யூனியன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 திட்டம், சுகாதாரக் காப்புறுதித் திட்டமாக ஒக்டோபர் 13 ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. முழுக் குடும்பத்துக்கும் பரந்தளவு சுகாதார பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. காப்புறுதிதாரரின் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் அடங்கலாக மூன்று தலைமுறைகளுக்கு அனுகூலங்களை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
யூனி்யன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 என்பது வாடிக்கையாளர்களின் அதிகரித்துச் செல்லும் சுகாதாரப் பராமரிப்பு செலவுகளை ஈடு செய்யும் வகையில் அமைந்துள்ளதுடன், குடும்பத்தின் எதிர்பாராத சுகாதார தேவைகளை ஈடு செய்யும் வகையில் அமைந்துள்ளது. HEALTH 360 தீர்வுடன், நுகர்வோருக்கு தமது அன்புக்குரியவர்களுக்காக சகாயமான முறையில் தற்போது சிறந்த சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
HEALTH 360 அறிமுகம் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “உங்கள் குடும்பம் என்பது உங்களின் மிகவும் பெறுமதியான சொத்தாகும். எந்தப் பெறுமதியும் அல்லது சொத்துகளும் அவர்களின் நலனை ஈடு செய்ய முடியாது. இன்று, நாம் பல சுகாதாரப் பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கின்றோம். அதிகளவில் எதிர்வுகூற முடியாததாக உள்ளதுடன், ஆதரவின்றி எமது குடும்பத்தாரின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை நிர்வகிப்பது சிக்கலாக அமைந்துள்ளது. இக்கால கட்டத்தில் 83 சதவீதமான இலங்கையர்கள் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 35 சதவீதமானவர்கள் இருதயக் கோளாறுடன் தொடர்புடையவர்களாக அமைந்துள்ளனர். வருடாந்தம் 4.7 மில்லியன் பேர் வரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். இதில் 25000 க்கும் அதிகமான நபர்கள் ஒவ்வொரு வருடமும் புற்றுநோயினால் இனங்காணப்படுகின்றனர். அவ்வாறான செலவுகளின் காரணமாக நபர் ஒருவரின் சேமிப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். HEALTH 360 போன்ற சிறந்த சுகாதார பாதுகாப்பினூடாக, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சிறந்த சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும். இதனூடாக உங்களுக்கு அவசியமான போது தங்கியிருக்கக்கூடிய பாதுகாப்பு வலையை வழங்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் HEALTH 360 ஊடாக நுகர்வோரின் முழுக் குடும்பத்தினதும் சுகாதார தேவைகளுக்கு ஒற்றை தீர்வு வழங்கப்படும் என்பதுடன், வைத்தியசாலை கட்டணங்கள், சத்திர சிகிச்சை, மருத்துவ செலவுகள், பிரசவ சேவைகள், நோயியல் நிபுணர்கள், பல் மற்றும் பார்வை தொடர்பான சேவைகள் போன்றவற்றுக்கு பரிபூரண தீர்வுகளை வழங்கும். 75 வயது வரை சுகாதார காப்புறுதியை வழங்குகின்றது. வருடமொன்றுக்கு 60 மில்லியன் ரூபாய் வரையான காப்பீட்டையும் வழங்குகின்றது. HEALTH 360 இனூடாக பிரத்தியேகமான, உள்வைக்கப்பட்ட பாரதூரமான நோய் காப்பீடு, வெளிநோயாளர் மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அனுமதி காப்பீடு போன்றவற்றுடன் தடுப்பூசிகள் மற்றும் நோய் இனங்காணல் பரிசோதனைகள் போன்றனவும் வழங்கப்படுகின்றன.
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 16.6 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 45.3 பில்லியனையும், 2021 ஜுன் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 300% ஐக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. 76 கிளைகளைக் கொண்டுள்ளதுடன், 3000க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்குவதுடன், தொடர்ச்சியாக ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் முதலீடுகளை மேற்கொண்டு, ஆயுள் காப்புறுதித் துறையில் எழும் மாற்றங்களுக்கேற்ப பணியாற்றிய வண்ணமுள்ளது.