பால் விரிவுபடுத்துதல், சிறந்த புவியியல் விநியோகம் மற்றும் உயர்கல்வியை அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு அதிக கிளை வளாகங்களை நிறுவுதல். 

*ஒட்டுமொத்த மாணவர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு முக்கியமானதாக இருக்கும் மதிப்பீட்டுத் திட்டங்களைப் பன்முகப்படுத்துதல் மற்றும் விரிவான மாணவர் ஆதரவு சேவைகளை வழங்குதல் போன்ற கல்விசார் மற்றும் கல்விசாரா அம்சங்களை மேம்படுத்துதல்.

இலங்கை, பிரிட்டிஷ் கவுன்சிலின் வதிவிடப் பணிப்பாளர் ஓர்லாண்டோ எட்வர்ட்ஸ் மேலும் தெரிவிக்கையில், “பிரிட்டிஷ் கவுன்சிலின் அறிக்கை இலங்கையின் நாடு கடந்த கல்வி பரப்பின் வளர்ச்சியில் முக்கியமானது. அதன் பரிந்துரைகளை நாங்கள் உன்னிப்பாக அவதானிப்போம். மேலும் எங்கள் நாடு கடந்த கொள்கைகளை முன்னோக்கி நகர்த்துவதில் செல்வாக்கு செலுத்த வழங்கப்பட்ட தகவல்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது தொடர்பாகவும் கவனம் செலுத்துவோம். 

முழு அறிக்கையையும் இங்கே பதிவிறக்கம் செய்யலாம்: https://www.britishcouncil.lk/programmes/education/comprehensive-report-transnational-education-sri-lanka


Share with your friend