Sri Lanka Food Processors Association (இலங்கை உணவு பதப்படுத்துநர்கள் சங்கம் – SLFPA) மற்றும் Lanka Exhibition and Conference Services (இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் – LECS) இணைந்து நடத்திய 22ஆவது Profood Propack & Agbiz கண்காட்சி, கொழும்பிலுள்ள BMICH இல் வெற்றிகரமாக இடம்பெற்று நிறைவடைந்தது.



இலங்கையின் உணவுத் துறையில் பதப்படுத்தப்பட்ட உணவு, பானங்கள், பொதியிடல் மற்றும் விவசாயம் தொடர்பான முக்கிய அறிவுக் களமாக அறியப்படும் இக்கண்காட்சியானது, 35,000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்ததோடு, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) நிறுவனங்களுக்கு தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், புதிய சந்தைகளில் நுழைவதற்கும், மூலோபாய இணைப்புகளை ஏற்படுத்தவும், கூட்டாண்மைககளை ஏற்படுத்தவுமான ஒரு சிறந்த தளத்தை வழங்கியது.
இந்நிகழ்வின் தொடக்க விழாவில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்கே பங்கேற்று, அரசாங்கத்தின் பாராட்டை இங்கு வலியுறுத்தினார். இந்நிகழ்வு கைத்தொழில் அமைச்சு, தேசிய விவசாய வணிக சபை மற்றும் இலங்கை உணவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IFSTSL) ஆகியன இக்கண்காட்சிக்கு தமது ஆதரவை வழங்கியிருந்தன.
இந்த ஆண்டின் நிகழ்வு தொழில்துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகியோரை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்து, உலகளாவிய உணவு மற்றும் பானத் தொழில்துறையை ஆக்கிரமித்துள்ள சமீபத்திய போக்குகள், தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கங்களை காட்சிப்படுத்தியது. சீனா, ஜேர்மனி, இந்தியா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து கண்காட்சியாளர்கள் மற்றும் குழுக்கள் இதில் பங்கேற்றதன் மூலம், இக்கண்காட்சியானது உண்மையிலேயே ஒரு சர்வதேச தளம் என்பதை உறுதிப்படுத்தின. தயாரிப்புகளின் அறிமுகங்கள், பயனுள்ள கருத்தரங்குகள் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஆகியன இந்நிகழ்வின் சிறப்பம்சங்களாக அமைந்தன.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Knowledge Hub பிரிவானது, இம்முறை மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு, நுகர்வோர் உதவிப் பிரிவு (Consumer Assistance Desk) இணைக்கப்பட்டு, 1,000 இற்கும் மேற்பட்ட வர்த்தகநாமங்களுக்கிடையில் வாய்ப்புகளை அடையாளம் காணும் வகையிலான வழிகாட்டல்களுடன், புதிய தொழில்முயற்சியாளர்களுக்கு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் முக்கிய இணைப்பு புள்ளியாக இருந்தது. அது மாத்திரமன்றி, அதிகளவிலான காட்சிக் கூடங்கள் கண்காட்சிக்கு மேலும் பெறுமதியைச் சேர்த்தன. அதிக காட்சிக் கூடங்களைப் பெறுவதிலும், அனுசரணை வாய்ப்புகளைப் பெறுவதிலும் பெருமளவான கண்காட்சியாளர்கள் ஆர்வம் காட்டியிருந்தனர். புத்தாக்கமான தயாரிப்புகள் தொடர்பான அனுபவத்தை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பார்வையாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Profood Propack & Agbiz கண்காட்சியானது, 25 ஆண்டுகளுக்கும் மேலாக SLFPA இன் முக்கிய தளமாக இருந்து வந்துள்ளதன் மூலம், இலங்கையின் உணவுத் துறையை முன்னேற்றவும், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும் உதவி வருகிறது. அதிகரித்த கேள்வியையும் சாதகமான பின்னூட்டல்களையும் கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டுக்கான கண்காட்சியை மேலும் விரிவாக்கும் திட்டத்தை ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் கண்காட்சியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அதிக வாய்ப்புகள் உருவாகும். இந்த வெற்றியானது, உணவு மற்றும் பானத் துறையின் புத்தாக்க கண்டுபிடிப்பு, வணிகம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. சாதனை எண்ணிக்கையிலான பார்வையாளர் வருகையுடனும் வலுவான வணிக பெறுபேறுகளுடனும் நிறைவடைந்த இந்த நிகழ்வு, இப்பிராந்தியத்தின் மிகச் செல்வாக்கு மிக்க தளமாக தனது நிலையை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்தியுள்ளது.
இக்கண்காட்சியானது மூன்று மட்டத்திலான அனுசரணையாளர்களைக் கொண்டிருந்தது. Maliban Biscuit Manufactories (Pvt) Ltd, Cargills Ceylon PLC, Pakona Engineers (India) Pvt. Ltd ஆகியன பிளாட்டினம் அனுசரணையாளர்களாகவும், கோல்ட் அனுசரணையாளர்களாக Diamond Best Food (Pvt) Ltd, Aussee Oats Milling (Pvt) Ltd, MULTIVAC LARON India (Pvt) Ltd சில்வர் அனுசரணையாளர்களாக Goma Engineering (Pvt) Ltd, FPT Food Process Technology Co. Ltd, CMC Engineering Export GmbH, CBL Convenience Foods Lanka PLC, Country Style Foods (Pvt) Ltd, Rancrisp Marketing (Pvt) Ltd, Nelna Farm (Pvt) Ltd, Alli Company (Pvt) Ltd, Maliban Milk Products (Pvt) Ltd, Maliban Dairy & Agri Products (Pvt) Ltd, Freelan Enterprises, FMJ Plastics (Pvt) Ltd, Akhtari Trades (Pvt) Ltd, Nikini Automation (Pvt) Ltd, Diana Trading Co. (Pvt) Ltd ஆகியனவும் விளங்கின. இது இந்நிகழ்விற்கான வலுவான தொழில்துறை ஆதரவினை வெளிப்படுத்தியது.