பிரித்தானியா Liverpool John Moores பல்கைலக்கழகத்தின் சட்டமானிப்பட்டம் SLIIT இல் வழங்கப்படுவதுடன், இலங்கை சட்டக் கல்விப் பேரவையின் அங்கீகாரம் கிடைக்கிறது

Share with your friend

பிரித்தானியாவின் பெருமைக்குரிய Liverpool John Moores பல்லைக்கழகத்தின் சட்டமானி பட்டம் SLIIT இல் வழங்கப்படுவதுடன், இது இலங்கை சட்டக் கல்விப் பேரவையினால் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தைப் பெற்றள்ளது. இதன் மூலம் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிரித்தானியப் பட்டத்தை மாணவர்கள் பெற்றுக் கொள்வதுடன், இது சட்டக் கல்லூரியில் நுழைந்து இலங்கை உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்கான வழியையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது.

Liverpool John Moores பல்லைக்கழகத்தின் சட்டமானி பட்டம் முழு உரிமையுடைய மற்றும் தகுதியான சட்டப் பாடத்திட்டம் என்பதுடன், இது பட்டதாரிகளை உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் போட்டியிடும் சட்ட வல்லுனர்களாக மாற்ற முயல்கிறது. மேலும், இந்தப் பட்டமானது பிரித்தானியாவின் சட்டத் தர சபை மற்றும் சொலிசிட்டர்ஸ் ஒழுங்குமுறை அதிகார சபையின் அங்கீகாரம் பெற்றுள்ளது.

மூன்று வருட முழுநேரப் பாடநெறியான இந்தப் பட்டமானது ஆங்கிலச் சட்டம் தொடர்பான அடிப்படை குறித்து தெளிவான புரிதலை ஏற்படுத்துவது, மனித உரிமைகள், புலமைச் சொத்து, நிதி சார் குற்றங்கள் உள்ளிட்ட பரந்துபட்ட விடயதானங்கள் இதன் ஊடாக வழங்கப்படும். மேலதிக அலகுகள், தூண்டுதல், மத்தியஸ்தம் மற்றும் மருத்துவ சட்டக்கல்வி ஆகியவை மாணவர்களை சட்ட நடைமுறைக்கு வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன்,   அதே சமயம் திறமையான சட்ட வல்லுனர்களாக மாற்றவதற்கான அறிவை வழங்கும்.

SLIIT சட்டக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர்.நாகநாதன் செல்வகுமார் குறிப்பிடுகையில், “Liverpool John Moores  பல்லைக்கழகத்தின் சட்டமானி பட்டம் இலங்கை சட்டக் கல்விப் பேரவையினால் உத்தியோகபூர்வ அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது மாணவர்கள் சட்டத்தரணியாக வருவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு சர்வதேச அங்கீகாரத்துடன் வழி கிடைக்கிறது” என்றார்.

SLIIT இல் வழங்கப்படும் Liverpool John Moores  பல்லைக்கழகத்தின் சட்டமானிப் பட்டம் பல்லைக்கழக சட்டத்தின் கீழ் கல்சி அமைச்சின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், SLIIT ஆனது பொதுநலவாய பல்கலைக்கழக சங்கம் மற்றும் சர்வதேச பல்கலைக்கழக சம்மேளனம் ஆகியவற்றின் உறுப்பினராகும். 

இந்தப் பட்டத்தைத் தொடர்வதற்கான நுழைவுக்காக க.பொத. உயர்தரப் பரீட்சையின் ஒரே அமர்வில் சிறப்புச் சித்தியும், ஒரு சாதாரண சித்தி அல்லது க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் ஆங்கில பாடத்தில் சித்தி உடன் க.பொ.த உயர்தர (லண்டன்) பரீட்சை அல்லது Cambridge/Edexcel பரீட்சைகளில் சித்தி பெற்றிருப்பது தகுதியாக அமையும்.

இந்தப் பட்டத் திட்டம் தொடர்பில் மேலதிக தகவல்களை SLIIT இன் +94 0117544801 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் ijmu@sliit.lk என்ற மின்னஞ்சல் மற்றும் www.sliit.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்ள முடியும். 


Share with your friend