ஹெம்சன்ஸ் இன்டர்நெஷனல் அதன் புதுப்பிக்கப்பட்ட வியாபார சின்னத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த குறிப்பிடத்தக்க மாற்றம் நிறுவனத்தின் முன்னேற்றம், புதிய விடயங்களை கண்டுபிடிப்பதிலான அர்ப்பணிப்பு, நம்பகத்தன்மை மற்றும் சிறப்பாற்றல் என்பவற்றை குறிக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட வியாபார சின்னம் ஹெம்சன்ஸினை எதிர்கால வளர்ச்சி மற்றும் தினந்தோறும் வேகமாக மாறி வரும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து, பயன்படுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் நிறுவனம் எனும் ரீதியிலான ஓர் மூலோபாய மாற்றத்தை பிரதிபலிக்கின்றது.
உயர்தர ஆய்வக உபகரணங்கள் மற்றும் மருத்துவ தீர்வுக்கான உபகரணங்கள் வழங்குவதில் ஹெம்சன்ஸ் 75 வருட கால அனுபவத்துடன் முன்னணி வகித்து வருகின்றது. தமது பல தசாப்த கால வியாபார நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ள உறுதியாக இருந்த தமது முக்கியமான விதிமுறைகளை பேணிக் கொண்டு, சந்தையில் முன்னணி வகிப்பதற்கு ஹெம்சன்ஸ் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பை இப் புதிய வியாபார சின்னம் சிறப்பாக வெளிக்காட்டுகின்றது.
“எங்களின் புதிய வியாபார சின்னம் எமது முன்னோக்கு சிந்தனை அணுகுமுறையின் பிரதிபலிப்பாகும்” என்றார் நிர்வாக இயக்குனர், அமீர் யூசுப்அலி. “எமது தோற்றம் மாற்றமடையும் இத் தருணத்தில் எமது தரம், நம்பகத்தன்மை, மற்றும் சிறப்பான சேவை என்பவற்றுக்கான எமது அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது. இம் மாற்றம் நாம் முன்னேற்றத்தை ஏற்று, எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை முன்னைய நிலையை விட மிகவும் திறம்பட பூர்த்தி செய்வதனை குறிக்கின்றது.”
“இத் தொழிலில் எமது முன்னிலையை தக்க வைத்துக் கொள்வதற்கு எங்கள் குழு மேற்கொண்ட அபாரமான பணிக்கு இந்த மாற்றம் ஒரு சான்றாகும்”, என்கிறார் ஜே. முத்துராஜா, நிதி மேலாளர். புதிய தொழில் தரநிலைகளை அமைப்பதிலும், தொடர்ச்சியாக நிலையான, உயர் தாக்கத்தை கொண்ட தீர்வுகளை வழங்குவதற்காக தொடர்ந்து திட்டங்களை மேம்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்துகிறோம்.”
தாக்கம் மற்றும் எதிர்கால திட்டங்கள்:
இப் புதிய வியாபார சின்னம் வெறுமனே தோற்றத்திலான மாற்றத்தை விடவும் மேலானதாகும். மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளும் அனுபவத்தை மேலும் விருத்தி செய்தல், அதி நவீன கண்டுபிடிப்புக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் பொறுப்பு சார்ந்த விடயங்கள் ஆகியன தொடர்பிலான ஹெம்சன்ஸின் மூலோபாய அர்ப்பணிப்பை இப் புதிய வியாபார சின்னம் குறித்துக் காட்டுகின்றது. தற்காலத்திற்கு பொருந்தக் கூடிய விதத்திலான புதிய வியாபார சின்னத்துடன் ஹெம்சன்ஸ் உலகளாவிய போக்குகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டு, ஏற்புடைய, பயனுள்ள தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதனை நோக்காக கொண்டுள்ளது.
ஹெம்சன்ஸ் இன்டர்நெஷனல் பற்றி: 75 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட ஹெம்சன்ஸ் இன்டர்நெஷனல் ஆய்வக உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நுகர்வுப் பொருட்கள் ஆகியவற்றை சந்தைக்கு விநியோகிப்பதில் நம்பிக்கை, தரம் மற்றும் புதிய அணுகுமுறைகளை பின்பற்றுதலின் ஊடாக வாடிக்கையாளர்களின் மத்தியில் ஓர் நல்லெண்ணத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது. இவ்வணிகத் துறையில் ஓர் முன்னணி நிறுவனமாக ஹெம்சன்ஸ் வேகமாக வளர்ந்து வரும் சந்தையின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் தொடர்ச்சியாக பல சிறப்பான செயற்படல் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கான துறைசார் தரநிலைகளை உருவாக்கி வருகின்றது.