இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, Lady Ridgeway குழந்தைகள் மருத்துவமனையை மையமாகக் கொண்ட தனது நிறுவன ரீததியான அணுகுமுறையின் கீழ் சமீபத்திய திட்டத்தை மேற்கொண்டது. சமூகம் சார்ந்த திட்டங்களுக்கு அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் இத்திட்டத்தின் கீழ், ரிட்ஜ்வே மருத்துவமனையின் வார்டு எண் 9ல் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான வசதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
HNB FINANCE நடத்தும் நிறுவன ரீதியான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ், வார்டு எண். 9க்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், சிகிச்சை பெற்ற ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன. இதுதவிர இதன் கீழ் வார்டு எண் 9 பழுது பார்க்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது. மேலும், HNB FINANCE ஊழியர்கள் குழந்தைகளை பாட வைத்தும் நடனமாட வைத்தும் மகிழ்வித்தனர்.
இதன்போது, சிறுவர் வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன, தாதியர் எல். ஜயரத்ன மற்றும் HNB FINANCE PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
HNB FINANCE PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் இந்த நிறுவன சமூக அணுகுமுறை குறித்து கருத்து தெரிவிக்கையில், “இதுபோன்ற நிறுவன ரீதியான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் மூலம், மருத்துவம் மற்றும் தாதியர் ஊழியர்கள் தங்கள் மருத்துவப் பணிகளை எளிதாகச் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் குழந்தைகள் வழக்கத்தை விட கூடுதல் வசதிகளை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.” என தெரிவித்தார்.
HNB FINANCE தனது நிறுவன சமூகத் திட்டங்களின் கீழ், நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கப் போகும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குத் தேவையான வசதிகளையும் ஆதரவையும் வழங்கி அவர்களின் எதிர்கால இலக்குகளுக்கு அழைத்துச் செல்வதற்கு எப்போதும் பங்களித்து வருகிறது. மேலும், இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கம், உகந்த சிகிச்சையை வழங்குவதற்கு தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம் குழந்தைகளைப் பாதுகாப்பதாகும்.