வீசா ஏற்பாட்டில் ‘India on a Plate’: அட்டைதாரர்களுக்கு பிரத்தியேக உணவு விருந்து அனுபவம் 

Share with your friend

தனித்துவமான இந்த உணவு நிகழ்வை வழங்குவதற்காக Cinnamon Life உடன் கைகோர்த்துள்ளது  

டிஜிட்டல் கொடுப்பனவுகள் துறையில் உலகளாவில் முன்னிலை வகித்து வருகின்ற வீசா (Visa), தனது Visa Infinite அட்டைதாரர்களுக்கு ‘India on a Plate’ என்ற பிரத்தியேகமான, தனித்துவமான உணவு விருந்து அனுபவத்தை,  Cinnamon Life ன் ஒத்துழைப்புடன் அங்குள்ள Indiya Restaurant உணவகத்தில் ஏற்பாடு செய்துள்ளது. விசேடமாக வடிவமைக்கப்பட்ட, சமையல் வல்லுனரின் உணவு மேசை அனுபவ நிகழ்வானது 2025 ஜுலை 25 அன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன், தனது தாராளமான, செல்வச்செழிப்பான அட்டைதாரர்களுக்கு கலாச்சாரரீதியாக உள்ளார அனுபவிக்கும் தருணங்களில் ஆழமான வேரூன்றியுள்ள முடிவிலா வாழ்க்கைமுறையை வழங்குவதில் வீசா காண்பிக்கும் அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது.         

திறமைமிக்க, புகழ்பூத்த இந்திய சமையல் வல்லுனர் பைரவ் சிங் அவர்களின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வு, இந்தியாவின் செழுமைமிக்க சமையல் பாரம்பரியத்தினூடாக உணர்வுகளை ஈர்க்கின்ற பயணத்தை முன்னெடுப்பதற்கு விருந்தினர்களுக்கு வாய்ப்பளித்தது. பீஹார், லக்னோ, கோவா, கேரளா மற்றும் பல பிராந்தியங்களின் சுவைகளின் சங்கமமாக, நான்கு தனித்துவமான பரிமாறல் (four-course) இரவு உணவு அமையப்பெற்றதுடன், ஒவ்வொரு உணவும் சமையல் வல்லுனர் பைரவ் அவர்களின் நேரடி கதைசொல்லல் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களின் ஆழமான பகிர்வை வெளிப்படுத்தின. நுணுக்கமாக தயாரிக்கப்பட்ட Gujarati Amuse Bouche முதல் தைரியமான வளம்மிக்க Kashmiri Kukur Rogan Josh வரை உணவுப் பட்டியல் ஏக்கமும், புதுமையும் நிரம்பியதாக அமைந்தது.         

எதிலும் மிகச் சிறந்ததை மாத்திரம் நாடுகின்ற அட்டைதாரர்களுக்கு உலகெங்கிலும் உணவு விருந்து, சில்லறை வர்த்தகம், பிரத்தியேகமான பிரயாணம், மற்றும் ஏனைய வாழ்க்கைமுறை அனுபவங்களை வழங்குகின்ற Visa Infinite Privileges என்ற திட்டத்தின் கீழ் நீண்ட காலமாக திட்டமிடப்பட்டுள்ள அனுபவங்களின் ஒரு அங்கமாக ‘India on a Plate’ அமைந்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற இப்பிரத்தியேக ஒன்றுகூடல், தனது Infinite வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டுக்கு பொருத்தமான, சர்வதேச அளவில் உத்வேகமளிக்கின்ற மதிப்பை வழங்குவதற்கு வீசா தற்போது மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.      

வீசா இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உள்நாட்டு முகாமையாளர் அவாந்தி கொலம்பகே அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “இலங்கைக்கு ‘India on a Plate’ போன்ற உலகத்தரம் வாய்ந்த சமையல் அனுபவத்தை கொண்டு வருவதையிட்டு வீசா பெருமை கொள்கின்றது. Visa Infinite அட்டைதாரருக்கு தகுதியான, எல்லையற்ற வாழ்க்கையின் செழிப்பில், இந்த அனுபவத்தை வழங்குவதற்கு நாம் மேற்கொண்டுள்ள முயற்சி, எமது வாடிக்கையாளர்களை உண்மையில் ஈர்த்துள்ளது. தனித்துவமாக்கப்பட்ட மற்றும் ஆடம்பரமான அனுபவங்களை ஏற்பாடு செய்வதனூடாக, அன்றாட தருணங்களை அதிவிசேட நினைவுகளாக மாற்றியமைத்து, ஆடம்பர பிரயாணம் முதல் அதிசிறந்த உணவு அனுபவம் வரை பிரத்தியேகமான அணுகலை வழங்கி, Visa Infinite மூலமாக மகத்தான வரப்பிரசாதங்களுக்கு வழிவகுப்பதே எமது நோக்கம்,” என்று குறிப்பிட்டார்.      

மேசை வட்ட இடைத்தொடர்பாடல்கள், கவர்ச்சியான பரிமாறல் படைப்புக்கள், கதைசொல்லும் அட்டைகள் முதல் தனிப்பயனாக்கம் செய்யப்பட்ட சேவைகள் வரை ‘India on a Plate’ நிகழ்வானது, வெறுமனே நன்மைகள் என்பதற்கும் அப்பாற்சென்று Visa Infinite எத்தகைய வரப்பிரசாதங்களை வழங்குகின்றது என்பதை உண்மையாக வெளிக்காண்பித்துள்ளது. உணர்வுகளின் ஈடுபாட்டை வளர்த்து, புலன்களின் பிணைப்புக்களை ஆழமாக்கும் மறக்க முடியாத தருணங்களைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பினை இது வழங்குகின்றது.     

விருந்தினர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவங்களுடன் உணவு விருந்து, வடிவமைப்பு, மற்றும் விருந்தோம்பலைக் கலந்து, இலங்கையின் முதன்மையான வாழ்க்கைமுறை மற்றும் பொழுதுபோக்கு இடமாக மாற வேண்டும் என்ற Cinnamon Life ன் நோக்கத்தை இந்நிகழ்வு மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.   

வீசா குறித்த விபரங்கள்:

டிஜிட்டல் கொடுப்பனவுகளில் உலகளாவில் முன்னிலை வகித்து வருகின்ற Visa (NYSE: V), 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் நுகர்வோர்கள், வணிகர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையில் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கு அனுசரணையளித்து வருகிறது. தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் வளம் காண்பதற்கு இடமளித்து, புத்தாக்கம் மிக்க, சௌகரியமான, நம்பிக்கைமிக்க, மற்றும் பாதுகாப்பான கொடுப்பனவுகள் வலையமைப்பினூடாக உலகினை இணைப்பதே எமது நோக்கம். அனைவரையும் எங்கேயும் உள்ளடக்கின்ற, அனைவரையும் எங்கேயும் மேம்படுத்துகின்ற பொருளாதாரங்கள் பணவியக்கத்தின் எதிர்காலத்திற்கான அத்திவாரத்திற்கான அணுகலைக் கொண்டுள்ளன என நாம் நம்புகின்றோம். மேலதிக விபரங்களுக்கு Visa.com.


Share with your friend