யூனியன் அஷ்யூரன்ஸ் பாங்கசூரன்ஸ் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு

Share with your friend

2021 வருடாந்த பாங்கசூரன்ஸ் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களுக்கு யூனியன் அஷ்யூரன்ஸ் விருதுகள் வழங்கி கௌரவித்திருந்தது. இந்த நிகழ்வுக்கு “முதல் வகுப்பு சிறப்பு” என தலைப்பிடப்பட்டிருந்தது. 2022 மே மாதம் 21ஆம் திகதி இந்த நிகழ்வு இடம்பெற்றதுடன், துறையில் நிறுவனம் எய்தியிருந்த சிறந்த வளர்ச்சியை கொண்டாடியிருந்தது. இந்த நிகழ்வில் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர்/யூனியன் அஷ்யூரன்ஸ் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் சுரேஷ் ராஜேந்திரா மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2021 ஆம் ஆண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சிறப்பாக செயலாற்றியிருந்ததுடன், இலங்கையின் முதல் தர பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநராகவும் தெரிவாகியிருந்தது.  ரூ. 1 பில்லியனுக்கு அதிகமான ANBP பெறுமதியையும், 618 க்கு அதிகமான வங்கிக் கிளைகளை ஏழுக்கு அதிகமான முன்னணி வங்கி பங்காளர்களையும் தம் வசம் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுவூட்டுவது எனும் நிறுவனத்தின் உறுதி மொழிக்கு மேலும் பக்கபலமாக இது அமைந்திருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “பாங்கசூரன்ஸ் பிரிவில் சிறந்த சாதனையாளர்களுக்கு வாழ்த்துகள். சவால்கள் நிறைந்த ஆண்டிலும் பாங்கசூரன்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக செயலாற்றியிருந்ததை நான் அவதானித்தேன். புத்தாக்கமான தீர்வுகள், சேவைச் சிறப்பு மற்றும் டிஜிட்டல் சௌகரியம் போான்றவற்றினூடாக துறையில் முன்னோடிகளாக அமைந்திருந்தனர். இவர்களின் சிறப்பான செயற்பாட்டினூடாக, நாட்டின் பாங்கசூரன்ஸ் துறையில் புதிய யுகம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு இடைவெளியை குறைத்துக் கொள்வதிலும் பங்களிப்பு வழங்க முடிந்திருந்தது.” என்றார்.

கோம்ஸ் மேலும் குறிப்பிடுகையில், நிறுவனத்தின் பாங்கசூரன்ஸ் செயற்பாடுகளினூடாக இலாகாப் பெறுமதி பெருமளவு அதிகரித்திருந்ததுடன், நிலைபேறான வியாபார வளர்ச்சிக்கும் வழிகோலியிருந்தது என்றார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே குறிப்பிடுகையில், “சிறப்பாக செயலாற்றியிருந்த அனைவருக்கும் பாராட்டுகள். தமது நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு போன்றவற்றினூடாக இவர்கள் அனைவரும் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தனர். தாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் முன்னேற்றத்தை எய்துவதில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். எம்மிடம் உயர் திறன் படைத்த அணி காணப்படுகின்றது. சிறந்த தொழில்நுட்ப மற்றும் கணனி வசதிகளுடன், எம்மால் சிறந்த தீர்வுகளை வழங்க முடிகின்றது.” என்றார்.

நிறுவனத்தினால் வங்கிப் பங்காளர்களுடன் உறுதியான, தந்திரோபாய உறவுகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இவை வெற்றிக்கு பெருமளவில் பங்களிப்பு வழங்கியுள்ளன.

பாங்கசூரன்ஸ் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில், யூனியன் அஷ்யூரன்சினால் சிறந்த செயற்பாட்டாளர்கள் பலருக்கு கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. விருதுகள் வழங்கும் இரவின் மாபெரும் விருதான, சம்பியன் ஒஃவ் சம்பியன்ஸ் 2021 விருதை, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி நாளிகையின் நிமேஷா செவ்வந்தி வீரவரண ஜயசேகர வெற்றியீட்டியிருந்தார்.

விருதுகள் வழங்கும் நிகழ்வில், சிறப்பு விருதுகளை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி நாளிகையைச் சேர்ந்த ஹர்ஷ சுதர்ஷன விஜேசிங்க மற்றும் நிமேஷா செவ்வந்தி வீரவரண ஜயசேகர ஆகியோர் வெற்றியீட்டியிருந்தனர். இவர்கள் இருவருக்கும் தொழில்நிலை மேம்பாட்டுக் கல்வியைத் தொடர்வதற்கான புலமைப்பரிசில் வழங்கப்படும் என்பதுடன், வெளிநாட்டு சுற்றுலா, கம்பனியினால் நிர்வகிக்கப்படும் சொகுசு வாகனம் போன்றன வழங்கப்படும்.கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 17.9 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 49.7 பில்லியனையும், 2022 மார்ச் மாதமளவில் முதலீட்டு இலாகாவாக ரூ. 58.5 பில்லியனைக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், பல வருடங்களாக தொடர்ச்சியாக Great Place to Work© இனால் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், இலங்கையில் மில்லியன் டொலர் வட்ட மேசையில் (MDRT) முதல்தரத்தில் திகழ்கின்றது.


Share with your friend