125 வருட புரட்சிகர முன்னேற்றத்தை இலட்சியத் திட்டங்களுடன் கொண்டாடும் பவர்ஸ் நிறுவனம்

Share with your friend

சுவிஸ் நாட்டின்; மரபுகள், மதிப்புக்களை எமது நாட்டுக்குள்; கொண்டுவந்து, பல்வேறு தொழில் துறைகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்ற நிறுவனம் என்ற பெயரைக் கொண்ட பவர்ஸ்; என அறியப்படும் ஏ . பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடட் நிறுவனம் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக இவ்வருடம் தனது 125 வருட நிறைவைக் கொண்டாடுகிறது. 

1897ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது உர நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், இன்று ஒரு பன்முகப்படுத்தப்பட்ட வணிகக் குழுமமாகப் பரிணமித்துள்ளது. விவசாய வணிகத்தில் மட்டுமல்லாது சுகாதாரதுறை, நுகர்வோர் துறை, எயார் விமான நிறுவன சேவைகள், ஆடை வடிவமைப்பு இயந்திரங்கள் மற்றும் கல்வித்துறை சார் நலத்திட்டங்கள் போன்ற துறைகளில் தனித்துவமான நற்பெயரைக் கொண்டுள்ளது. இதன் சிறப்பான வரலாற்று குறிப்புக்களின் சான்றுப்படி இந்நிறுவனம் விவசாயம், தொழில்துறை மற்றும் தற்போதைய அறிவுசார் சகாப்தத்தையும் உருவாக்கியுள்ளது

சமகாலத்தில் ஏற்படும் சவால்களை தழுவியதாக மாத்திரம் தனது நிலையைத் தக்கவைத்துக் கொள்ளாது, பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவற்றுடன் மக்களை மையமாகக் கொண்டு நிறுவனத்துக்குப் புதிய மாற்றத்தை கொடுத்து முன்னேறியுள்ளது. விசேடமாக சிறுவர்களுக்கிடையேயான  சமூகபொறுப்பு மிக்க நிகழ்ச்சித் திட்டங்களை பவர்ஸ்; தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் தொழில்துறையில் முதலிடத்தில் உள்ளது என்ற நிறுவனத்தின் சாதனை மறைமுகமாகச் சொல்லப்படுகிறது.

உரத்திலிருந்து ஆரம்பித்தமை தொடக்கம் 1901ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது தொழில்துறைக்கான ரயிலை இயக்கியமை, 1919ஆம் ஆண்டு நாட்டின் விவசாயத்தில் முதலாவது உழவு இயந்திரத்தைப் பயன்படுத்தியமை, 1936 இல் முழுமையான இயந்திர மயப்படுத்தப்பட்ட முதலாவது தேயிலைத் தொழிற்சாலையை உருவாக்கியமை, 1946 காலப் பகுதியில் இலங்கையின் மலேரியா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வந்தமை, சுவிஸ் எயார் விமானத்தை இலங்கைக்குக் கொண்டு வந்தமை, இலங்கையின் முதலாவது “பாஸ்மதி” அரிசியை 1975ஆம் ஆண்டு உற்பத்தி செய்தமை, படைப்புழுவை ஒழிக்கவும், கட்டுப்படுத்தவும் 2020ஆம் ஆண்டில் முதலாவது பூச்சிக்கொல்லி மருந்தைப் பதிவுசெய்தமை, விருந்தோம்பல் துறையில் முதல் சுவிஸ் தொழிற்பயிற்சி மாதிரியை கடந்த ஆண்டு உலகின் முதன்மையான விருந்தோம்பல் முகாமைத்துவப் பாடசாலையான Ecole hôtelière de Lausanne உடன் இணைந்து அறிமுகப்படுத்தியமை போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 

ஏ பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொல்ஃப் பிளாஸர் ஆண்டு விழா குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 125 ஆண்டுகளில் பவர்ஸ் நிறுவனத்தை வெற்றியடையச் செய்ததற்காக  ஒவ்வொரு தனிநபரையும் நாம் நினைவுகூறுகின்றோம். குறிப்பாக இந்தத் தேசத்தின் நன்மையை மையமாகக் கொண்டு தொலைநோக்குடன் கூடிய தலைமைத்துவத்தைக் கொண்ட எமது நிறுவனத்தின் நிறுவுனர் அல்ஃபிரட் பவர்;க்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகின்றோம். எமது எல்லைகளை விரிவாக்குவதற்கான சவால்களை சாத்தியமாக்குவதற்கு பொறுப்புக் கூறும் தன்மையை நாம் பலப்படுத்தியுள்ளோம்” என்றார். 

முன்னணியாளர் என்ற ரீதியில் பலமான துறைசார் மற்றும் விஞ்ஞான ரீதியான ஆலோசனைகளை ஒன்றிணைத்து பல்வேறு அறிவுப்பகிர்வு மற்றும் தலைமைத்துவப் பண்புகளை கற்பிக்கும் முயற்சிகளிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற இரண்டு சேதன உர ஆராய்ச்சி நிறுவனங்களுடன் பவர்ஸ் ஒப்பந்தம் செய்து அதனை நடைமுறைப்படுத்தியிருந்தது. குறிப்பாக உர சவாலை எவ்வாறு சிறந்த முறையில் கையாள்வது என்பது குறித்த விரிவான ஆய்வுப் பயணத்திற்காக இவற்றின் முக்கிய நிபுணர்கள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். நாடு முழுவதிலும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் குறிப்பாக கல்விசார் மற்றும் தொழில்துறை சார்ந்த தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை ஏற்படுத்தி நிபுணர்களுடன் ஆரம்ப கட்ட ஆராய்ச்சிகள் குறித்து பவர்ஸ் மேலும் ஆராய்ந்து வருகிறது.

நிறுவனத்தின் ஆரம்ப செயற்பாடான விவசாய வணிகத்தில் வலுவாகக் காணப்படுவதுடன், தெற்காசிய பிராந்தியத்தில் மிகவும் மேம்பட்ட உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய உரத் தொழிற்சாலைகளில் ஒன்றாகவும் இது விளங்குகிறது. வர்த்தகப் பங்காளர்கள் உட்பட அதன் முழு விநியோகச் சங்கிலியினதும் செயற்திறனை அதிகரிக்க மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த அதன் நுகர்வோர் பிரிவுக்கான டிஜிட்டல் முறையில் அமைந்த பரிமாற்ற முயற்சிகளும் நடந்துவருகின்றன. நிறுவனத்தின் வளர்ந்து வரும் உறவுகள் மற்றும் நீண்டகால பங்காளிகளின் நம்பிக்கை, நம்பகத்தன்மை, தரம் மற்றும் புதுமை ஆகியவை பவர்ஸ்; இன் முக்கிய தூண்களுக்கு சான்றாக அமைகின்றன.

இதன் சுகாதாரப் பிரிவு கடந்த வருடங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண்பித்துள்ளதுடன், மருந்து, சத்திரசிகிச்சை மற்றும் நோயறிதல், ஊட்டச்சத்து மருந்துகள், அழகுசாதன பொருட்கள், மூலிகை மற்றும் ஆயுர்வேதத்தில் உலகின் முதல் 10 முன்னணி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் இரண்டாவது பாரிய மருந்து இறக்குமதியாளராக இன்று பரிணமித்துள்ளது. உலகத்தரம் வாய்ந்த செயல்திறனுக்கு சான்றாக இது அமைந்துள்ளது. முதலாவது சுகாதார விநியோகஸ்தர் இன்றுவரை நிறுவனத்துடன் இருப்பதையிட்டு பவர்ஸ்; மகிழ்ச்சியடைகிறது.

நிலைப்புத் தன்மையே இதன் முன்னுரிமையாகக் காணப்படுகிறது. இதன் பயணத்தில் தூண்டப்பட்ட எண்ணற்ற  கண்டுபிடிப்புக்கள் மட்டுமல்ல மக்களிடையே விதைக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் மதிப்புகளிலும் இது தங்கியுள்ளது. 17 நிலையான அபிவிருத்தி இலக்குகளைத் (SDGs) தொடர்வதற்கு மேலதிகமாக மனித உரிமைகள், தொழிலாளர், சுற்றுச்சூழல் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகிய துறைகளில் ஐக்கிய நாடுகள் உலக உடன்படிக்கை (UNGC) முயற்சிக்கு பவர்ஸ் கடந்த வருட ஆரம்பத்தில் உறுதி பூண்டுள்ளது. 


Share with your friend