லிங்க் நேச்சுரல்/ஸ்கை டி10 மகளிர் கிரிக்கெட் லீக்கை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்துவதற்கு ஸ்கை கிரிக்கெட் கிளப்புடன் லிங்க் நேச்சுரல் கைகோர்த்து இலங்கையில் உள்ள மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை வலுவூட்டியுள்ளது.லிங்க் நேச்சுரல்/ஸ்கை T10 மகளிர் கிரிக்கெட் லீக் என்பது திறமையான, தேர்ச்சிமிக்க மற்றும் ஆர்வமுள்ள மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு அவர்களின் கிரிக்கெட் சார்ந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்கக்கூடிய, ஒரு சரியான தருணத்தில் நிகழ்கின்ற பல நாட்களைக் கொண்ட நிகழ்வாகும். தற்போது தங்கள் கிரிக்கெட் திறமைகளை வெளிக்காட்ட வாய்ப்புக்கள் அற்ற அல்லது குறைவாகக் கிடைக்கக்கூடிய இந்தக் கிரிக்கெட் வீராங்கனைகளை, அதிக போட்டிமிக்கதும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டதுமான T10 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஊடாக அவர்களின் கிரிக்கெட் பயணத்தில் மேலும் முன்னேறுவதற்கு உதவுவதன் மூலம் அவர்களை இது வலுவூட்டுகின்றது..
இந்தக் கிரிக்கெட் களியாட்டத்தின் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வு அண்மையில் 8 அணித் தலைவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், ஏற்பாட்டுக் குழுக்கள் மற்றும் அனுசரணையாளர்களின் முன்னிலையில் ஸ்வஸ்தா பைலிங்க் நேச்சுரல், கொழும்பு 07 இல் வெகு விமர்சையாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, லிங்க் நேச்சுரல்/ஸ்கை மகளிர் T10 கிரிக்கெட் லீக் ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை ஹொரணையில் உள்ள ஒலிம்பிக் ஸ்கை கிரிக்கெட் கிளப்பில் ஸ்ரீலங்கா ஆர்மி, நிட்டம்புவ லேடீஸ், மூலை விக்டரி, கொழும்பு கோல்ட்ஸ். ஓல்ட் அனுலியன்ஸ், ரத்னாவலி, சமுத்ரா மற்றும் ஸ்கை ஆகிய 8 திறமையான மகளிர் கிரிக்கெட் அணிகளின் பங்கேற்புடன் 4 நாட்களாக நடைபெற்றது. அனைத்து அணிகளினதும் சிறந்த ஆட்டத்திறனுடன் கூடிய பல விறுவிப்பான ஆட்டங்களின் பின்னர், இறுதிப் போட்டியில் ஸ்கை அணியை வீழ்த்தி ஸ்ரீலங்கா ஆர்மி அணி சம்பியன்ஷிப்பை வென்றது.
அனைத்துப் பங்கேற்பாளர்களினதும் தேக ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான கூட்டாளராக, லிங்க் நேச்சுரல் ஒவ்வொரு அணிக்கும் ஒரு ‘ஆரோக்கியப் பொதி (Wellness pack)’ ஐ வழங்கியது. ஒவ்வொரு பொதியிலும் லிங்க் நேச்சுரலின் பாதுகாப்பான, தரமுறுதி செய்யப்பட்ட மற்றும் வினைத்திறனான தயாரிப்புகளான சமஹன், க்ராம்ப்கார்ட், ஸ்வஸ்தா அமுர்தா, எஸ்பி பாம் மற்றும் லிங்க் கேஷா ஆகியவை அடங்கியிருந்தன, இவை அனைத்தும் அணி உறுப்பினர்களுக்கு விளையாட்டின் போதும் அவர்களின் அன்றாட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்காகப் பயனளிக்கக் கூடியவை.
ஸ்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் ருச்சினி லியனகே தெரிவிக்கையில், “கிரிக்கட் மூலம் பெண்களை வலுவூட்டுவதற்கும் இலங்கை முழுவதும் உள்ள பெண் கிரிக்கெட் வீராங்கனைகளின் மறைந்திருக்கும் திறமைகளைக் கண்டறியும் நோக்கத்துடனும் இந்த நிகழ்வை நாம் ஏற்பாடு செய்துள்ளோம். “எங்களுடன் லிங்க் நேச்சுரல் கைகோர்த்திருப்பது எமக்குப் பெரியதொரு பலமாகும், மேலும் எங்கள் கூட்டாண்மை காரணமாக இந்த விடயம் நனவாகியிருக்கின்றது.”
லிங்க் நேச்சுரல் நிறுவனத்தின் வர்த்தக நாம முகாமையாளர் சனோதி ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், “நல்ல நோக்கத்துடன் கைகோர்க்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்தும் ஒரு அமைப்பாக லிங்க் நேச்சுரல், அத்தகைய நிகழ்வுகளுக்கு ஆதரவளிக்க நிச்சயமாக முன்வரும். இந்தத் திறமையான இளம் கிரிக்கெட் வீராங்கனைகள் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டுமென்று நாம் மனமார வாழ்த்துகின்றோம்.”
லிங்க் நேச்சுரல் என்பது ஆயுர்வேத மருந்துப் பொருட்களுக்கு மேலதிகமாக மூலிகையினாலான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மூலிகையினாலான தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் முன்னணி உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் ஆகும். ஆயுர்வேதத்தின் ஞானத்தை சமீபத்திய அறிவியல் முறைகள் மற்றும் இன்றைய தொழில்நுட்பத்துடன் இணைத்துப் பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் உயர்தர மூலிகைச் சுகாதாரப் பொருட்களை நுகர்வோருக்கு வழங்குவதன் மூலம், மக்கள் ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுடன் கூடிய மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ உதவும் உன்னதமான தத்துவத்தால் நிறுவனம் வழிநடத்தப்படுகிறது. அதன் முதன்மையான பிராண்டான லிங்க் சமஹன், 100% இயற்கையான உண்மையான மூலிகைப் பானமாகும், இது 14 நம்பகமான ஆயுர்வேத மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது, இது பல நூற்றாண்டுகளாகப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துகின்றது, மேலும் இதைத் தொடர்ந்து உட்கொள்ளும் போது எமது நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கின்றது. மேலும், நுகர்வோரின் விருப்பத்தைப் பொறுத்து சூடான நீர், தேநீர் அல்லது காபியில் அவரவர் வசதிக்கேற்ப இதனை அருந்தலாம். சுதந்த, ஸ்வஸ்தா அமுர்தா, ஸ்வஸ்தா திரிபலா, மஸ்ல்கார்ட், எஸ்பி பால்ம், கேஷா மற்றும் பல சர்வதேச அளவில் நம்பகமான மற்றும் நேர சோதனை செய்யப்பட்ட தயாரிப்புகளையும் லிங்க் நேச்சுரல் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தத் தயாரிப்புகள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் நுகர்வோருக்குத் தலைமுறை தலைமுறையாக முழுமையான ஆரோக்கியத்தை வழங்கியுள்ளன. எர்த் எசென்ஸ் (Earth Essence) என்பது , மூலிகையினாலான தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் முழுமையான வீச்சைக் கொண்ட, சில்லறை விற்பனைச் சந்தையில் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாகும்.