- சமீபத்திய வெளியீட்டில் AMD AI 300 தொடர் வலுவூட்டப்பட்ட ASUS Vivobook S 14 உள்ளடங்கும்
- உங்களின் அடுத்த Copilot+ PC, ASUS Vivobook S 15 மூலம் புரட்சிகரமான செயற்திறன்
- ASUS இன் சமீபத்திய சாதனங்கள் அதிநவீன AMD Ryzen™ AI 300 தொடர் மற்றும் Qualcomm இனுடைய Snapdragon X Plus செயலி மூலம் வலுவூட்டப்படுகிறது.
- Untra-portable வடிவம் மற்றும் நீண்ட கால பெட்டரி ஆயுள்.
இலங்கை, செப்டம்பர் 11, 2024: தாய்வானிய மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான ASUS, அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்தி உள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
AMD AI 300 தொடர் இனால் வலுவூட்டப்பட்ட Vivobook S 14 M5406 மற்றும் Qualcomm Snapdragon X Plus செயலியுடன் உங்கள் அடுத்த Copilot+ PC, Vivobook S 15 S5507. இரண்டு புதிய மடிக்கணினிகளும் அதிநவீன AI திறன்கள் மற்றும் புதுமை வாய்ந்த வடிவமைப்பு மூலம் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மறுவரையறை செய்கின்றன. இத் தயாரிப்புகளை ASUS பிரத்தியேக விற்பனை நிலையங்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வகை விற்பனை நிலையங்களிலும் கொள்வனவு செய்யலாம். Vivobook S 14 M5406 LKR 539,990 முதல் ஆரம்பமாகும். மேலும் Vivobook S 15 S5507 LKR 479,990 முதல் ஆரம்பமாகும்.
மேலதிக தகவல்களுக்கு – https://asus.click/ASUSAIpc
வெளியீடு பற்றி ASUS இலங்கையின் வியாபார அபிவிருத்தி முகாமையாளர் சாம் ஹுவாங் தெரிவிக்கையில், “ASUS இல், குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளர்களை மேம்படுத்துவதே எங்களது நோக்கமாகும். முதன்மைத் தொடரிலிருந்து எங்களின் சமீபத்திய வெளியீடுகளான – Vivobook S 14 M5406 மற்றும் Vivobook S 15 S5507, AI இனால் இயக்கப்படும் செயல்திறனை கொண்ட அதிநவீன Microsoft Copilot+ கருவியுடன் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகிறது. எங்களின் புதிய தயாரிப்புகள் உற்பத்தித்திறன், படைப்பாற்றல் ஆகியவற்றை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம்”.
Vivobook S 14 OLED M5406 வெறும் 1.39 cm மெல்லியதாகவும் 1.3 kg எடையுடனும் காணப்படுகிறது. இது AMD Ryzen™ AI 9 HX 365 processor மற்றும் மேம்பட்ட AI திறன்களை வழங்கும் 50 TOPS XDNA2 NPU ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பல்பணி ஆற்றலை, 24 GB LPDDR5X RAM மற்றும் 1TB M.2 NVMe™ PCIe® 4.0 SSD வழங்குகிறது. 14-inch ASUS Lumina OLED display தெளிவான மற்றும் துல்லியமான காட்சிகளை வழங்குகிறது. நீடிக்கப்பட்ட பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட இந்த மடிக்கணினி 75 WHr Battery, அதிவேகமான Type-C charging மற்றும் பல I/O போர்ட்களை வழங்குகிறது. இது single-zone RGB பின்னொளியுடன் கூடிய ASUS ErgoSense விசைப்பலகையைக் கொண்டுள்ளது.
நவீன ASUS Copilot+ PC, Vivobook S 15 S5507 ஆனது 45 TOPS அளவிலான AI செயல்திறனை வழங்கும் வகையில் அதிநவீன Qualcomm Snapdragon X Plus செயலியை ஒருங்கிணைந்த Adreno graphics மற்றும் Qualcomm Hexagon NPU இனை கொண்டுள்ளது. இது 16 GB LPDDR5X RAM மற்றும் 1 TB PCIe Gen 4.0 SSD ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதி மெல்லியதாகவும் 1.47 cm, இலகுரக 1.42 kg எடையுடன் மற்றும் single-zone RGB பின்னொளியுடன் கூடிய ergonomic விசைப்பலகையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் 15.6-inch 3K ASUS Lumina OLED panel ஆனது மென்மையான பார்வைக்கு 120 Hz refresh rate வீதத்தை வழங்குகிறது.
மேலதிக தகவலுக்கு
லோச்சனா பண்டார | Lochana_Bandara@asus.com