Cheer Points தனது வாழ்க்கைமுறை வெகுமதிகள் வரிசையில் வலுவான புதிய அறிமுகமொன்றை உள்ளடக்கியுள்ளது

ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைப் போற்றும் வழிமுறைக்கு மீண்டும் ஒரு தடவை மீள்வரைவிலக்கணம் வகுக்கும் வகையில், நாட்டில் மிகவும் புத்தாக்கம்மிக்க வாழ்க்கைமுறை சலுகைகள் சார்ந்த தளங்களில் ஒன்றாகத் திகழும் SLASH உடன் மிகவும் ஆர்வமூட்டுகின்ற புதிய கூட்டாண்மையொன்றை ஆரம்பித்துள்ளது. மிகவும் வலுவான Cheer Points நம்பிக்கை அங்கத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக, வாடிக்கையாளர்கள் தற்போது ஒரு மாதம் முழுவதும் SLASH க்கான இலவச அணுகல் வசதியை அனுபவித்து, உணவு விருந்து, உடல் ஆரோக்கியம், பிரயாணம், மற்றும் பொழுதுபோக்கு போன்றவற்றில் 1,000 க்கும் மேற்பட்ட பிரத்தியேகமான சலுகைகளைப் பெற்று மகிழும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.
இந்த பிரத்தியேக சலுகையானது 2025 ஜுலை முதல் ஹட்ச் நம்பிக்கை அங்கத்துவ வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெறுவதுடன், மூன்று மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் வகையில் முன்னெடுக்கப்பட்டு, வளர்ச்சி கண்டு வருகின்ற Cheer Points கட்டமைப்பிற்கு இன்னும் கூடுதலான மதிப்பைச் சேர்ப்பிக்கவுள்ளது.
பரந்த வகைப்பட்ட வாழ்க்கைமுறை சலுகைகளை வழங்குவதற்கு பெயர்பெற்றுள்ள டிஜிட்டலை முன்னிலைப்படுத்திய ஒரு தளமான SLASH ஆனது அன்றாட சேமிப்புக்களுடன் வாழ்க்கையின் உண்மையான தருணங்களை வளப்படுத்தும் ஹட்ச் நிறுவனத்தின் இலக்குடன் மிகச் சிறப்பாக ஒன்றியுள்ளது. அறுசுவை உணவுகள் முதல் ஆடம்பர சுற்றுலாக்கள் மற்றும் நவநாகரிக அறிமுகங்கள் வரை மகத்தான சலுகைகளை ஹட்ச் வாடிக்கையாளர்கள் எப்போதும் தவறாது அனுபவிப்பதை இக்கூட்டாண்மை உறுதி செய்கின்றது.
SLASH ன் இணை ஸ்தாபகரான தஸ்னீம் துராபலி அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “எமது நாட்டில் கிடைக்கும் அறுசுவை உணவுகள், சுற்றுலாப் பிரதேசங்கள் மற்றும் நவநாகரிக அறிமுகங்கள் என தமது கையில் உள்ள பணத்தைப் பற்றிக் கவலைப்படாது, மக்கள் அனைவரும் அவற்றை சுதந்திரமாக அனுபவித்து மகிழ்வதற்கு உதவுவதே எப்போதும் SLASH ன் குறிக்கோளாகக் காணப்படுகின்றது. அரைவாசி விலைகள் அல்லது கட்டணங்களில் சிறந்த வாழ்வுக்கான அணுகல் வசதியை வழங்குவதற்காகவே SLASH கட்டமைக்கப்பட்டது. அறுசுவை விருந்து, ஸ்கூபா டைவிங் (சுழியோடல்), அலைச்சறுக்கு அல்லது மிகவும் தேவையாகவுள்ள அலங்காரம் என வங்கியிலுள்ள பணத்தைக் கரைய விடாது உங்களுடைய தேவைகளைக் கொண்ட பட்டியலை நீங்கள் மிக இலகுவாக பூர்த்தி செய்து கொள்ள நாம் வழிவகுக்கிறோம். செலவைக் குறைத்து, வாழ்க்கையை நன்றாக அனுபவிப்போம் என்பதே நாம் பின்பற்றும் கோட்பாடாகும்,” என்று குறிப்பிட்டார்.
ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வர்த்தகநாம ஊக்குவிப்பு, தொடர்பாடல்கள் மற்றும் நம்பிக்கை அங்கத்துவத் திடடத்திற்கான பொது முகாமையாளர் கௌஷலா அமரசேகர அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “எமது Cheer Points குடும்பத்திற்கு SLASH ஐ வரவேற்பது எமக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. எமது வாடிக்கையாளர்கள் தொலைதொடர்பாடலுக்கு அப்பால், தமது வாழ்வுகளுக்கு ஏற்ற மற்றும் தினந்தோறும் மதிப்பைச் சேர்ப்பிக்கின்ற விடயங்களை வழங்கும் அனுபவங்களை நாடுகின்றனர். தற்போது SLASH மூலமாக பல நூற்றுக்கணக்கான வியப்பூட்டும் சலுகைகளை, ஒரு மாதம் முழுவதும் முற்றிலும் இலவசமாக நாம் அவர்களுக்கு வழங்குகின்றோம்,” என்று குறிப்பிட்டார்.
மிக எளிமையான, வெகுமதியளிக்கக்கூடிய, மற்றும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட, வாழ்க்கைமுறையை மையப்படுத்திய நம்பிக்கை அங்கத்துவத் திட்டமொன்றைத் தோற்றுவிப்பதில் ஹட்ச் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை இக்கூட்டாண்மை பிரதிபலிக்கின்றது.
Cheer Points தளமானது ஏற்கனவே Scope Cinemas, Spring & Summer, Pearl Bay, Fitness First உள்ளிட்ட பல முன்னணி நாமங்களுடன் கூட்டாண்மைகளைக் கொண்டுள்ளது. வாழ்க்கைமுறை வரிசையில் திறன்மிக்க, தினந்தோறும் மதிப்பை வழங்கும் வழிமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கச் செய்து, தனது நம்பிக்கை அங்கத்துவத் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தும் நோக்கத்தை ஹட்ச் கொண்டுள்ளதற்கு SLASH ன் அறிமுகம் ஒரு சிறந்த சமிக்ஞையாகக் காணப்படுகின்றது. http://onelink.to/slash என்ற SLASH App மூலமாக வாடிக்கையாளர்கள் மிக இலகுவாக SLASH ல் இணைந்து, கிடைக்கப்பெறுகின்ற சலுகைகளை ஆராய்ந்து, அனுபவிக்க முடியும். Cheer Points மற்றும் வாழ்க்கைமுறை சலுகைகளின் முழுமையான விபரங்களை அறிந்து கொள்ள: https://hutch.lk/cheer-points/