கிரிகெட் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறும் ஒரு மாத காலமும் புதிய மூலம் விறுவிறுப்பான வேடிக்கையான விளையாட்டுக்கள் மற்றும் பரிசுகளை இரண்டாவது வருடமும் அங்குரார்ப்பணம் செய்யும் Rakuten Viber
Rakuten Viber கடந்த இரண்டு வருடங்களாக கிரிக்கெட் துறைக்குத் தொடர்ந்தும் ஆதரவு நல்கி வருகிறது. இரசிகர்களின் வேடிக்கையை மேலும் அதிகப்படுத்தியிருப்பதுடன், Cricket Fiesta இனைத் தற்பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சியாக்கத் தயாராகியுள்ளது. இது தொடர்பான பிரசாரத்தில், ஊடாட்டம் நிறைந்த விளையாட்டுக்களின் பட்டியலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Cricket Superbot ஐ செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய Superbot ஆனது Cricket Vibes Channel இன் ஒரு அங்கமாக உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக விளையாட்டுக்கள், போட்டிகள் குறித்த நேரடியான புதுப்பித்தல்கள், போட்டிக்கான கணிப்புக்கள் ஆகியவற்றில் இரசிகர்கள் இணைந்துகொள்ள முடியும்.
இந்தப் போட்டிகள் எவ்வாறு முன்னோக்கிச் செல்லும் போன்ற போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்கக் கூடிய போட்டியும் இதில் ஒன்றாக அமையும். இலங்கை, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகியவற்றிலிருந்து அதிக புள்ளிகளைப் பெற்ற முதல் மூன்று இரசிகர்கள் சுற்றுப்போட்டியின் இறுதியில் Viber இடமிருந்து உற்சாகமான வெகுமதிகளை வெற்றிபெற முடியும்.
பயனர்கள் இந்த வேடிக்கையில் இணைந்து நாளாந்தம் வெற்றிகளைப் பெற்றுக் கொள்வதுடன் Cricket Vibes Channel இடமிருந்து வவுச்சர்களைக் கழித்துக்கொள்ள முடியும். பயனர்கள் மெய்நிகர் கிரிக்கெட் போட்டிகளை விளையாட முடியும் என்பதுடன், தமது வீடுகளிலிருந்துகொண்டே ஓட்டங்களைக் குவிக்க முடியும். உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் முழக் காலத்திலும் அவர்கள் தங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர்களைப் போல் உணர முடியும் என்பதுடன், Cricket Superbot வழியாக ஒரு பந்தை அடித்து ஒரு உண்மையான போட்டியில் விளையாடுவதைப் போன்று செயற்பட முடியும்.
“எங்களின் முதல் Cricket Fiesta நாங்கள் பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இரண்டாவது ஆண்டில் இரட்டிப்பாக்குவது என்ற எளிதான முடிவை எடுக்க முடிந்துள்ளது. கடந்த ஆண்டு நிகழ்வுகள் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை வழங்கியிருந்ததுடன், Cricket Superbot மூலம் இந்த ஆண்டு விடயங்களைப் பெரிதாகவும் விடயங்களை பெரிதாக்கவும் சிறப்பாகவும் செய்ய முடிவு செய்துள்ளோம். இது எமது நட்சத்திர வரிசை நிகழ்வாக என்பது சிறப்பானதாக அமைந்திருப்பதுடன், இந்த ஆண்டும், எதிர்வரும் ஆண்டுகளிலும் Cricket Channel மகிழ்ச்சிகரமான போட்டிகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் என நம்புகிறோம்” என Rakuten Viber இன் Rakuten Viber இற்கான சிரேஷ்ட பணிப்பாளர் வேவிட் ட்சே தெரிவித்தார்.
உலகக் கிண்ணப்போட்டிகள் குறித்த பிரசாரம் தொடர்பில் லசித் மாலிங்க தனது மகிழ்சியைப் பகிர்ந்துகொள்கையில், “குறுஞ்செய்திகளுக்கான செயலியில் இதுபோன்ற அனுபவத்தை நான் இதற்கு முன்னர் பெற்றிருக்கவில்லை. பயன்படுத்துபவர்களின் ஆர்வம் மற்றும் அவர்கள் தொடர்பில் எந்தளவு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. அடுத்த மாதத்தில் இடம்பெறவுள்ள போட்டிகள் மற்றும் செயற்பாடுகளை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள் என நான் நம்புகிறேன்” என்றார்.
Viber இன் கிரிக்கெட் உலகக் கோப்பை 2022 பிரச்சாரத்தில் சேர்க்கப்பட்ட ஏனைய அம்சங்களாக Lenses, sticker packs, Cricket Fixtures என்பன காணப்படுகின்றன. ரசிகர்கள் இப்போது Cricket Superbot அனுபவிக்கலாம் மற்றும் இந்த ஆண்டு போட்டிகள் முழவதையும் இதன் மூலம் தொடரலாம்.