இலங்கையின் சுகாதாரக் கல்வித் துறையின் முன்னோடியாக திகழும் International Institute of Health Sciences (IIHS) நிறுவனம் அதன் மாணவர்களுக்கு 16.5% கவர்ச்சிகரமான வட்டி விகிதத்துடன் மேலும் பல சலுகைகளுடனும் கல்வி கடன் பெறுவதற்கான வசதியை அளிக்கும் வகையில் DFCC வங்கியுடன் கூட்டிணைவொன்றை எட்டியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்துடன் இணைந்ததான உயர் கல்வி நிறுவனமான IIHS நிறுவனம் தாதியர் சேவையுடன் தொடர்புடைய கல்வித் தகைமைகளை பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மேற்படி கூட்டிணைவுக்கான நிகழ்வில் IIHS நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சிறப்பு மருத்துவ நிபுணர் டாம்டர் கித்சிறி எதிரிசிங்கவும் DFCC வங்கியின் வங்கியியல், பணவனுப்பல்கள், வர்த்தக அபிவிருத்தி பிரிவைச் சேர்ந்த திரு அன்டன் ஆறுமுகமும் கலந்துகொண்டனர்.
மேற்படி கூட்டிணைவின் மூலம் அங்கீகரிக்கப்பட்டதொரு நிதி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சுகாதாரத் துறைக்கு ஏற்புடைய தரமான கல்வித் தகைமைகளை பூர்த்தி செய்துக்கொள்வதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்கின்றது. கவர்ச்சிகரமான கடன் வசதிகளுடன் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்பு பாடநெறியொன்றை கற்பதற்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பானது, சுகாதாரத் துறையின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு உதவும். குறிப்பாக தற்போதைய பொருளாதாரச் சூழலில் மேற்படி கூட்டிணைவின் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு அனுகூலங்கங்கள் கிடைக்குமென IIHS நிறுவனம் தெரிவித்துள்ளது. பாடநெறி கட்டணத்தில் 100% கடனாக பெற முடிகின்றமை, 07 ஆண்டுகள் வரை மீளச் செலுத்துவதற்கான வசதிகள், (முதல் 18 மாதங்களில் வட்டியை மாத்திரம் செலுத்த வேண்டும்) மற்றும் மிக இலகுவாக சேவைகளை பெற்றுக்கொள்ள முடிகின்றமை ஆகியவை மேற்படி கூட்டிணைவின் மூலம் கிடைக்கும் முக்கிய நன்மைகளாகும். IIHS நிறுவனம் தாதியர் சேவை தொடர்பான விஞ்ஞான கௌரவமாணி பட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்பு பாடநெறிகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ள சூழலில் மாணவர்களுக்கு இவ்வாறான கடன் வசதிகளை பெறக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி புதிய கூட்டிணைவு தொடர்பாக கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் கித்சிறி எதிரிசிங்க உரிய தகைமைகள் மற்றும் பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் இதர சுகாதார சேவை வல்லுநர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெருமளவில் வரவேற்பு காணப்படுவதாகவும், தமது நிறுவனம் கொவென்ட்ரீ பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கும் இந்த பட்டப்படிப்பு பாடநெறிகள் தாதியர் துறையில் தொழிலை பெறுவதற்கு எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு நல்லதொரு தெரிவாக இருக்குமெனவும் தெரிவித்தார். “இலங்கையின் சுகாதார கல்வித் துறையின் முன்னோடியான IIHS நிறுவனத்துடன் இணைய கிடைத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கிறது. சுகாதாரத் துறையில் தொழில்முறை பயணமொன்றை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ள மற்றும் அதன் பொருட்டு தகைமைகளை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்த்துள்ள இளைஞர், யுவதிகளுக்கு IIHS நிறுவனம் மிகச் சிறந்ததொரு வரப்பிரசாதமாக இருக்கும்” என இங்கு கருத்து தெரிவித்த அன்டன் ஆறுமுகம் தெரிவித்தார்.