புதிய Galaxy S25 Series பற்றிய சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டஇணையப் பிரபலங்களும், Samsung உறுப்பினர்களும்

Share with your friend

இலங்கையர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்கும் வகையில் Galaxy S25 புதிய தயாரிப்புத் தொடர் அண்மையில் கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்வில் தொழில்துறை முன்னோடிகள், புதிய தொழில்நுட்பத்தில் ஆர்வலர்கள், Samsung உறுப்பினர்கள் மற்றும் John Keells Office Automation, Singer, Singhagiri, Damro, Softlogic Retail, Softlogic Mobile Distribution, Dialog மற்றும் SLT Mobitel ஆகிய விற்பனை முகவர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்க அர்ப்பணிப்புடன் செயல்படும் Samsung, இந்த அறிமுக நிகழ்வில் Galaxy AI, கேமரா தொழில்நுட்பம் மற்றும் பாவனையாளர் அனுபவம் குறித்த தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. அத்துடன், இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் Galaxy S25 புதிய தயாரிப்புத் தொடரை நேரடியாக அனுபவிக்க Samsung வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி துறையில் தங்களின் சிறப்பை மீண்டும் வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

AI ஆல் அதிகாரமளிக்கப்பட்ட அனுபவங்களை மேம்படுத்தி, பாவனையாளர்கள் தங்கள் தொலைபேசிகளுடன் தொடர்பு கொள்ளும் விதத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் Galaxy S25 Series இற்கு உள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் AI ஆல் இயக்கப்படும் அம்சங்களை மேலும் ஆராயும் வாய்ப்பைப் பெற்றதுடன், தங்களுக்கு அவசியமான அம்சங்கள், பல்பணி செயல்பாடுகள் மற்றும் வரம்பற்ற பாவனையாளர் இடைமுகம் குறித்த தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

Samsung இன் நீண்டகால உறுப்பினரான ஷெனல் டி சில்வா, இப்புதிய Samsung Series இல் உள்ள பின்னணி இரைச்சலை திறம்பட நீக்கும் புதிய ஆடியோ அழிப்பான் (Audio Eraser) அம்சத்தை மிகவும் பாராட்டினார்.

One UI 7 அம்சத்தைப் பற்றிக் குறிப்பிடட ரணோத் லக்ஷித, அதன் பயன்பாட்டின் எளிமையையும் எடுத்துரைத்தார். அத்துடன், இப்புதிய Series இன் பல்துறைத்திறன் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்க பரிந்துரைகளுக்கான AI ஆல் இயக்கப்படும் அம்சங்கள் குறித்து கலாநிதி சதேஷ் அபேசிங்க  தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதன் வசதியான புதிய வடிவமைப்பு, வளைந்த விளிம்புகள், இலேசான டைட்டானியம் சட்டகம் மற்றும் தெளிவான திரையுடன் புதிய வடிவமைப்பை மீண்டும் வாடிக்கையாளருக்குக் கொண்டு வந்துள்ள Galaxy S25 Ultra, அன்றாட வசதியை மேம்படுத்தும் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு அளித்து அவர்களின் மனதை உற்சாகப்படுத்தியது.

‘AI இயக்கப்படும் அம்சங்கள் உண்மையிலேயே சிறப்பானவை. சத்தத்தை நீக்குவதில் இருந்து உயர் பரிந்துரைகள் வரையிலான அனுபவங்கள் பாவனையாளர்களுக்கு அவசியமானவை’ என்று ஷெனல் டி சில்வா இது குறித்துக் கூறினார். கலாநிதி சதேஷ் அபேசிங்க இதன் எளிதில் பிடிக்கும் தன்மை மற்றும் எளிமையான வடிவமைப்பையும் சுட்டிக்காட்டினார். அதேபோல, கவர்ச்சிகரமான டைட்டானியம் சட்டகம் மற்றும் அதன் வலிமை குறித்து துஷான் குமார கருத்து தெரிவித்தார்.

‘சக்திவாய்ந்த மற்றும் அழகில் நிறைந்த தயாரிப்பாக Galaxy S25 Ultra-வைக் குறிப்பிடலாம். அழகான தோற்றத்துடன் கூடிய இது கையாளுவதற்கும் மிகவும் எளிதானது’ என்பது Galaxy S25 Ultra பற்றிய லக்ஷிதவின் கருத்தாகும்.

சாதாரண பாவனையாளர்களுக்கும், புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள படைப்பாளிகளுக்கும் இணையற்ற அனுபவத்தை வழங்கும் Galaxy S25 Ultra-வின் உயர்தர கேமரா, புகைப்படத்தின் புதிய பரிமாணங்களை ஆராய அவர்களுக்கு உதவுகிறது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ளவர்கள்; பரந்த அளவிலான அம்சங்களை உள்ளடக்கிய Galaxy S25 Ultra-வின் 50MP கேமராவை உன்னிப்பாக கவனித்தனர்.  மேக்ரோ புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள கலாநிதி சதேஷ் அபேசிங்க, லென்ஸின் தெளிவைச் சுட்டிக்காட்டினார், மேலும் நிபுண பெரேரா இரவு நேர புகைப்படம் (Nightography) எடுப்பதற்கான மேம்பாடுகளை வலியுறுத்தினார்.

உள்ளடக்க படைப்பாளிகளுக்காக, இதில் உள்ள வண்ண தரப்படுத்தல் மற்றும் தயாரிப்புக்குப் பிந்தைய வசதிக்காக LOG வீடியோ பதிவு செய்யும் அம்சத்தை துஷான் குமார பாராட்டினார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நிபுன் பெரேரா, ‘உள்ளடக்க படைப்பாளர்களாக எங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக LOG வீடியோ பதிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட night mode அம்சங்கள் இதில் அடங்கும். Samsung எங்கள் தேவைகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டார்.

படைப்பாளர்கள் மட்டுமல்லாமல், இசை ரசிகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ள Galaxy S25 Series தயாரிப்புகள், அதன் AI தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றல் கருவிகளின் காரணமாக அவர்களின் அசைக்க முடியாத கவனத்தை ஈர்த்துள்ளது.

இலங்கையின் பிரபல கலைஞர்களில் ஒருவரான ஜெஹான் ப்ளொக், Galaxy S25 இன் AI அம்சங்களை ஒரு ‘game-changer’ என அறிமுகப்படுத்தினார். டினோ கொரேரா, அதன் Gemini AI அம்சம் பற்றி கருத்து தெரிவிக்கும்போது, அதன் படைப்பாற்றல் மற்றும் பல்துறை செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து பாராட்டினார்.

15 ஆண்டுகளாக Samsung பாவனையாளராக இருக்கும் இசைக் கலைஞர் ரொமேன் வில்ஸ் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, படைப்பாற்றல் திறன்களை மேம்படுத்தும் சமீபத்திய Samsung Series இன் கேமரா மற்றும் AI சாதனங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘நான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக Samsung ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி வருகிறேன். நீங்கள் இன்னும் Samsung ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிக்கு மாறவில்லை என்றால், நீங்கள் நிறைய விடயங்களை இழக்க நேரிடலாம்.’ என்று கூறினார். 

அதேபோல், Galaxy S2 தொடரிலிருந்து Samsung பாவனையாளராக இருக்கும் இலங்கையின் முன்னணி பாடகரான சனுக விக்ரமசிங்க, இசை மற்றும் உள்ளடக்க உருவாக்கத்திற்கான AI மற்றும் கேமரா மேம்பாடுகள் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் பேசினார்.

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி பயன்பாடு மற்றும் பொழுதுபோக்கிற்கான அத்தியாவசிய கருவியான Galaxy S25 மூலம் அது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பாடலாசிரியர் மனுரங்க விஜேசேகர கூறினார். அத்துடன், பாடகி உமாரா சிங்கவன்ச Samsung மீதான தனது நம்பிக்கையை உறுதிப்படுத்தி, அதன் வசதிக்காக நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கையின் மூத்த இசைக் கலைஞர் சந்தூஷ் வீரமன், ஒரு தனிப்பட்ட உதவியாளராக சிறந்த விடயங்களை ஒழுங்கமைத்து, Galaxy S25இன் உற்பத்தித் திறன் குறித்த தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இதனிடையே, முதல் முறையாக Samsung ஐ பயன்படுத்தும் பாதிய ஜயகொடி, AI ஆல் இயக்கப்படும் படைப்பாற்றலை அனுபவிக்க கிடைத்தது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றும், AI தொழில்நுட்பம் கலைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையின் நம்பர் 1 ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி வர்த்தகநாமமான Samsung, SLIM Sri Lanka விருதுகளில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ‘People’s Youth Choice Brand of the Year’ விருதைப் பெற்று, நாட்டின் மதிப்புமிக்க வர்த்தகநாமங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அனைத்து வயதினரையும் கொண்ட வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட Samsung, புதுமை, தரம் மற்றும் வரம்பற்ற பாவனையாளர் அனுபவத்தை வழங்குவதன் மூலம் Gen Z மற்றும் Millennials வயதுப் பிரிவினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

Galaxy S25 Series இன் தனித்துவமான AI அம்சங்கள், கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் சிறந்த புகைப்படத் திறன்களுடன் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்தின் புதிய சகாப்தத்தைத் ஆரம்பிக்கும் திறனைக் கொண்டுள்ளது. அதனுடன், ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்தின் எதிர்கால வாய்ப்புகளை மேம்படுத்தி, புதிய பரிமாணங்களைத் திறப்பதற்கு Samsung செயல்பட்டு வருகிறது.


Share with your friend