ஹேலீஸ் நிறுவனம், பிரத்தியேகமாக OMODA & JAECOO EV மற்றும் Hybrid வாகனங்களுடன் ‘போக்குவரத்து’ துறையில் காலடியெடுத்து வைத்துள்ளது

Share with your friend

Hayleys Fentons நிறுவனத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக முயற்சியான Hayleys Mobility, மின்சாரத்தால் இயங்கும் மற்றும் ஹைபிரிட் வாகன சந்தையில் உத்தியோகபூர்வமாக காலடியெடுத்து வைத்துள்ளதுடன், Chery Automobile Co., Limited ன் உயர் ரக NEV வர்த்தகநாமமான OMODA & JAECOO Automobile Co., Ltd உடன் பிரத்தியேக விநியோக கூட்டாண்மையொன்றையும் ஏற்படுத்தியுள்ளது.         

புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி: இடமிருந்து வலப்புறமாக: ஹே ஸெங், சிங்கப்பூருக்கான பணிப்பாளர், OMODA & JAECOO Automobile Co. Ltd; வாங் ஸோங்டிங், இலங்கைக்கான பணிப்பாளர், OMODA & JAECOO Automobile Co. Ltd; சென் சுங்கிங், துணைத் தலைவர், Chery Automobile Co., Limited; ஹசித் பிரேமதிலக, முகாமைத்துவப் பணிப்பாளர், Hayleys Fentons; பமுதித் குணவர்த்தன, பணிப்பாளர்/பிரதம நிதி அதிகாரி, Hayleys Fentons; சுராஜ் சூலாரத்ன, உதவிப் பொது முகாமையாளர் – EV மற்றும் போக்குவரத்துத் தீர்வுகள்; சுரித் டி சில்வா, சிரேஷ்ட மோட்டார்வாகனப் பொறியியலாளர்.  

இந்த உடன்படிக்கையானது இலங்கையில் OMODA மற்றும் JAECOO க்கான முழுமையான வர்த்தக உரிமைகளை Hayleys Mobility க்கு வழங்கியுள்ளது. 22 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவின் பிரயாணிகள் போக்குவரத்து வாகன ஏற்றுமதிகளில் முன்னிலை வகித்து வருகின்ற Chery, சர்வதேச மோட்டார் வாகன வலு மையம் என தனது ஸ்தானத்தை வலுப்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹூவில் அமைந்துள்ள Cheryயின் சர்வதேச தலைமைக் காரியாலயத்தில் இந்த உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக  நிறைவேற்றப்பட்டுள்ளது.        

அமைப்பு, பரிமாணம், மற்றும் உறுதிமொழி ஆகியவற்றை அறிமுகப்படுத்துகின்ற Hayleys Mobility, ஒழுங்குமுறை தெளிவு மற்றும் தொழிற்சாலை சான்று அங்கீகாரம் கொண்ட சேவை ஆகியவற்றுடன் உயர் வகுப்பு EV வாகனங்கள், ஹைபிரிட் வாகனங்கள், மற்றும் பாரம்பரியமான வாகன வடிவங்களை வழங்குகின்றது. இதற்குத் துணையாக, StarCharge உடனான அதன் கூட்டாண்மை, EV வாகனங்களுக்கு மாறிக்கொள்வதில் சார்ஜ் செய்யும் நம்பகமான வசதிகள் இலங்கையில் பாரிய முட்டுக்கட்டையாக காணப்படும் வகையில், அதனைச் சமாளிப்பதற்காக தேசிய அளவில் விரைவாக சார்ஜ் செய்யும் வலையமைப்புக்கான அத்திவாரத்தை இட்டுக்கொள்ள உதவும். இவை ஒன்றிணைந்து, சந்தையில் நீண்ட கால தேவைப்பாடாகக் காணப்படுகின்ற விரிவான போக்குவரத்துக் கட்டமைப்பை வழங்குகின்றன.            

இலங்கையில் மிகச் சிறந்த பெறுபேற்றுத்திறனுடன், முதல் ஸ்தானத்தில் திகழ்ந்து வருகின்ற, பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள பொது நிறுவனமான ஹேலீஸ் நிறுவனம் அடுத்த தலைமுறை போக்குவரத்து தீர்வுகளுக்குள் காலடியெடுத்து வைக்கின்ற இம்முயற்சி அதன் பரிணாம வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றது. நிலைபெறுதகுவியல் சார்ந்த புத்தாக்கம், சூழல் மீது அக்கறை கொண்ட வர்த்தக முயற்சிகள், மற்றும் பொறியியல் மகத்துவம் ஆகியவற்றில் இக்குழுமத்தின் நீண்ட கால தலைமைத்துவத்தை அத்திவாரமாகக் கொண்டு இது கட்டியெழுப்பப்பட்டுள்ளது.      

இவ்வாகன வடிவமைப்புக்களின் முதல் தொகுதியில் OMODA E5, JAECOO J6 மற்றும் JAECOO J7 ஆகியன அடங்கியுள்ளதுடன், நகர, உயர் வகுப்பு மற்றும் கரடுமுரடான இடங்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மின்சாரத்தில் இயங்குகின்ற மற்றும் சார்ஜ் செய்யப்படக்கூடிய ஹைபிரிட் வகைகளின் கீழ் இவை அறிமுகமாகின்றன. EV உட்கட்டமைப்பு வசதிகளில் உலகளாவில் முன்னிலை வகித்து வருகின்ற StarCharge உடனான கூட்டாண்மையின் துணையுடன் நாடளாவியரீதியிலான EV சார்ஜ் செய்யும் ஆதரவும் கிடைக்கின்றது.        

“நாடெங்கிலும் சூரிய எரிசக்தி நடைமுறையைக் கைக்கொள்வதை அனைவர் மத்தியிலும் நாம் முன்னெடுத்து வருவதைப் போலவே, விரிவான, முழுமையான கட்டமைப்பினூடாக, சூழல்நேய போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதிலும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்று Hayleys Fentons நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக அவர்கள் குறிப்பிட்டார். “மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆதரவு கிடைப்பதன் காரணமாக, நுகர்வோர் பலரும் சிதறுண்டு போயுள்ள EV சந்தைக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், எதிர்காலத்திற்கேற்ற வடிவமைப்பு, அறிவார்ந்த தொழில்நுட்பம், மற்றும் நீண்ட கால சேவை உத்தரவாதம் ஆகியவற்றை இடைவிடாது இணைக்கின்ற, ஒருங்கிணைந்த, அடுத்த தலைமுறை போக்குவரத்து தீர்வை நாம் வழங்குகின்றோம். நிலைபேணத்தக்க புத்தாக்கம் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ள ஒரு காலகட்டத்தில், உயர் ரக NEV வர்த்தகநாமத்தை அறிமுகப்படுத்துவதில் முன்னின்று உழைப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.        

இந்த ஒத்துழைப்பு குறித்து, Chery Automobile Co., Limited துணைத் தலைவர் சென் சுங்கிங் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “Hayleys Mobility உடனான எமது ஒத்துழைப்பு, இலங்கையில் எமது மூலோபாய ரீதியான விரிவாக்கத்தைக் குறித்து நிற்கின்றது. மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனை எமக்கு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தி, உலகத் தரம் வாய்ந்த, சிக்கனமான, மற்றும் உலகளாவில் செல்வாக்கு மிக்க தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்துகிறோம்,” என்று குறிப்பிட்டார்.  

“தற்காலத்தில் வாழ்க்கைமுறை மீது குடும்பங்கள் முதலீடுகளை மேற்கொள்கின்றன,” என்று Hayleys Fentons வணிக மேம்பாட்டுப் பணிப்பாளர் றொஷானி தர்மரத்ன அவர்கள் குறிப்பிட்டார் “OMODA மற்றும் JAECOO மூலமாக வலிமைமிக்க, நிலைபேணத்தக்க, மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற அறிவார்ந்த வாகனங்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்கின்றனர். StarCharge மூலமாக, எங்கேயும், எப்போதும், தாம் அவற்றைச் சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு ஏற்படுகின்றது,” என்று குறிப்பிட்டார்.     

நம்பிக்கை, புத்தாக்கம், மற்றும் பொறுப்புணர்வுமிக்க தலைமைத்துவம் ஆகிய பாரம்பரியச் சிறப்பின் பக்கபலத்துடன், உற்பத்தி நிறுவனத்தால் சான்றுபடுத்தப்பட்ட ஆதரவு, ஒழுங்குமுறை வெளிப்படைத்தன்மை மற்றும் ஹேலீஸ் குழுமத்தின் உத்தரவாதம் ஆகியவற்றின் துணையுடன் நம்பகமான, எதிர்காலத்திற்கு ஏற்ற EV வாகனங்களை அனுபவிக்குமாறு இலங்கையிலுள்ள வாகன ஓட்டுனர்களுக்கு Hayleys Mobility அழைப்பு விடுக்கின்றது.       

மேலதிக விபரங்களுக்கு www.omodajaecoo.com என்ற இணையப்பக்கத்தைப் பாருங்கள் அல்லது 0112 222 222 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக Hayleys Mobility அணியைத் தொடர்பு கொள்ளுங்கள்.   


Share with your friend