இளம் தொழில்முயற்சியாளர் திரு. ஹஷான் குணதிலக அவர்களின் தலைமையுடன், தூரநோக்குடைய நிறுவனமான Leaf Lanka International (Pvt) Ltd, இலங்கையில் ஆடம்பர விருந்தோம்பல் துறைக்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கவுள்ளது.

இந்நிறுவனம் மாத்தளையில் 17 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட ஆதனத்தை அண்மையில் கொள்முதல் செய்துள்ளதுடன், சூழல்நேய, ஆடம்பர விடுமுறை ஓய்விடத்தை அமைப்பதற்காக 6 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டுனான பாரிய திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது. மாலைதீவு முதலீட்டாளர்களின் பக்கபலத்துடன் மேற்கொள்ளப்படுகின்ற இந்த மூலோபாய நகர்வானது இலங்கையின் சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்கதொரு மேம்பாடாக மாறவுள்ளது.
செழுமை மற்றும் நிலைபேற்றியல் ஆகியவற்றின் தனித்துவமான கலவையுடன், மாத்தளை பிராந்தியத்தின் இயற்கை அழகில் திளைக்கச் செய்கின்ற மறக்க முடியாத அனுபவத்தை விருந்தினர்களுக்கு வழங்குவதே இச்செயற்திட்டத்தின் நோக்கம். திரு. குணதிலக அவர்களின் தொழில்முயற்சி ஆர்வம் மற்றும் நிலைபேற்றியல் கொண்ட திட்டத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியனவே இம்முயற்சியின் மையமாகக் காணப்படுகின்றன.
சூழல் மீதான தாக்கங்களை குறைப்பதற்காக, அதிநவீன சூழல்நேய தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை உள்ளிணைத்து இந்த சூழல்நேய விடுமுறை ஓய்விடம் அமைக்கப்படவுள்ளது. இச்செயற்திட்டம் அடுத்த கட்டங்களுக்கு நகரும் சமயத்தில், இப்பிராந்தியத்தில் பெரும் எண்ணிக்கையான வேலைவாய்ப்புக்கள் தோற்றுவிக்கப்படவுள்ளதுடன், பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்குமென என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த தீர்க்கமான முயற்சியின் மூலமாக இலங்கையில் சுற்றுலாத்துறையை புதிய மட்டங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு Leaf Lanka International (Pvt) Ltd தயாராக உள்ளது.