“விவசாயத்தில் புரட்சி: சக்திமானின் பேலர் மற்றும் தான்மித்ரம் சுழல் கலப்பை இலங்கையில் அறிமுகம்”

Share with your friend

உலகின் மிகப்பாரிய சுழலும் உழவு இயந்திர உற்பத்தியாளரான சக்திமான் இந்தியா [Shaktiman India] என அழைக்கப்படும் Tirth Agro Technology Private Limited அதன் இரண்டு மேம்படுத்தப்பட்ட நவீன விவசாய இயந்திரங்களான சக்திமான் பேலர் மற்றும் 9 அடி “தான்மித்ரம்” சுழல் கலப்பை ஆகியவற்றை முதன்முறையாக இலங்கை சந்தைக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன விவசாய இயந்திரங்களின் பிரத்தியேக அறிமுகத்தினை கடந்த ஜூலை 31, 2025 வியாழக்கிழமையன்று கிளிநொச்சியில் நடைபெற்ற விவசாய இயந்திர செயல்விளக்க நிகழ்வில் ஓவர்சீஸ் ஓட்டோமோட்டிவ் பிரைவேட் லிமிடெட் நடத்தியது. இந்த நிகழ்வானது இலங்கை விவசாயத்தின் நவீனமயமாக்கலில் ஒரு துணிச்சலான புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாக அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில் அறிமுகத்தை சிறப்புற செம்மைப்படுத்துவதற்கும், தொழில்நுட்ப செயல்விளக்கங்கள் மற்றும் கள தொடர்புகள் மூலம் விநியோகஸ்தர்களுடனும் விவசாயிகளுடனும் நேரடியாக இணைந்து பணிகளில் ஈடுபடுவதற்கும் இலங்கையில் இருந்து செயற்படும் சக்திமான் இந்தியா நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளான ரகுபதி ரெட்டி மற்றும் உத்தம் குமார் நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரமுகர்கள், விவசாயிகள், விற்பனையாளர்கள் மற்றும் இயந்திர வல்லுநர்கள் உட்பட 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் வவுனியா மாகாண சபை உறுப்பினர் திரு. பி. தவராசா ஆகியோர் உள்ளடங்குவதுடன் அவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு விவசாய நிலப்பரப்பை புத்துயிர் பெறச் செய்வதில் இயந்திரமயமாக்கப்பட்ட தீர்வுகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி நிகழ்வை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

கிளிநொச்சியின் பரந்தன் சந்திக்கு அருகிலுள்ள இரண்டு கள பகுதிகளில் நேரடி செயல் விளக்க காட்சிகள் மற்றும் செயற்பாடுகள் நடத்தப்பட்டதையடுத்து பின்னர் கிளிநொச்சியில் உள்ள பாரதி உல்லாச விடுதியில் விளக்கக்காட்சிகள் மற்றும் மதிய உணவிற்காக விருந்தினர்கள் கூடினர்.

சக்திமான் பேலர், வைக்கோலை சிறிய, எடுத்துச் செல்லக்கூடிய கட்டுகளாக மாற்றுவதன் மூலம் பயிர் கழிவுகளை நிர்வகிப்பதற்கான ஒரு நிலையான தீர்வை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் இது கால்நடை தீவனம், உரம் தயாரித்தல், உயிரி ஆற்றல் மற்றும் பிற நடைமுறை பயன்பாடுகளுக்கு மீண்டும் பயன்படுத்தப்படும். வயல் எரிப்புக்கு ஒரு சாத்தியமான மாற்றீட்டை வழங்குவதன் மூலம், இந்த தொழில்நுட்பம் மிகவும் பொறுப்பான கழிவு முகாமைத்துவத்தை ஊக்குவிக்கிறது, இது இலங்கை நெல் வயல்களுக்கு இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயத்தில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது.

அடுத்து தான்மித்ரம் 9-அடி சுழல் கலப்பையானது, பாரிய நெல் வயல்களை மிகவும் திறமையாக தயார் செய்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் சிறந்த உழவு செயல்திறன், பரந்த பணி புரியும் தன்மை மற்றும் எரிபொருள் திறன் ஆகியவை விவசாயிகளின் நேரத்தையும் செயல்பாட்டு செலவுகளையும் மீதப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”இந்த உலகத்தரம் வாய்ந்த இயந்திரங்களை இலங்கைக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்துவதில்நாம் பெருமைப்படுகிறோம்,” என்று Overseas Automotive Pvt. Ltdடின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஸ்வினாஷ் ராமச்சந்திரன் கூறினார். “சக்திமான் பேலர் மற்றும் 9 அடி தான் மித்ரம் சுழல்கலப்பை ஆகியவை விவசாயிகள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், செயல்பாட்டு செலவுகளைக் குறைக்கவும், மேலும் நிலையான, தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்தை நோக்கி மாறவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வெளியீடு ஒரு ஆரம்பம் மட்டுமே – ஒவ்வொரு இலங்கைத் துறையிலும் உலகளாவிய புத்தாக்கங்களை அறிமுகப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம்.”


Share with your friend