ஆசியாவின் சிறந்த பணியிடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள Airtel Lanka அண்மையில் Colombo Leadership Academyஇனால் நடத்தப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த முகாமையாளர் விருது வழங்கும் நிகழ்வில் நிறுவனத்தின் மூன்று தலைவர்கள் அண்மையில் கௌரவிக்கப்பட்டனர்.
திறமையான நிர்வாகத்தை ஊக்குவிப்பதில் குறிப்பாக கவனம் செலுத்தும் ‘Lead Right’ போன்ற முன்னணி திட்டங்கள் மூலம், நிறுவனத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள முகாமையாளர்கள் திறம்பட்ட மற்றும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய தலைவர்களாக திகழ்வதே எயார்டெல் லங்காவின் நோக்கமாகும். எயார்டெல் உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் எயார்டெலின் குளோபல் லீடர்ஷிப் அகாடமி போன்ற பங்குதாரர்களுடன் இணைந்து இதுபோன்ற திட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறது.
இந்தச் சாதனை குறித்து எயார்டெல் லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷீஷ் சந்திரா கருத்துத் தெரிவிக்கையில், “எங்கள் முகாமையாளர்கள் மற்றும் சிரேஷ்ட ஊழியர்களுக்கு இடையிலான தலைமைத்துவம் மற்றும் மூலோபாயத் திறன்கள் எதிர்கால பிரச்சினைகள், தேவைகள் மற்றும் சிறப்பான சேவையை வழங்கும் எங்களது நிறுவன செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். சிறந்த அறிவு மற்றும் பன்முகத் திறன் கொண்ட தலைவர்களை உருவாக்குவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த சாதனைகள் நிச்சயமாக ஒரு திருப்புமுனையைக் குறிக்கும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது எயார்டெல் லங்காவின் நிதிப் பிரிவில், வர்த்தக திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரதானி, எரந்த சிரிவர்தன மற்றும் தொடர்பு அனுபவம் (Contact Experience) பிரதானி, ஃபவாஸ் நிஸாம்டீன், “நிறுவன ரீதியான தொலைநோக்கு தொடர்பாக செயல்படுதல்” என்ற பிரிவில் விருதினை வென்றதுடன், Channel Accounting பிரிவில் சிரேஷ்ட முகாமையாளர் தமிந்த அகலங்க, “செயற்பாட்டு முடிவுகள் மற்றும் நடைமுறைப்படுத்தும் திறன்” பிரிவில் விருதினை வென்றுள்ளார்.
வெற்றிகரமான இரண்டு சுற்று மதிப்பீட்டிற்குப் பிறகு Airtel Lankaவின் வெற்றி கிடைத்துள்ளது. முதல் சுற்றில், ஒவ்வொரு உறுப்பினரின் பணியிடத்திலும் சக பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டாவது சுற்றில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் CLAஇல் நிபுணர்களுடன் நேர்காணலுக்குத் தோற்றினர்.
இவர்கள் மூவரின் தலைமைத்துவ பாணிகளான, குழு முகாமைத்துவ திறன்கள், உத்திகளை செயல்படுத்துதல், தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தியது மற்றும் பல துறைகளில் சிறந்த திறன்களை வெளிப்படுத்தியுள்ளமை போன்றவை ஆகும்.
இந்த சாதனை குறித்து திரு. எரந்த சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “எயார்டெல் லங்காவில் பணிபுரிவதன் முக்கியத்துவங்களில் ஒன்று, மிகத் துல்லியமான கடமைகளை வழங்குவதுடன் தொடர்புடைய பயனுள்ள மூலோபாயமாகும். அதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என தெரிவித்தார்.
“எந்தவொரு வணிகமும் அதன் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் நிர்வாகக் குழுவின் ஆதரவின்றி சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க முடியாது மற்றும் வாடிக்கையாளர் திருப்தியின் மிக உயர்ந்த மட்டத்தை வழங்க நிறுவனத்திற்குள் அதே சேவை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் தனித்துவமான குழு.” என தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ஃபவாஸ் நிசாம்தீன் கூறினார்.
இது குறித்து துமிந்த அகலங்க கருத்து தெரிவிக்கையில், “காலப்போக்கில் நல்ல முறையில் பேணப்படும் உறவு அனைத்து தரப்பினருக்கும் நன்மை பயக்கும் என நான் எப்போதும் நம்புகின்றேன். எனது தலைமைத்துவத்தை அங்கீகரித்து, ஆதரவளித்தமைக்காக எயார்டெல் லங்கா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், இது நிறுவனத்தில் நீண்டகால வெற்றியை அடைய உதவியது.” என தெரிவித்தார்.
சிறந்த முகாமையாளர் விருதுகள் என்பது தொழில்துறையில் சிறந்த முகாமையாளர்களைக் கொண்ட நிறுவனங்களை அங்கீகரித்து, மதிப்பீடு செய்யும் ஒரு விருது வழங்கும் நிகழ்வாகும். இந்த ‘சிறந்த முகாமையாளர்களைக் கொண்ட நிறுவனம்’ எனும் விருது, உயர் செயல்திறன் கலாச்சாரத்தின் மூலம் அடுத்த தலைமுறையிலுள்ள தலைவர்களை உருவாக்கும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் உத்திகளை அங்கீகரிக்கிறது. இந்த சிறந்த முகாமையாளர் விருது வழங்கும் நிகழ்வின் நோக்கமானது, தலைமைத்துவ திறன்கள் மற்றும் முகாமைத்துவ பாணி, நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றின் மூலம் இலங்கையில் சிறந்த முகாமையாளர்களை உருவாக்கும் தனித்துவமான நிறுவன சூழல் மற்றும் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதும் வரையறுப்பதும் ஆகும்.