பெற்றோர் மற்றும் பாடசாலைகளுக்கு கட்டண வசதிகளை வழங்கும் StudyGuard தொகுப்பை அறிமுகப்படுத்த HNB Assurance உடன் இணையும் HNB

Share with your friend

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, பெற்றோர்கள் மற்றும் பாடசாலைகள் ஆகிய இருபாலருக்கும் பாடசாலைக் கட்டணத் தேவைகளின் சுமையை இலகுபடுத்துவதற்காக முழுமையான StudyGuard நிதி மற்றும் பாதுகாப்புப் தொகுப்பை (Package) அறிமுகப்படுத்தியுள்ளது.

HNB அஷ்யூரன்ஸ் உடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த தனிநபர் கடன் தொகுப்பு, அரைஅரச உதவியுடன் இயங்கும், தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளுக்கு அவர்களது பாடசாலைக் கட்டணத்தைச் செலுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. HNBஇன் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட வைபவத்தில் இந்த வசதி ஆரம்பிக்கப்பட்டது மற்றும் HNB பிரதிப் பொது முகாமையாளர்- சில்லறை மற்றும் SME வங்கிச் சேவைகள், சஞ்ஜேய் விஜேமான்ன, HNB Assuranceஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி லசித விமலரத்ன மற்றும் கேட்வே உட்பட நாடுமுழுவதிலுமுள்ள முன்னணி சர்வதேச மற்றும் தனியார் குழுவின் தலைவர் டொக்டர் ஹர்ஷ அலஸ், Alethea சர்வதேச பாடசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளரும் ஒருங்கிணைப்பு அதிபருமான அனித்ரா பெரேரா, ஸாஹிரா கல்லூரி அதிபர் ட்ரிஸ்வி மரிக்கார் மற்றும் Oasis சர்வதேச பாடசாலையின் அதிபர் சந்தியா ஹேவகே ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

“கல்வி என்பது முன்னேற்றத்திற்கான மிக அடிப்படையான பாதைகளில் ஒன்றாகும். எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், அதிகமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி பயணத்திற்கு நிதியளிக்க ஆதரவு தேவைப்படுவதை நாங்கள் அவதானித்தோம். இதைக் கருத்தில் கொண்டு, கட்டணம் வசூலிப்பதில் எந்தச் சிக்கலையும் சந்திக்காத பெற்றோர்கள் மற்றும் பாடசாலைகள் இரு பிரிவினருக்கும் பயனளிக்கும் வகையில் StudyGuard தொகுப்பைத் தொடங்கினோம். பெற்றோர்கள் ஒவ்வொரு காலத்திற்கும் மொத்தமாக செலுத்தும் சுமையைத் தவிர்க்கலாம் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பணத்தை செலுத்துகையில் அதனை தங்களது விருப்பத் தேர்வுக்கு ஏற்ற விதத்ததில் மேற்கொள்ள முடியும். மாறாக, பாடசாலைகள் தங்களின் தற்போதைய வருமானத்தை அதிகரிக்க பணப் புழக்கத்தின் உறுதியையும் பெற்றுள்ளன,” என HNBஇன் பிரதிப் பொது முகாமையாளர் – சில்லறை வணிகம் மற்றும் SME வங்கி சேவைகள், சஞ்ஜேய் விஜேமன்ன கூறினார்.

இந்த வங்கி வசதியானது உத்தரவாததாரர்கள் இல்லாமல் 5 மில்லியன் ரூபா வரை முற்பணமாக செலுத்த உதவுகிறது, ஒவ்வொரு கல்வியாண்டின் ஆரம்பத்திலும் பெற்றோர்கள் சார்பாக நேரடியாக பாடசாலைக்கு அதிகபட்சமாக 15 மில்லியன் ரூபாவுக்கு நீட்டிக்கப்படலாம் மற்றும் உத்தரவாததாரர்கள் தேவையில்லை. Admission, Donation மற்றும் Term Fees, Exam Fees உட்பட பாடசாலை தொடர்பான அனைத்துச் கட்டணங்களையும் இந்த தொகுப்பு உள்ளடக்கும். மேலும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஏழு ஆண்டுகளில் சிறந்த மீள்செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்ய முடிவதுடன், 1 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வசதிகளுடன் கடன் பாதுகாப்புக் காப்பீடு வழங்கப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், HNB Assurance StudyGuard பாதுகாப்புத் தொகுப்பையும் அறிமுகப்படுத்தியது, இது பெற்றோர், பாதுகாவலர் அல்லது பாதுகாவலரின் துரதிர்ஷ்டவசமான மரணம், மோசமான நோய் அல்லது முழுயாக செயலிழப்பு போன்றவற்றின் போது குழந்தைகளின் பாடசாலைக் கட்டணம் செலுத்தப்படுவதை இந்த திட்டம் உறுதி செய்கிறது. காப்பீட்டில் பாலிசிதாரரின் வயது மற்றும் குழந்தையின் பாடசாலைக் கட்டணத்திற்கு ஏற்ப ஒரு முறை பிரீமியம் செலுத்தப்படும்.“பாடசாலைக் கட்டணத்தைச் செலுத்தும் வசதியான மற்றும் எந்தவித இடையூறும் இல்லாத முறையை பெற்றோருக்கு வழங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பெற்றோர்கள் ஒவ்வொரு காலத்திற்கும் மொத்த தொகை செலுத்தும் சுமையைத் தவிர்க்கலாம் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்தும் தேர்வையும் பெறலாம். மாற்றாக, பாடசாலைகளின் தற்போதைய வருமானத்தை அதிகரிப்பதற்கு பணப்புழக்கத்திற்கான உத்தரவாதமும் உள்ளது” என HNB Assuranceஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி லசித விமலரத்ன தெரிவித்தார்.


Share with your friend