வெபோமெட்ரிக்ஸில் SLIIT இன் தரவரிசையில் ஏற்படுத்திய தாக்கம் ஆராய்ச்சியின் சிறப்பைக் காண்பிக்கிறது

Share with your friend

சர்வதேச அரங்கில் இலங்கையின் உயர்மட்ட கல்வி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும், மற்றும் இணையத்தில் அதன் பிரசன்னம் மற்றும் ஆராய்ச்சியின் சிறப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் இலங்கையின் பாரிய அரச சார்பற்ற பட்டம் வழங்கும் நிறுவனமான SLIIT, வெபோமெட்ரிக்ஸ் நாட்டின் தரப்படுத்தல், 2022 தரப்படுத்தல் தாக்கத்தில் முன்னேறியுள்ளது.

அண்மைய தரப்படுத்தலின் அடிப்படையில் இலங்கையில் உள்ள உள்நாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் 16வது இடத்திலிருந்து 13வது இடத்துக்கு SLIIT முன்னேறியிருப்பதை வெபோமெட்ரிக்ஸ் சுட்டிக்காட்டுகிறது. முக்கியமாக, 2021 ஜுலையுடன் ஒப்பிடும்போது தாக்கம் ஏற்படுத்தும் பிரிவில் SLIIT 6வது இடத்திலிருந்து 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

ஸ்பெயினில் உள்ள சைபர்மெட்ரிக்ஸ் ஆய்வுகூடத்தால் 2004ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு தடவை வெளியிடப்படும் உயர்கல்வி நிறுவனங்களின் மிகப்பெரிய கல்வித் தரவரிசையாக வெபோமெட்ரிக்ஸ் அமைந்திருப்பதுடன், உலகளவில் பட்டியலிடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களின் செயல்திறன் பற்றிய நம்பகமான, பல பரிமாண, புதுப்பிக்கப்பட்ட மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்க ஒரு சுயாதீனமான, புறநிலை, இலவச, திறந்த அறிவியல் பயிற்சியை வழங்குகிறது. 

2022 ஜனவரியில் உலகெங்கிலும் உள்ள 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து உயர் கல்வி நிறுவனங்களின் இருப்பு, தாக்கம், சிறப்பு மற்றும் திறந்த தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் 31,000 கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்தது. 

முக்கியமாக, தாக்கக் குறிகாட்டியானது 50% தரப்படுத்தல் மற்றும் உள்ளடக்கங்களின் தரத்தைக் கவனத்தில் கொள்கிறது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இணைய எடிட்டர்களின் அளவுகோல்களின்படி வலைப்பக்கங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிறுவனத்தின் கௌரவம், கல்வி செயல்திறன், தகவலின் மதிப்பு மற்றும் சேவைகளின் பயன் ஆகியவற்றை அங்கீகரிக்க தாக்க தரவரிசை உதவுகிறது.

பட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர். ராஹுல அத்தலகே இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த ஆறு மாதங்களில் உலகத் தரவரிசையில் 1,000 இடங்களுக்கு அருகில் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்க சாதனையாகும், ஸ்கோபஸ் போன்ற புகழ்பெற்ற வெளியீடுகளின் அடிப்படையில் நாம் கல்வித் திறனில் முன்னேற்றம் கண்டுள்ளோம். தாக்கம் செலுத்தும் தரப்படுத்தலில் 5வது இடத்திற்கும், உள்ளூர் தரப்படுத்தலில் 13வது இடத்திற்கும் நாம் முன்னேறியுள்ளோம். மருத்துவப் பாடசாலை இல்லாத இளம் நிறுவனமாக நாம் காணப்பட்டாலும், மருத்துவ பாடசாலைகளைக் கொண்ட பழைய நிறுவனங்களுடன் போட்டியாக நிற்பது உண்மையில் சாதனைதான். எமது நிறுவனத்தின் குறிக்கோளுடன் இணைந்ததாகவுள்ள அர்ப்பணிப்பான குழுவுடன் எதிர்காலத்தில் ஏனைய தரப்படுத்தல் தளங்களிலும் முன்னேற முடியும். இந்த தரவரிசைகளின் முடிவுகள் SLIIT ஐ கடினமாக உழைக்க தூண்டுவதுடன், சமுதாயத்திற்கு சிறந்து விளங்குவதற்கும் சேவை செய்வதற்கும் வழி வகித்து வாழ்க்கையை வளமாக்குகிறது” என்றார்.

AD (Alper–Doger) விஞ்ஞான குறியீட்டில் வெளியிடப்பட்ட 2022 மேற்கோள் தரவரிசையில் SLIIT இன் தரப்படுத்தல் குறிப்பிட்டுக் கூறக்கூடியதாகும். இந்த தரவரிசைகளின் அடிப்படையில், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையில் மொத்த மேற்கோள்களின் அடிப்படையில் SLIIT 7வது இடத்தில் உள்ளது. மேலும், H-Index இல் (Google Scholar) SLIIT 8வது இடத்தைப் பெற்றுள்ளது, அதன் ஆராய்ச்சியாளர்கள் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது அதிக மேற்கோள்களைப் பெற்றுள்ளனர். 

(அட்டவணையைப் பார்க்கவும்)

இலங்கைப் பல்கலைக்கழகங்களின் AD (Alper–Doger) விஞ்ஞான குறியீட்டு தரப்படுத்தல்

தரவரிசையில் SLIIT இன் முன்னேற்றமானது, தரமான ஆராய்ச்சி மூலம் புதிய அறிவை உருவாக்குதல், சமூகப் பிரச்சினைகளுக்கு புதுமையான தீர்வுகளைக் கண்டறிதல் மற்றும் 21ஆம் நூற்றாண்டிற்குப் பொருத்தமான நவீன பண்புகளுடன் கூடிய மாணவர்களை மையமாகக் கொண்ட கற்றல் சூழலில் மாணவர்களுக்குப் போதிய கற்றல் வாய்ப்புகளை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.


Share with your friend