விருந்தோம்பல் துறை கல்வியில் புரட்சிகரமான மாற்றம் – Cinnamon Hospitality Academy திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், முதற்தொகுதி மாணவர்களை உள்வாங்கியுள்ளது

Share with your friend

Cinnamon Hotels & Resorts மற்றும் Swiss Hotel Management Academy (SHMA) ஆகியவற்றின் புரட்சிகரமான முயற்சியான Cinnamon Hospitality Academy, தனது அங்குரார்ப்பண தொகுதியாக, 43 (நாற்பத்து மூன்று) மாணவர்களை வரவேற்று தனது தொழிற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளது. Ecole hôtelière de Lausanne (EHL) Professional Diploma வழங்கும் சர்வதேசரீதியாக அங்கீகாரம் பெற்ற தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (Vocational Education and Training – VET) டிப்ளோமா கற்கைநெறி மூலமாக, இலங்கையில் விருந்தோம்பல் துறை கல்விக்கு இக்கூட்டாண்மை மீள்வரைவிலக்கணம் வகுக்கவுள்ளது. விருந்தோம்பல் முகாமைத்துவத்திற்கு உலகின் முதற்தர பல்கலைக்கழகமாகத் திகழும் EHL, மாணவர்களுக்கு சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்படுகின்ற தகைமை கிடைப்பதை உறுதி செய்து, தலைசிறந்த நிபுணத்துவத்தை இக்கூட்டு முயற்சி கொண்டுவரவுள்ளது.                   

Cinnamon Hospitality Academy Classroom in session

இலங்கையில் எதிர்கால விருந்தோம்பல் துறை தலைவர்களுக்கு வலுவூட்டுவதில் சாதனை மைல்கல்லொன்றை Cinnamon Hospitality Academy இன் ஆரம்பம் குறித்து நிற்கின்றது. Cinnamon Hotels & Resorts பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம தொழிற்பாட்டு அதிகாரி ஹிஷான் சிங்கவன்ச அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “இலங்கையில் விருந்தோம்பல் துறை தொழில் வல்லுனர்களின் அடுத்த தலைமுறையை வளர்ப்பதில் முன்னின்று செயற்பட்டு வருகின்ற எமக்கு, Cinnamon Hospitality Academy இன் அங்குரார்ப்பணம் எமக்கு பெருமைமிக்க தருணமாக மாறியுள்ளது. SHMA உடன் ஒத்துழைத்து, EHL Professional Diploma வழங்கும் VET கற்கைநெறி, நிஜ உலகின் நடைமுறைப் பயிற்சியுடன் சர்வதேச தராதரங்களை இணைக்கும் வகையில் ஒப்பற்ற கல்வி அனுபவமாக அமையும். இம்முயற்சியானது தொழில்துறையில் புதிய தர ஒப்பீட்டு நியமங்களை நிலைநாட்டுவது மாத்திரமன்றி, இப்பிராந்தியத்தில் அபிமானம் பெற்ற தொழில்தருநர் என்ற எமது ஸ்தானத்தையும் வலுப்படுத்துகின்றது,” என்று குறிப்பிட்டார்.           

Senior Vice President Human Resources – Ishara Naufal

Cinnamon Hospitality Academy பின்பற்றும் கற்கைநெறி, Swiss Gold Standard Framework ஐ அடிப்படையாகக் கொண்டது என்பதுடன், சமையல் கலை (Culinary), உணவு மற்றும் பான வகை சேவை (Food & Beverage Service) மற்றும் ஹோட்டல் தொழிற்பாடுகள் (Hotel Operations) ஆகிய மூன்று விசேட துறைகளின் கீழ் கல்வியை வழங்குகின்றது. EHL வழங்கும் VET கற்கைநெறி, Cinnamon Hotels & Resorts இன் கீழ் கொழும்பிலுள்ள அதன் ஹோட்டல்களில் இரு தினங்களுக்கு கோட்பாடு மற்றும் நடைமுறை கல்வியுடனும், நான்கு தினங்களுக்கு ‘வேலையின் போதே கற்றுக்கொள்ளும்’ (on-the-job) பயிற்சியுடனும், ‘கற்றல், பணிபுரிதல் மற்றும் உழைத்தல்’ (Learn, Work & Earn) அடிப்படையில் பணிப்பயிற்சியை வழங்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றது.                     

A. Baur & Co. பிரதம நிறைவேற்று அதிகாரி/முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் SHMA பணிப்பாளர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் விருந்தோம்பல் கல்வியின் தராதரத்தை மேம்படுத்துவதில் பகிரப்பட்ட குறிக்கோளை இக்கூட்டாண்மை உறுதிப்படுத்துகின்றது. நன்கு கட்டமைப்பட்ட இக்கற்கைநெறி மற்றும் SHMA – EHL அங்கீகாரம் பெற்ற கற்கைபீட அங்கத்தவர்கள் வழங்கும் உயர் தர பயிற்சி ஆகியன சர்வதேச விருந்தோம்பல் துறையில் மிளிர்வதற்குத் தேவையான திறன்கள், மனநிலை மற்றும் அறிவு ஆகியவற்றுடன் இதனைப் பயிலும் மாணவர்கள் பட்டதாரிகளாக வெளிவருவதை உறுதி செய்யும். இலங்கையின் சுற்றுலாத்துறையின் எதிர்காலத்திற்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கவுள்ள திறன்மிக்க தொழிற்படையை உருவாக்குவதில் முதலாவது படியை நாங்கள் இன்று கொண்டாடுகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.      

Deputy Chief Executive Officer Chief Operating Officer – Hishan Singhawansa

Cinnamon Hospitality Academy இலுள்ள புகழ்பெற்ற கற்கைபீடமானது மிகவும் கடுமையான தெரிவு நடைமுறையைப் பின்பற்றுவதுடன், பயிற்றுவிப்பாளர்கள் அனைவரும் EHL அங்கீகாரம் பெற்றவர்களாக இருப்பதையும் SHMA உறுதி செய்கின்றது. பெயர் குறிப்பிடும் வகையில், தொழிற்துறை கற்கைபீட அங்கத்தவர்களாக சலன பெரேரா, டேனியலா முனசிங்க, தினேந்திர ஜெயசிங்க, நிஷாத பெரியப்பெரும, ரஜீவ மென்டிஸ் மற்றும் ரமேஷ் கொஸ்தா ஆகியோரும் உள்ளடங்கியுள்ளதுடன், பல தசாப்தகால நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் அவர்கள் வகுப்பறைகளுக்கு கொண்டுவருகின்றனர். கற்கைபீட அங்கத்தவர்கள் வருடாந்தம் கணக்காய்வுகள் மற்றும் தொடர்ச்சியான பயிற்சிக்கு உட்படுவதுடன், அதியுயர் சர்வதேச தராதரங்களை இக்கற்கைநெறி தொடர்ச்சியாக நிலைநிறுத்துகின்றது.          

EHL தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தலைமை அதிகாரி ஜென்ஸ்-ஹென்னிங் பீட்டர்ஸ் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “EHL வழங்கும் VET கற்கைநெறி, வெறுமனே கல்வி என்பது மாத்திரமன்றி, கோட்பாட்டு அறிவையும், நடைமுறை அனுபவத்தையும் ஒன்றிணைத்து, நிஜ உலகின் அமைப்பைக் கொண்டுள்ளது. Cinnamon Hospitality Academy ன் துணையுடன், இன்றைய வலுவான விருந்தோம்பல் தொழில்துறையில் வளம் காண்பதற்குத் தேவையான திறன்களை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களை நாம் தயார்படுத்துகிறோம். சினமன் ஹோட்டல்களுக்கு தேவைப்படுகின்ற தொழிற்படையை தயார்படுத்துவதே இக்கூட்டாண்மையின் நோக்கம் என்பதுடன், எமது மாணவர்கள் உயர்தர பயிற்சியைப் பெற்றுக்கொள்வதையும் நாம் உறுதி செய்கின்றோம். எதிர்காலத்தைப் பொறுத்தவரை, 2025 ஆம் ஆண்டளவில் 200 மாணவர்களை உள்வாங்கிக் கொள்ளும் வகையில் இக்கற்கைநெறியை விரிவுபடுத்துவதே எமது நோக்கம். நாம் ஒன்றாக இணைந்து தொழில்வாழ்வுகளை செதுக்குவது மாத்திரமன்றி, இலங்கையில் விருந்தோம்பல் துறையின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்,” என்று குறிப்பிட்டார்.              

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான சுவிட்சலாந்து தூதுவரான மேன்மை தங்கிய கலாநிதி சிரி வோல்ற் அவர்கள் இந்த கூட்டு முயற்சி குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “சுவிஸ்-இலங்கை இடையிலான வலுவான உறவுகளுக்கு சான்றாக இந்த கூட்டாண்மை அமைந்துள்ளதுடன், கல்வி மற்றும் விருந்தோம்பல் தொடர்பான மகத்துவத்தில் நாம் பகிர்ந்துகொண்டுள்ள அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது. இக்கற்கைநெறியுடன் இணைக்கப்பட்டுள்ள Swiss Gold Standard Framework ஆனது துல்லியம், தரம் மற்றும் புத்தாக்கத்தின் மதிப்புக்களை பிரதிநிதித்துவம் செய்வதுடன், இலங்கையில் இத்துறையில் நிச்சயமாக மாற்றத்தைத் தோற்றுவிக்கும்,” என்று குறிப்பிட்டார்.

இக்கற்கைமையம் தற்போது முழுமையாக இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், இக்கற்கைநெறியில் தாமும் இணைத்துக்கொள்ளப்படுவதை உறுதி செய்து கொள்ளும் வகையில், 2025 மார்ச் தொகுதிக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் www.cinnamonhotels.com/academy மூலமாக கிடைக்கப்பெறுகின்றன.   

Cinnamon Hospitality Academy இன் ஆரம்பம், இலங்கையில் விருந்தோம்பல் கல்வியில் புதிய அத்தியாயமொன்றைக் குறித்து நிற்பது மாத்திரமன்றி, இத்துறையில் மகத்துவம், புத்தாக்கம் மற்றும் அரவணைப்பு உள்ளடக்கம் ஆகியவற்றை வளர்க்கும் பரந்த அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது.

Cinnamon Hospitality Academy குறித்த விபரங்கள்:  

Swiss Hotel Management Academy (SHMA) உடனான கூட்டாண்மையுடன், Cinnamon Hotels & Resorts மேற்கொள்ளும் ஒரு முன்னோடி முயற்சியான Cinnamon Hospitality Academy, இலங்கையில் விருந்தோம்பல் கல்வியை மேம்படுத்துகின்றது. Ecole hôtelière de Lausanne (EHL) Professional Diploma வழங்கும் சர்வதேசரீதியாக அங்கீகாரம் பெற்ற தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை (Vocational Education and Training – VET) வழங்கி, புத்தாக்கமான, பயிற்சி அடிப்படையிலான முறைமையூடாக, உலகத்தரம் வாய்ந்த திறன்கள் மற்றும் அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்குகின்றது.         

சமையல் கலை, உணவு மற்றும் பான வகை சேவை மற்றும் ஹோட்டல் தொழிற்பாடுகளில் விசேட நிபுணத்துவம் கொண்ட வழிமுறைகளுடன், இந்த கற்கைமையம் வழங்கும் பயிற்சி அடிப்படையிலான கட்டமைப்பானது எதிர்காலத்திற்கேற்ற விருந்தோம்பல் துறை தொழில் வல்லுனர்களை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் 1 தர விருந்தோம்பல் முகாமைத்துவ பல்கலைக்கழகமான EHL, மற்றும் SHMA ஆகியவற்றுடனான ஒத்துழைப்புடன், இலங்கையின் விருந்தோம்பல் துறையை மேம்படுத்தி, இலங்கை சுற்றுலாத்துறையின் உலகளாவில் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றியமைப்பை முன்னெடுப்பதே Cinnamon Hospitality Academy ன் நோக்கமாகும்.   

கூடுதல் விபரங்களுக்கு, www.cinnamonhotels.com/academy.

Swiss Hotel Management Academy (SHMA) குறித்த விபரங்கள்:  

விருந்தோம்பலின் தாயகம் என அழைக்கப்படுகின்ற சுவிஸ் நாட்டு விருந்தோம்பலின் நேர்த்தியான மற்றும் தலைசிறந்த பாரம்பரியத்தை உள்ளடக்கிய உயர் தரக் கல்வியை இலங்கைக்கு கொண்டு வரும் SHMA, விருந்தோம்பல் துறையில் மாணவர்கள் வளம் பெறுவதற்காக, ‘கற்றுக் கொண்டே பிரயோகியுங்கள்’ (Learn & Apply) என்ற முறைமையுடன் நிஜ வாழ்க்கையில் சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த தொழில்சார் தொழிற்கல்வி மற்றும் நடைமுறைப் பயிற்சியை வழங்குகின்றது.

சுவிட்சலாந்து விருந்தோம்பலின் முன்னோடியாகவும், அடையாளமாகவும் விளங்கும் உலகின் 1 தர விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கை மையமான Ecole hôtelière de Lausanne (EHL) உடன் SHMA கைகோர்த்துள்ளதுடன், நாட்டில் Ecole hôtelière de Lausanne (VET by EHL) வழங்கும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கற்கைநெறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.        

VET by EHL குறித்த விபரங்கள்:   

EHL வழங்கும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கற்கைநெறியானது, EHL குழுமத்தினால் சுவிஸ் உரிமம் பெற்ற முறைமையாகும். உலகெங்கிலும் 25+ இடங்களில் முன்னணி பயிற்சிக் கூட்டாளர்களைக் கொண்ட சர்வதேச வலையமைப்பினூடாக, விருந்தோம்பல் துறையில் வெற்றிகரமான தொழில்களைக் கொண்டிருப்பதற்குத் தேவையான தொழிற்கல்வி தகைமைகள் மற்றும் அறிவின் தர ஒப்பீட்டு நியமத்தை இது பகிர்ந்துள்ளது. விமர்சன சிந்தனை ஆற்றல் மற்றும் புதிய போக்குகளை நடைமுறைப்படுத்துவதற்கான தயார்நிலை ஆகியவற்றுடன் சேவை மனப்பாங்கு கொண்ட, திறன் மிக்க விருந்தோம்பல் துறை தொழில் வல்லுனர்களாக அவர்கள் பயிற்றுவிக்கப்படுவதால், இதன் மூலமாக வெளிவரும் பட்டதாரிகளுக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. மிகச் சிறந்த கலப்பு முறை கற்றல் (நேரடி மற்றும் கல்வி) அணுகுமுறையைப் பயன்படுத்தி, நடைமுறைரீதியான கற்றலில் கவனம் செலுத்தியுள்ள VET by EHL ஆனது தனியான கற்கைநெறிகள் முதல் முழுமையான டிப்ளோமா வரை சமையல் கலை, சேவை மற்றும் அறைகள் குறித்த முழுமையான அறிவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை மாணவர்களுக்கு வழங்குகின்றது.       

உத்தியோகபூர்வ இணையத்தளம்: www.educationconsulting.ehl.edu


Share with your friend