இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரித்தானிய இளவரசி மற்றும் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர், கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகத்துக்கு ஜனவரி 12ஆம் திகதி விஜயம் செய்திருந்தனர். இலங்கைக்கான தமது விஜயத்தின் போது பங்கேற்கவிருந்த தொடர் விஜயங்களின் அங்கமாக இந்த பயணம் அமைந்திருந்தது.
திக்ஹேன பாடசாலையின் மாணவர்களின் பாரம்பரிய நாட்டிய நிகழ்வுடன் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு அவர்கள் வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘Arches of Awe’ கண்காட்சியையும் அவர்கள் பார்வையிட்டனர்.
இந்த கண்காட்சியில் 1954 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய மகாராணி எலிசபெத் II மற்றும் எடின்பரோ டியுக் அவர்களை வரவேற்கும் முகமாக கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 21 தோரணங்களின் புகைப்படங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. பலநூற்றாண்டு காலம் பழமையான இந்த தோரணங்களை ஆசிய பிராந்தியத்தில் இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளில் அவதானிக்க முடியும். பாரம்பரிய சமய விழுமியங்களுடன் பிணைக்கப்பட்டிருக்கும் இந்த தோரணங்கள், அதிர்ஷ்டம், வெற்றி ஆகியவற்றைக் குறிப்பதுடன், விருந்தினர்களை வரவேற்கும் வகையிலும் அமைந்திருந்தன.
ஐக்கிய இராஜ்ஜியம் – இலங்கை இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 75 வருடங்கள் பூர்த்தியை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் பணியாற்றியிருந்த இலங்கையின் முன்னணி கலைச் சங்கங்களுடனான சந்திப்பொன்றும் இதனைத் தொடர்ந்து நடைபெற்றது. Museum of Modern Art (MMCA), The National Trust Sri Lanka, Design Development Corporation, Ceylon Theatres, Scope Cinemas, Agenda14 மற்றும் The Gratiaen Trust ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்தப் பங்காளர்கள் பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆதரவுடன் பின்வருவன அடங்கலாக பல திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்:
- இளம் சிறுவர்களுக்கான Camara Chica திரைப்பட தயாரிப்பு பயிற்சிப்பட்டறைகள், இதில் பங்கேற்றவர்கள் “சூழல்” எனும் தொனிப்பொருளில் விருது வென்ற ஆவணப்படங்களை தயாரித்திருந்தனர். (நிகழ்ச்சிநிரல் 14: கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம்)
- இலங்கையின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ‘1907 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்த ஸ்கொட்டிஷ் கலைஞர் எட்வர்ட் அட்கின்சன் ஹோர்னெல் கண்காட்சி” ஊடாக National Trust for Scotland இனால் புகைப்படங்கள் பகிரப்பட்டிருந்ததுடன், இவை யாழ்ப்பாணம் மற்றும் கண்டிக்கு விஜயம் செய்திருந்ததுடன், காலி மற்றும் மாத்தறைக்கும் விஜயம் செய்யவுள்ளன. (National Trust Sri Lanka)
- ‘88 Acres’ – புகழ்பெற்ற இலங்கையின் பெண் கட்டடக்கலைஞரான மினெட் டி சில்வா மற்றும் RIBA உடன் அவர் கொண்டுள்ள தொடர்புகள் பற்றிய கண்காட்சி (MMCA)
- விருது வென்ற பிரித்தானிய எழுத்தாளர்களான மொனிக் ரொஃப்பி மற்றும் சீதா பிராமச்சாரி ஆகியோரின் ஆக்கபூர்வ எழுத்தாற்றல் பயிற்சிப்பட்டறைகள் கொழும்பு, காலி மற்றும் பேராதனை பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக முன்னெடுக்கப்பட்டன. (Gratiaen Trust)
- விருது வென்ற திரைத் தயாரிப்புகளான, விருது வென்ற இலங்கையின் நடிகரான ஹிரான் அபேசேகர மற்றும் ஒதெல்லோ ஆகியோர் நடித்திருந்த Life of Pi ஆங்கில தேசிய திரை நேரடி காட்சிகள் (Ceylon Theatres)
- லண்டனின் ரோயல் ஒபெரா ஹவுஸினால், உலகத் தரம் வாய்ந்த பலே மற்றும் ஒபெரா – டேவிட் போவி நாட்டியங்களை இலங்கையின் திரைக்கு கொண்டு வந்திருந்தமை (Scope cinemas)
- கண்டி மற்றும் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இலங்கை இலக்கிய திருவிழாவில் பிரித்தானிய எழுத்தாளர்களான அனா மெகால்ஃவ் மற்றும் லுயிஸ் டி பேர்னியரஸ் ஆகியோரை உள்ளடக்கியிருக்கும் (Design Development Corporation)
பிரித்தானிய இளவரசி மற்றும் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரை பிரிட்டிஷ் கவுன்சில் கற்பித்தல் நிலையத்தைச் சேர்ந்த இளம் மாணவர்கள் வரவேற்றதுடன், அதனைத் தொடர்ந்து உபாலி ரத்நாயக்க (இலங்கை ஆங்கில உரையாடல் சங்கத்தின் தலைவர்) வரவேற்றிருந்தார். முன்பு முன்னெடுக்கப்பட்ட பொது பேச்சுப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு விருதுகளையும் வழங்கியிருந்தனர்.
வளர்ந்து வரும் நவநாகரீக அலங்கார வடிவமைப்பாளர்களையும் அவர்கள் சந்தித்திருந்தனர். இவர்கள் பிரித்தானியாவுடன் உறுதியான பிணைப்பைக் கொண்டுள்ளதுடன், ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருந்தனர். இவர்கள் தமது பணிகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், இலங்கையின் ஆடைகள், தொழிற்துறை மற்றும் நவநாகரீகத் துறை பற்றி பேசியிருந்தனர். பிரித்தானிய இளவரசி மற்றும் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர், இலங்கையில் பிரிட்டிஷ் கவுன்சில் 75 வருட கால சேவைகளை பூர்த்தி செய்துள்ளமையைக் குறிக்கும் நினைவுச்சின்னத்தையும் திரை நீக்கம் செய்திருந்தனர்.
இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில் பணிப்பாளர் ஒர்லான்டோ எட்வர்ட்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “பிரித்தானிய இளவரசி மற்றும் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரை இன்றைய தினம் வரவேற்பதில் மிகவும் பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கின்றோம். கொழும்பு அலுவலகத்துக்கான அவர்களின் விஜயத்தினூடாக பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு இரு முக்கிய மைல்கற்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2024 இல், நாம் இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலின் 75 வருட பூர்த்தியை கொண்டாடுகின்றோம். 1949 ஆம் ஆண்டில் இந்த அழகிய நாட்டில் எமது அலுவலகத்தை முதன் முதலில் ஆரம்பித்திருந்தோம். அத்துடன், 1934 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிரிட்டிஷ் கவுன்சிலின் 90 வருட பூர்த்தியையும் 2024 ஆம் ஆண்டில் நாம் கொண்டாடுகின்றோம். இலங்கையில் கடந்த 75 வருடங்களாக, முறைசார் மற்றும் முறைசாரா கல்வி வாய்ப்புகளினூடாகவும், கலாசார பரிமாற்றத்தினூடாகவும் பல இளம் மக்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு நாம் ஆதரவளித்துள்ளோம். நாம் மேற்கொள்ளும் வாழ்வை மாற்றியமைக்கும் செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை எமது பெருமைக்குரிய விருந்தினர்களுடன் பகிர்ந்து கொள்கின்றமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கின்றது.” என்றார்.