137 ஆண்டு கால வரலாற்றுடன், இந்தியாவின் முன்னணி, வங்கி அல்லாத நிதி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற Muthoot Finance மற்றும் இலங்கையிலுள்ள அதன் துணை நிறுவனமான Asia Asset Finance PLC ஆகியன தமது கூட்டாண்மையின் ஒரு தசாப்தகால நிறைவை பெருமையுடன் கொண்டாடுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஒத்துழைப்பு கடந்த ஒரு தசாப்த காலத்தில் இரு நாடுகளுக்குமிடையில் நிதிச் சேவைகளுக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்து, புத்தாக்கத்தை கொண்டு வந்து, நிதியியல்ரீதியான அரவணைப்பை வளர்த்து, நற்பயன்மிக்க முயற்சிகள் மூலமாக சமூகங்களுக்கு வலுவூட்டியுள்ளது.
மாற்றத்திற்கான பயணத்தில் சாதனை மைல்கற்கள் மற்றும் பெறுபேறுகள்
மகத்துவம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் மீது பகிரப்பட்ட அர்ப்பணிப்பினை வெளிக்காண்பித்து, சாதனைமிக்க மைல்கற்களை இக்கூட்டாண்மை நிலைநாட்டியுள்ளது. 2024 செப்டெம்பர் 30ம் திகதியில் உள்ளவாறு Asia Asset Finance PLC ன் மொத்த சொத்துத் தளமானது ரூபா 32.28 பில்லியன் (107.19 மில்லியன் அமெரிக்க டொலர்) தொகையாக அதிகரித்து, முன்னைய ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்கு 24.74% என்ற போற்றத்தக்க வளர்ச்சியை நிலைநாட்டியுள்ளது. கடன் துறையும் ரூபா 5.5 பில்லியன் (18.26 மில்லியன் அமெரிக்க டொலர்) தொகையால் வளர்ச்சி கண்டு, ரூபா 26.1 பில்லியன் (86.67 மில்லியன் அமெரிக்க டொலர்) மொத்த கடன் தளத்தையும் எட்டியுள்ளது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட நிறுவனத்தின் அணுகுமுறையையும், சந்தைத் தேவைகளுக்கேற்றவாறாக தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட புத்தாக்கமான கடன் தீர்வுகளை வழங்குவதில் அதன் வெற்றியையும் இப்பெறுபேறுகள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன.
நிறுவனத்தின் பங்கு மீதான வருவாய் 16.38% ஐ எட்டி, முன்னைய ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்கு 102% என்ற மகத்தான வளர்ச்சியைப் பிரதிபலித்துள்ளது. இந்த மகத்தான பெறுபேறுகள் Asia Asset Finance ன் வலுவான நிதியியல் மூலோபாயத்தையும், தன்னுடைய பங்குதாரர்களுக்கு மதிப்பை வழங்குவதை முன்னெடுப்பதில் அதன் ஆற்றலையும் வெளிக்காண்பிக்கும் அதேசமயம், நிலைபேணத்தக்க வளர்ச்சியின் மீது வலுவான கவனம் செலுத்தியுள்ளதையும் காண்பிக்கின்றது.
தாய்நிறுவன மட்டத்தைப் பொறுத்தவரையில், Muthoot Finance நிதித்துறையில் தொடர்ந்தும் தராதரங்களுக்கான ஒப்பீட்டு நியமங்களை தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது. நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் சார்ந்த அதன் திரட்டிய கடன், 31% வளர்ச்சியுடன் இந்திய ரூபா 1,041.49 பில்லியன் (12.6 மில்லியன் அமெரிக்க டொலர்) என்ற அசாதாரண மட்டத்தை எட்டியுள்ளது. இந்திய ரூபா 25.17 பில்லியன் (304 மில்லியன் அமெரிக்க டொலர்) வரிக்குப் பின்னரான இலாபத்தையும் நிறுவனம் பதிவாக்கியுள்ளது. நாளாந்தம் 250,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும், 7,097 இடங்களிலுள்ள கிளை வலையமைப்புடன், இந்தியாவிலுள்ள வங்கி அல்லாத நிதிச் சேவை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மத்தியில் மிகப் பாரிய தங்கக் கடன் சேவை வழங்குனராக தனது ஸ்தானத்தை Muthoot Finance ஆணித்தரமாக நிலைநாட்டியுள்ளது.
புத்தாக்கம் மற்றும் நிதியியல் அரவணைப்பை முன்னெடுத்தல்
நம்பிக்கை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றில் Muthoot Finance கொண்டுள்ள பாரம்பரியம் மற்றும் இலங்கை சந்தை குறித்து Asia Asset Finance கொண்டுள்ள ஆழமான அறிவு ஆகியவற்றின் கூட்டு பலத்துடன், பரந்த வகைப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட நிதித் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதற்கு இந்த ஒத்துழைப்பு வழிகோலியுள்ளது. இவற்றுள் தங்கக் கடன்கள், நிலையான வைப்புக்கள், குத்தகை, அடமான கடன்கள் மற்றும் டிஜிட்டல் நிதித் தீர்வுகள் ஆகியன அடங்கியுள்ளன. இந்த கூட்டுப் பலமானது பல்வகைப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளை திறன்மிக்க வழியில் தீர்த்து, சமூகங்கள் மத்தியில் நிதியியல் அரவணைப்பை முன்னெடுக்க இடமளித்துள்ளது.
நிறுவன சமூக பொறுப்புணர்வு முயற்சிகள் இந்த ஒத்துழைப்பின் அத்திவாரமாகக் காணப்படுவதுடன், சமுதாயத்தில் நேர்மறை விளைவைத் தோற்றுவிப்பதில் அர்ப்பணிப்பை வலியுறுத்துகின்றது. பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்டுவது முதற்கொண்டு, கிராமிய சந்தையும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவது வரை, இக்கூட்டாண்மையின் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகள் எண்ணற்ற வாழ்வுகளை நலன்பெறச் செய்து, வலுவூட்டல் மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை வளர்த்து வருகின்றன.
அடைவுமட்டம் மற்றும் நற்பயனை விரிவுபடுத்தல்
Asia Asset Finance PLC தற்போது இலங்கை எங்கிலும் 100 கிளைகளின் வலுவான வலையமைப்புடன் இயங்கி வருவதுடன், அனைவரும் அணுகுவதை உறுதி செய்து, வலுவான உள்நாட்டுப் பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. இந்த விசாலமான வலையமைப்பானது புத்தாக்கமான நிதித் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதுடன், அது தேவைகளை வழங்கும் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி வருகின்றது. நிறுவனத்தின் A+ என்ற Fitch கடன் தர மதிப்பீடு, மற்றும் “Great Place to Work” அங்கீகாரம் என்பன மகத்துவம் மற்றும் ஊழியர் ஈடுபாடு ஆகியவற்றில் அதன் அர்ப்பணிப்பை மேலும் நிரூபிக்கின்றன.
எதிர்காலத்தை நோக்கிய வளர்ச்சி
இந்த முக்கியமான சாதனை மைல்கல்லை இக்கூட்டாண்மை கொண்டாடுகின்ற தருணத்தில், இரு நிறுவனங்களும் எதிர்காலம் குறித்து சிறப்பான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன. டிஜிட்டல் மாற்றத்தை வலியுறுத்திய வண்ணம், தனது தீர்வுகள் மற்றும் சேவைகளில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, பாரம்பரிய நிதியியல் எல்லைகளை அகட்டுவதற்கு இக்கூட்டாண்மை தலைப்பட்டுள்ளது. இலங்கையில் பெண்களுக்கு வலுவூட்டுகின்ற முயற்சிகளில் கவனம் செலுத்தியுள்ளதுடன், சேவைகள் கிடைக்கப்பெறாத சமூகங்களை இலக்கு வைக்கும் திட்டங்கள் மூலமாக கிராமிய வாழ்வாதாரங்களை மேம்படுத்துவது தொடர்ந்தும் அதன் இலக்கின் மையமாகக் காணப்படும்.
Muthoot Finance Ltd நிறுவனத்தின் குழும முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ஜோர்ஜ் அலெக்சான்டர் முத்தூட் அவர்கள் இச்சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில், “வாழ்வுகளுக்கு வலுவூட்டி, சமூகங்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் எமது ஓயாத அர்ப்பணிப்பிற்கு இச்சாதனை மைல்கல் ஒரு சான்றாக உள்ளது. நம்பிக்கை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றியுள்ள கூட்டாண்மையொன்றை நாம் ஒன்றிணைந்து கட்டியெழுப்பியுள்ளோம். எதிர்வரும் காலங்களில் நாம் ஏற்படுத்தும் விளைவை இன்னும் ஆழமாக்குவதற்கு ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
Asia Asset Finance PLC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ரஜீவ் குணவர்தன இது குறித்து தனது கருத்துக்களைத் தெரிவிக்கையில், “கடந்த ஒரு தசாப்தகாலத்தில் மகத்தான சாதனை மைல்கற்களை நாம் எட்டியுள்ளோம். எதிர்காலத்தைப் பொறுத்தவரையில், நற்பயன்மிக்க தீர்வுகளை வழங்கி, புத்தாக்கம் மற்றும் வளர்ச்சி நிறைந்த எமது பயணத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
வெற்றி மற்றும் குறிக்கோளைக் கொண்டாடுதல்
இக்கூட்டாண்மையின் சாதனைகளின் கொண்டாட்டம் மற்றும் எதிர்கால இலக்கு குறித்து வெளிப்படுத்தவுள்ள இந்நிகழ்வில், சிரேஷ்ட தலைவர்கள், தொடர்புபட்ட தரப்பினர் மற்றும் ஊடக பிரதிநிதிகள் என பல தரப்பினரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்தியா, இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் உள்ளவர்களும் கலந்துகொள்ள வாய்ப்பாக இந்நிகழ்வானது சமூக ஊடகத்தின் மூலமாக நேரலை செய்யப்படவுள்ளது. இந்த ஒத்துழைப்பின் வெற்றி வரலாறு குறித்தும் காண்பிக்கப்படும்.
Muthoot Finance மற்றும் Asia Asset Finance தொடர்பான விபரங்கள்
1887ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட Muthoot Finance ஆனது, இந்தியாவின் மிகப் பாரிய தங்கக்கடன் நிறுவனமாகத் திகழ்ந்து வருவதுடன், அதன் புத்தாக்கம்மிக்க நிதித் தீர்வுகள் மற்றும் சேவைகளுக்காக கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளது. இந்தியாவில் 7,000 க்கும் மேற்பட்ட கிளைகளுடன், தொடர்ச்சியாக மகத்துவத்தை வழங்கி வந்துள்ள இந்நிறுவனம், நிதிச் சேவைகள் துறையில் முன்னிலையாளராக நன்மதிப்பைச் சம்பாதித்துள்ளது.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள Asset Finance PLC, தங்கக்கடன்கள், குத்தகை, அடமானக் கடன்கள், நிலையான வைப்புக்கள் மற்றும் நவீன டிஜிட்டல் நிதித் தீர்வுகளை வழங்கி, வருகின்றது. இலங்கை எங்கிலும் இதன் வலுவான பிரசன்னம் மற்றும் “Great Place to Work” அங்கீகாரம் ஆகியன, மதிப்பினால் முன்னெடுக்கப்படுகின்ற நிதித் தீர்வுகளை வழங்கும் அதேசமயம், அரவணைப்பு மற்றும் புத்தாக்கம் கொண்ட கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் ஓயாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது.