இலங்கையின் முன்னணி நிறுவனமான மார்க்ஸ்பன் குழுமம், 2025 ஜனவரி 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற 15வது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பெருமையுடன் பங்கேற்றது. இந்த நிகழ்வுக்கு 73,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்ததுடன் கண்காட்சி பெரும் வெற்றியுடன் நடைபெற்றது.

இலங்கையில் DOMA CTP 20 தானியங்கி அரிசி அரைக்கும் இயந்திரத்தின் ஒரே விநியோகஸ்தரான மார்க்ஸ்பன் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட், இந்த புத்தாக்கமான தொழில்நுட்பத்தை தொழில்முனைவோர், விவசாய வல்லுநர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களுக்கு காட்சிப்படுத்தியது. உயர்தரம்மிக்க அரிசியை உற்பத்தி செய்வதற்காக நெல்லில் இருந்து உமி மற்றும் தவிட்டை திறம்பட அகற்றக்கூடிய முழுமையான தானியங்கி இயந்திரமான DOMA CTP 20 மக்களின் கணிசமான கவனத்தை ஈர்த்தது. ஒரு மணி நேரத்திற்கு 1,000 கிலோகிராம் அரிசியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த இயந்திரம் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதோடு, தொழிலாளர்களுக்கான செலவுகள் மற்றும் மின்சார பயன்பாட்டையும் குறைக்கிறது. எனவே இது நவீன முறையில் அரிசி அரைப்பதற்கான செலவை குறைக்கக்கூடிய மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது.

மார்க்ஸ்பென் குழுமம் 192, 193 மற்றும் 194 ஆகிய கூடங்களில் தமது பல்வேறு வகையான மேம்பட்ட உபகரணங்கள் மற்றும் புத்தாக்கமான தீர்வுகளை காட்சிப்படுத்தி இருந்தது. இதில் மார்க்ஸ்பென் லேபிள்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் தயாரிப்புகளும் உள்ளடங்குகின்றன. இதில் அவர்களது உயர் செயல்திறன் கொண்ட பிஓஎஸ் டெர்மினல்கள், பார்கோட் லேபிள்கள், ஸ்கேனர்கள் மற்றும் பல்வேறு வர்த்தக தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அச்சு இயந்திரங்கள் என்பவை அடங்கும்.
சந்தையில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படாத தயாரிப்புகளுக்கு கண்காட்சியில் கிடைக்கப்பெற்ற வரவேற்பும் அபரிமிதமான ஆர்வமும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இது தற்போதுள்ள சந்தையின் தேவையைப் பற்றிய புரிதலைப் பெறவும், புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதில் அதன் நிலையை வலுப்படுத்தவும் மார்க்ஸ்பென் குழுமத்திற்கு உதவியது.

இந்த வெற்றிகரமான நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த மார்க்ஸ்பென் குழுமத்தின் தலைவர் திரு. அமில் கலங்கா, ‘யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது, வாடிக்கையாளர்களிடமிருந்து மிகப்பெரும் ஆதரவைப் பெற்றோம். எங்கள் இயந்திரங்கள், சூத்திரங்கள் மற்றும் பிற தயாரிப்புகளுக்கு கிடைத்த வரவேற்பு, வடக்கு மாகாண மக்கள் மார்க்ஸ்பென் வர்த்தக நாமத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது’ என்று கூறினார்.
கண்காட்சியில் பங்கேற்றமை மார்க்ஸ்பென் குழுமத்திற்கு கிடைத்த ஒரு சிறந்த வெற்றியாகும், இது வளர்ந்து வரும் சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதன் நற்பெயரை மேலும் உறுதிப்படுத்துகிறது.