இலங்கையின் பாரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான ஈகோ ஸ்பிண்டில்ஸ், பிளாஸ்டிக் போத்தல்களை நேரடியாக நூல் அல்லது மோனோஃபிலமென்ட்டில் மீள்சுழற்சி செய்வதன் மூலம் பிளாஸ்டிக் கழிவு நிர்வகிப்புக்கு ஒரு நிலையான தீர்வைக் கொண்டு வந்துள்ளது. மீள்சுழற்சி செய்யப்பட்ட PET பிளாஸ்டிக் பின்னர் பின்னப்பட்ட துணி அல்லது தூரிகைகள் மற்றும் சுத்தப்படுத்தல் கருவிகளைத் தயாரிக்க பயன்படுகிறது. ஈகோ ஸ்பிண்டில்ஸ் மீள்சுழற்சி நடவடிக்கையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 90 மில்லியனுக்கும் அதிகமான PET பிளாஸ்டிக் போத்தல்களை நேரடியாக நூலாக மாற்றும் செயற்பாட்டை மேற்கொள்கின்றது. PET பிளாஸ்டிக்கின் சிறிய துண்டுகளிலிருந்து நேரடியாக நூல் உற்பத்தி செய்யும் வசதியுள்ள உலகின் இரண்டு தொழிற்சாலைகளில் ஒன்றுதான் ஈகோ ஸ்பிண்டில்ஸ். இந்த உருமாற்ற செயல்பாட்டின் போது, ஆற்றல் பயன்பாடு, கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு மற்றும் நீர் நுகர்வு ஆகியவற்றைக் குறைப்பது நிறுவனத்தின் நோக்கமாக மாறியுள்ளது.
BPPL ஹோல்டிங்ஸின் முழு உரிமம் பெற்ற ஈகோ-ஸ்பிண்டில்ஸ், உலகின் முதலாவது வர்த்தக ரீதியான Partially Oriented Yarn – POY வசதியை உருவாக்கியுள்ளது மற்றும் ஜவுளித் தொழிலில் நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்த அதிநவீன நூல் உற்பத்தியைப் பயன்படுத்தியுள்ளது. அண்மையில் சர்வதேச தொழில்நுட்ப மற்றும் பொறியியல் இதழின் கூற்றுப்படி, உலகளாவிய PET பிளாஸ்டிக் போத்தல் நுகர்வு 2021ஆம் ஆண்டுக்குள் 583.3 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது போத்தல்களை மீள்சுழற்சி செய்வது மற்றும் அவற்றுக்கு மதிப்பு சேர்க்க வேண்டியது அவசியம்.
இது குறித்து ஈகோ ஸ்பின்டில்ஸ் நூல் பிரிவின் பிரதம நிறைவேற்று அதிகாரி நாலக்க செனவிரத்ன கூறுகையில், ‘சராசரியாக, ஒரு PET பிளாஸ்டிக் போத்தில் இயற்கையான சூழலில் உக்கிப் போவதற்கு 1,000 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். ஆனால் இந்த பிளாஸ்டிக் பாட்டிலை ஒரு ஆடை / அணியாக நாம் மீள்சுழற்சி செய்தால், அது சுற்றுச்சூழலில் முழுமையாக உக்கிப் போவதற்கு 100 வருடங்களுக்கும் குறைவாகவே ஆகும். எனவே பிளாஸ்டிக்குகளை பொறுப்புடன் அகற்றி அவற்றை மீள்சுழற்சி செய்தால், அவை உக்குவதற்கு எடுக்கும் 900 ஆண்டுகளை நாம் தவிர்த்துக் கொள்ளலாம். நாங்கள் நூல் தயாரிக்க மீள்சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்துகிறோம், மற்றும் Ecos GreenTM, Ecos EvolveTM, Ecos OceanicTM, Ecos ShieldTM, Ecos AmyTM மற்றும் Ecos ChromaTM ஆகியவை எங்களது ஆறு முக்கிய தயாரிப்புகளாகும்.’ என அவர் தெரிவித்தார்.
‘பொது பொலியஸ்டர் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பாலிமர் சிப் உற்பத்தி செயல்முறையை அகற்றுவதற்கான தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது. பிளாஸ்டிக் துண்டுகளை நேரடியாக POY த்ரெட்களாக மாற்றுவதன் மூலம் இதைச் செய்கிறோம். இங்கே இந்த மாற்ற செயல்முறை நிறைய ஆற்றலை பயன்படுத்துகிறது, நாங்கள் அதை அகற்றுகிறோம். எங்கள் PET மீள்சுழற்சி செயல்முறை உலகளவில் மிகக் குறைந்த கார்பன் தடம் விளைவிக்கும் என்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது மற்ற ஐந்து நூல் தயாரிப்புகளுடன், எங்கள் ‘Ecos GreenTM’ தயாரிப்பை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.’ என செனவிரத்ன மேலும் கூறினார்.
மீள்சுழற்சி செய்யப்பட்ட பாலியெஸ்டர்களின் உலகின் மிக பேண்தகைமை உற்பத்தியாளர் ‘Ecos EvolveTM’ என்றும் நிறுவனம் கூறுகிறது. பச்சை மற்றும் பழுப்பு நிற PET போத்தல்கள் இந்த வகை நூல் உற்பத்தியில் போத்தல்களின் இயற்கையான நிறத்தை சாயமிட மீள்சுழற்சி செய்யப்படுகின்றன.
“Ecos OceanicTM” என்ற மற்றொரு வகையானது, கடற்கரையிலிருந்து 50 கிலோ மீற்றர் சுற்றளவுக்குள் சேகரிக்கப்பட்ட PET பிளாஸ்டிக்கால் ஆனது. கடலில் இருந்து சேகரிக்கப்படும் மீள்சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து ஆடை தயாரிக்கும் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளி பிராண்டுகளுக்கு இந்த நூல்களை விற்கிறோம். QR குறியீட்டைக் கொண்ட ஒரு குறிச்சொல்லையும் நாங்கள் வழங்கியுள்ளோம், இதனால் வாடிக்கையாளர்கள் நாட்டின் பெருங்கடல்களில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் இடங்களைக் அடையாளம் காண முடியும்.’ என தெரிவித்தார்.மீள்சுழற்சி செய்யப்பட்ட PET நூலில் பொலியஸ்டர் நூலை ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளி பிராண்டுகளுக்கு விற்கிறது என்று குழு குறிப்பிடுகிறது. உலகப் புகழ்பெற்ற ஆடை உற்பத்தியாளர் மற்றும் இலக்கு என்ற வகையில், நூல் உற்பத்தியில் தொடங்கி, இலங்கையில் சுழற்சி விநியோகச் சங்கிலியை உருவாக்கி, இந்தத் துறையை வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இருப்பினும், நமது சுற்றுச்சூழலின் பாதுகாப்பை மனதில் கொண்டு இதை செய்ய விரும்புகிறோம். அதனால்தான் மீள்சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து நிலையான நூல் போன்ற தயாரிப்புகளை உருவாக்குவது மிகவும் முக்கியமானதாகிவிட்டது. மீள்சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் மதிப்பு அனைவருக்கும் தெளிவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.’ என குழும முகாமைத்துவப் பணிப்பாளர் அனுஷ் அமரசிங்க தெரிவித்தார்.