இலங்கையில் மிகவும் புனிதமாகப் போற்றப்படுகின்ற கலாச்சார திருவிழாக்களில் ஒன்றாக, கண்டியில் இடம்பெறும் எசல பெரஹரா உற்சவத்தைக் கொண்டாடும் முகமாக, பாரம்பரியம், சமூகம் மற்றும் இணைப்பு ஆகிய சேவைகளை வழங்க, ஹட்ச் நிறுவனம் மீண்டும் ஒரு முறை பெருமையுடன் முன்வந்துள்ளது. ஜுலை 30 அன்று ஆரம்பித்து, பெரஹரா இடம்பெறும் காலம் முழுவதும், இந்த புனிதமான கலாச்சார உற்சவத்தை அனுபவிப்பதற்காக வருகை தருகின்ற பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவ, சமூகத்தை நோக்காகக் கொண்ட தொடர் முயற்சிகளை ஹட்ச் முன்னெடுக்கின்றது.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சேவை மீதான தனது அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, பெரஹரா இடம்பெறும் காலப்பகுதியில் இரு முக்கியமான முயற்சிகளை ஹட்ச் அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் முதலாவதாக, பெருந்திரளான கூட்டத்தின் மத்தியில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் மன நிம்மதியை உறுதி செய்யும் நோக்குடன் சிறுவர்கள் மற்றும் வளர்ந்தவர்களுக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட, கை மணிக்கட்டில் அணியும் பட்டிகளை அது விநியோகித்துள்ளது. இந்த கை மணிக்கட்டில் அணியும் பட்டிகள் ஒவ்வொன்றும் பிரத்தியேக ஹட்ச் துரித சேவை இலக்கம் ஒன்றுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், அது பொலிஸ் அவசர கால சேவைகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டு, கூட்டத்தின் மத்தியில் தொலைந்து போன நபர்களை தேடிக் கண்டு பிடிப்பதற்கு அல்லது இன்னல் சூழ்நிலைகளின் போது தேவையான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்பதற்கு நம்பிக்கையான வழிமுறையை வழங்குகின்றது. இந்த கை மணிக்கட்டில் அணியும் பட்டிகளை ஹட்ச் வர்த்தகநாம சாவடியிலும், பெரஹரா செல்லும் வழியிலுள்ள உத்தியோகபூர்வ பொலிஸ் பரிசோதனை மையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
இரண்டாவதாக, அணுகல் மற்றும் இணைப்பு வசதியை மையமாகக் கொண்ட முயற்சி அமைந்துள்ளது. பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடுகின்ற கலாச்சார நிகழ்வுகளின் போது இணைப்பில் இருப்பதன் முக்கியத்துவதை இனங்கண்டு, பொதுமக்களின் நன்மைக்காக மொபைல் தொலைபேசிகளை இலவசமாக சார்ஜ் செய்யும் வசதிகளைக் கொண்ட, பிரத்தியேக வர்த்தகநாம சாவடியை ஹட்ச் அமைத்துள்ளது. பாதுகாப்புக்காக கை மணிக்கட்டில் அணியும் பட்டிகளின் முக்கியமான விநியோக மையமாகவும் இச்சாவடி தொழிற்படுவதுடன், நிகழ்வுக்கு வருகின்றவர்கள் உதவியை அல்லது தகவல் விபரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியையும் வழங்குகின்றது. சமூகத்தில் நம்பிக்கையுடனான இருப்பினைப் பேணுவதில் தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பை ஹட்ச் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஹட்ச் நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்தி ஹசன் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “எசல பெரஹரா நிகழ்வில் எமது பங்களிப்பானது, இலங்கையின் கலாச்சார கட்டமைப்பின் மீது ஆழமாக வேரூன்றியுள்ள எமது மரியாதையின் பிரதிபலிப்பாகும். ஒரு தொலைதொடர்பாடல் சேவை வழங்குனர் என்ற வகையில், மக்களுக்கு இணைப்பு வசதிகளை வழங்குவது மாத்திரமன்றி, நாம் யார் என்பதை வரையறை செய்கின்ற சமூகங்கள் மற்றும் பாரம்பரியங்களுக்கு உதவ வேண்டியது எமது பொறுப்பென நாம் நம்புகின்றோம். இந்த முயற்சிகள் மூலமாக, இப்புனித உற்சவத்தில் பங்குபற்றும் அனைவரும் ஆன்மீக மற்றும் நடைமுறை அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதை மேம்படச் செய்வதே எமது நோக்கம்,” என்று குறிப்பிட்டார்.
அக்கறை, இணைப்பு, மற்றும் கலாச்சார உணர்வு ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலமாக, வெறுமனே தொலைதொடர்பாடல் வலையமைப்பு என்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது, குறிப்பாக தேசிய அளவில் பெருமை அளிக்கின்ற மற்றும் ஆன்மீக ஐக்கியத்தை மேம்படுத்துகின்ற தருணங்களின் போது, இலங்கை மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் உண்மையான கூட்டாளராக இருப்பதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பை ஹட்ச் மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.